கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்;  முன்னேறுங்கள்! – 1(Post No.13,125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.125

Date uploaded in London – — 10 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 27-3-2024 புதன்கிழமை இதழில் பிரசுரமான கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்முன்னேறுங்கள்! – 1

ச.நாகராஜன்

புதுமை கண்ட வல்லுநர்

உயர்ந்த தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலில் தறிகளை இயக்க ஆரம்பித்த ஒருவர் பல லட்சம் கார்களை உலகெங்குமுள்ள நகரங்களில் ஓட வைத்தார் என்றால் சற்று ஆச்சரியமாக இல்லை.

யார் அவர்?

அவர் தான் டொயோடா நிறுவனத்தை நிறுவிய கீச்சிரோ டொயோடா!

இவர் சாதித்தவை ஏராளம்; ஆகவே தான் அடிக்கடி கூறுவார் இதை : “என்னால் இதைச் செய்ய முடியாது என்று கூறுவதற்கு முன்னால், முயற்சி செய்து தான் பாரேன்!”

ஆம், அவர் முயற்சி செய்து பார்த்து ஒவ்வொரு புதுமையாகப் படைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி அறிவது முன்னேறுவதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று.

பிறப்பும் இளமையும்

ஜப்பானில் யமாகுச்சி என்ற நகரில் யோஷிட்சு என்ற சிறிய கிராமத்தில் 1894-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி பிறந்தார் கீச்சிரோ டொயோடா.

தந்தை சகிச்சி டொயோடா வறுமையில் இருந்ததன் காரணமாக தறி வேலையைச் செய்து கொண்டிருந்தார். தன்னால் படிக்க முடியவில்லையே என்று வருந்திய அவர் தனது புதல்வனை நன்கு படிக்க வைக்க உறுதி பூண்டார்.

தாயார் டமி,  ஸஹாரா குழந்தை கீச்சிரோ பிறந்த இரண்டாம் மாதமே குழந்தையையும் கணவனையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அவர் கூறிய காரணம், “ கணவர் சகிச்சி குடும்பத்தை விட தொழிலில் மிக அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்” என்பதே.

குழந்தையை தாத்தாவும் பாட்டியுமே வளர்த்தனர்.

முதலில் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயில ஆரம்பித்த டொயோடா, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்று மெக்கானிகல் எஞ்ஜினியர் ஆனார். படிப்பில் முதன்மையாகவே எப்போதும் விளங்கினார் அவர்.

1921 ஜூலையிலிருந்து 1922 பிப்ரவரி முடிய சான்பிரான்ஸிஸ்கோ, லண்டன் முதலான இடங்களில் நூற்புத் தொழில் பற்றியும் வீவிங் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார். 1922இல் ஜப்பான் திரும்பிய அவர் டிசம்பர் மாதம் ஹடாகோ லிடா என்பவரை மணம் செய்து கொண்டார்.

அந்தக் காலத்தில் வாகனத் தயாரிப்பிற்கு – குறிப்பாக கார்களைத் தயாரிப்பதற்கு – ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த அவர் தனது தந்தையாரிடம் இந்த தறியில் ஈடுபடுவதை மாற்றி கார் தயாரிப்பில் கவனம் செலுத்தலாமே என்று கூறினார்.

தந்தை தந்த ஊக்கம்

அவரது தந்தையாரும் தனது  மகனின் விருப்பத்தை ஆமோதிக்க, 1937இல் டொயோடோ மோட்டார் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.

கார்களைத் தயாரிப்பதில் அவர் ஈடுபட்டார். முதலில் AA என்ற மாடல் காரை அவர் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

கிடுகிடுவென அவரது நிறுவனம் உயர்ந்தது. கார்களின் தேவை உலகெங்கும் அதிகமாகும் என்ற அவரது கணிப்பு சரியானது என்பதை பின்னால் எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குகள் உறுதி செய்தன.ஜப்பானில் உற்பத்தியான வாகனங்களின் எண்ணிக்கை 1955-ல் 70000 என்ற எண்ணிக்கையில் இருந்தது; அது 1980-ல் 114லட்சம் என்ற எண்ணிக்கை அளவு உயர்ந்தது.

1980-ல் ஜப்பானிய உற்பத்தியானது அமெரிக்க உற்பத்தியை விட அதிகமானது!

அதிர்ஷ்டப் பெயர் டொயோடா!

டொயொடோ என்ற பெயரை அவர் ஜப்பானிய எழுத்து முறையில் ஒன்றான கடகணா என்ற முறையில் எழுதும்படி அமைத்தார். ஏனெனில் அந்த முறைப்படி எட்டு கோடுகளால் அது எழுதப்படும்!  எட்டுக் கோடுகள் என்பது அதிர்ஷ்டத்திற்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது.

இப்படி உருவானது தான் டொயோடா என்ற பெயர்.

இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கவே கார்களின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திய டொயோடோ ராணுவத்திற்காக லாரிகளையும் ராணுவ வாகனங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

தொழிலில் ஈடுபாடு

தனது தொழிலில் விசேஷ அக்கறை கொண்டார் அவர். மேஜையில் முதலாளியாக அமர்ந்திராமல் தொழிலகத்தில் தொழிலாளர்களோடு சேர்ந்து  பழகி தொழிலில் உள்ள கஷ்டங்களை அறிந்து அவற்றை நீக்கும் வழிகளை மேற்கொள்ளலானார் அவர்.

தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகள் ஏராளம்.  அனைத்தையும் அவர் எதிர் கொண்டு சமாளித்தார்.

\

நிர்வாகத்தைத் திறம்படச் செய்வதில் முனைந்த அவர் தனது தொழிலகத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்குமான வேலையைத் துல்லியமாக நிர்ணயித்தார்.

ஒவ்வொரு நாளும் வங்கிக்கு தானே நேரில் சென்று நிதி பற்றிய அறிக்கையைப் பெறுவது வழக்கம்.

பின்னர் மாஸ் புரடக் ஷன் என்னும்  பெரும் அளவிலான உற்பத்திக்கு வழி கோலினார்.

லீன் மானுபாக்சரிங்

இதற்காக புதிய உத்தியான லீன் மானுபாக்சரிங் என்னும் ஒடுங்கு நிலை உற்பத்தியை அவர் மேற்கொண்டார்.

இந்த வழி புதிய வழி – ‘டொயோடா வழி’ என்றே உலகினரால் போற்றப்பட்டது.

வாடிக்கையாளரின் தேவையை சரியாக அறிவது, அவருக்கு அவர் கேட்டபடி தயாரிப்பை சரியான நேரத்தில் விநியோகிப்பது, இதற்காக உற்பத்தியை குறுகிய காலத்தில் திறனுடன் செய்வது இது தான் லீன் மானுபாக்சரிங் வழி.

***

Previous Post
Leave a comment

Leave a comment