WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.114
Date uploaded in London – — 22 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு வரி சுபாஷிதங்கள்
ச.நாகராஜன்
அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:
1. தீரோ பூத்வாத்ராவய சத்ரூன் |
தீரனாக இரு; எதிரிகளை ஒழி!
2. ந கச்சினாபராத்யதி |
எந்த ஒருவரும் தவறு செய்யாமல் இல்லை.
3. ந காசஸ்ய க்ருதே ஜாது யுக்தா முக்தாமணே: க்ஷதி: |
முத்தை எடுப்பதற்காக சிப்பிக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.
4. ந த்ருஷ்ணாயா பரோ வ்யாதி: \
ஆசையை விட பெரிய வியாதி கிடையாது.
5. ந நியமம் பிந்த்யாத் |
விதிகளை ஒருவன் உதாசீனப்படுத்தக்கூடாது.
6. ந பவதி புனருக்தம் பாஷிதம் சஜ்ஜனானாம் |
சஜ்ஜனங்களின் (தூய பெரியோரின்) வார்த்தைகளில் திருப்பிச்
சொல்லுதல் இருக்காது.
7. ந ரத்னமன்விஷ்யதி ம்ருக்யதே ஹி தத் |
ரத்னம் ஒருவரைத் தேடி வராது; அதைத் தேடி நாம் தான் போக
வேண்டும்.
8. ந லோபாததிகோ தோஷோ எ தானாததிகோ குண: |
லோபத்தை விட அதிக தோஷம் இல்லை; தானத்தை விட அதிக
புண்யம் இல்லை.
9. ந சித்தாவௌத்சுக்யம் கச்சேத், நாசித்தௌ தைன்யம் |
லாபம் அடையும் போது மிகுந்த ஆவலுடனும் இருக்கக் கூடாது,
நஷ்டம் அடையும் போது கவலைப்படவும் கூடாது.
10. ந வைரமுத்பாதயேத்ஸ்வஸ்மாத் |
ஒருவன் தானாகவே ஒரு எதிரியை உருவாக்கிக்கொள்ளக்
கூடாது.
11. ந ஸ்வல்பஸ்ய க்ருதே பூரி நாஷயேன்மதிமாந்நர: |
புத்திசாலியான ஒருவன் குறைந்த லாபத்திற்காக அதிகம் நஷ்டப்படக் கூடாது.
12. நஹி கஸ்தூரிகாமோத் சபதேன விபாவ்யதே |
இசையின் மணம் (பெருமை) வலிந்து நிறுவப்படக் கூடாது.
13. நாஹங்காராத்பர: சத்ரு: |
அகந்தையை விடப் பெரிய எதிரி இல்லை.
14. நஹ்ய மூலா ப்ரசித்யதி |
அஸ்திவாரம் இல்லாமல் ஒருவன் புகழை அடைய முடியாது.
15. நாந்ருத்பாதகம் பரம் |
கபடை விட வேறு ஒரு பாவம் கிடையாது.
16. நிர்வாணதீபே கிம் தைல தானம்?
அணைந்து விட்ட விளக்கிற்கு எண்ணெய் இடுவது ஏன்?
17. நீசா: கலஹமிச்சந்தி |
துஷ்டர்கள் எப்போதும் கலகத்தையே விரும்புவார்கள்.
18. நீசைர்கச்சத்யுபரி ச தஷா சக்ரநேமிக்ரமேண |
சக்கரம் சுழல்வது போல காலமும் அதிர்ஷ்டமும் மேலும்
கீழுமாகச் சுற்றி வரும்!
19. பண்டிதோ ஹி வரம் சத்ருர்ன மூர்கோ ஹிதகாரக: |
இதத்தைத் தரும் மூர்க்கனை விட எதிரியாக இருந்தாலும்
பண்டிதனே மேல்!
20. புத்ராதபி பயம் யத்ர தத்ர சௌக்யம் ஹி துர்லபம் |
சௌக்யம் எங்கு இல்லையோ அங்கு மகனைக் கண்டால் கூட
ஒருவன் பயப்படுவான்.
21. ப்ரயோஜனமனுத்திஷ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே |
ப்ரயோஜனம் இல்லாமல் ஒரு மந்தமானவன்கூட செயலில்
இறங்கமாட்டான்.
22. புபுக்ஷிதம் ந ப்ரதிபாதி கிஞ்சித் |
பசியோடிருப்பவனுக்கு எதுவும் புரியாது.
23. ரஸமூலா ஹி வ்யாதய: \
உணவின் ருசி மூலமாகவே வியாதிகள் உருவாகின்றன.
24. விக்ரீதே கரிணி கிமங்குசே விவாத: |
யானையே விற்கப்பட்டு விட்டபோது அங்குசத்தைப் பற்றி என்ன
விவாதம்?
25. சுஷ்கவைரம் விவாதஸ்ச ந குர்யாத்கேநசித்சஹ |
எந்த வித காரணமும் இன்றி யாருடனும் ஒருவன் பகையைக்
கொள்ளக் கூடாது.
***