மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,129

Date uploaded in London – –   11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129)

யோகரத்னமாலா- நாகார்ஜுனா பற்றிய மூன்றாவது கட்டுரை இது 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யோகரத்ன மாலா நூலை எழுதிய புத்தமத தத்துவ வித்தகர், மந்திரவாதி , ஈயத்தையும் இரும்பையும் ரசவாதம் மூலம் தங்கக்கட்டிகளாக மாற்றி ஏழைகளுக்கு உதவிய மந்திர தந்திர நிபுணர் நாகார்ஜுனா சொன்ன மேலும் பல அதிசய விஷயங்களைக் காண்போம்.

செக்ஸ் அனுபவிக்க !

விந்துவை வெளியேற்றாமல் நீண்ட நேரம் புணர்ச்சி இன்பம் பெறுவதற்கு, உடலுறவு  கொள்வதற்கு சில குளிகைகளை நாகார்ஜுனா மொழிகிறார் . அதே போல பெண்களும் கருவுறாமல் எத்தனை ஆண்களுடனும் உடலுறவு கொள்ள சில குளிகைகளை புகல்கிறார் ; அவர் பகரும் செய்முறைகளை விஷயம் அறிந்தோரிடம் கேட்டுப் பின்பற்றவும்.

xxxx

க்ஷீராதி பலாயஷ்டி க்ருதவலாசர்க்கரார்த்தவே  காலே

அவ்லிஹ்ய ஸம் ப்ரஸூதே  வந்த்யா லோகேஸ்வரம்

பொருள்

தாய்ப்பசுவின் பால், அதன் கன்றின் பால் , அதிபலா,  யஷ்டிமது, கிரிதபலா, கற்கண்டு தண்ணீர் ஆகியவற்றின் கலவையை மலடியின் மாத விலக்கு காலத்தில் கொடுக்கவும்; அவள் கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள்.

xxxx

அரசமரத்தின் மீது படரும் புல்லுருவியை, ரேவதி நட்சத்திர நாளன்று  இரண்டங்குலம் அளவிற்கு எடுத்து ஒரு பெண் புணர்ச்சியில் ஈடுபட்டால் அவளுக்கு ஆண்குழந்தை பிறக்கும் .

(இதில் இரண்டு அதிசய விஷயங்கள் நினைவிற்கு வருகின்றன. தமிழர்கள் பொங்கல்  பண்டிகையின் போது வீட்டுக் கூரையில் கூரைப் பூவைச் சொருகுவதுபோல கிருஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுதும் மிசல்ட்டோ Mistletoe என்னும் புல்லுருவியை வெள்ளைக்காரர்கள் சொருகி வைக்கிறார்கள். இது தீயவைகளை விலக்கி நல்லதைக் கொண்டுவரும் என்று கிரேக்கர்களும் ரோமானியர்களும் காலா காலமாக நம்பிவருவதால், இதை கிறிஸ்தவ மதம் ஒழிக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டது . அதை நாகார்ஜுனாவும்  சொல்லுவது மிகவும் வியப்புக்குரியது . மேலும் அரச மரத்தைச் சுற்றியயவுடனே அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம் என்ற தமிழ்  பழமொழியும் அரச மரத்துக்கும் கருவுறுதலுக்கும்  உள்ள தொடர்பைக் காட்டுகிறது . ஆக இதை இரண்டையும் நாகார்ஜுனா சொல்லுவது உண்மை என்றே எனக்குப்படுகிறது . மேலும் காளிதாசனும் குழந்தைப் பெறுவதற்கு, பசு மாட்டின் தூசியின் பின்னால் செல்ல வேண்டும் என்று ரகு வம்ச காவியத்தில் சொல்கிறான் . முதல் ஸ்லோகத்தில் பசு மாடு , கன்று — கருவுருதலைக் காண்கிறோம். இதுவும்.உண்மை யே . தற்காலத்தில் கோ  சாலைகளை இந்துக்கள் வைத்துள்ளனர் . அங்குள்ள பசுமாடுகளுக்கு அகத்திக் கீரை வாங்கிப் போடும் பெண்களுக்குக்கு குழந்தைகள் பிறக்கும் ).

xxxx

கருவுறாமல் இருக்க

ஒரு பெண்மணி ஊமத்தையை (Datura) தன இடுப்பில் வைத்துக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபட்டால் அவள் கருவுறமாட்டாள் என்கிறார் நாகார்ஜுனா .

xxxxx

நெல்லிக்காய், ரசாஞ்சன் ( lead sulphide லெட்/ ஈய ஸல்பைடு )  ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து புஷ்ய நட்சத்திரத்தன்று குடித்துவிட்டு ஒரு பெண் எத்தனை ஆண்களுடன் படுத்தாலும் கருவுற மாட்டாள் ; விதவைகளும் , நடத்தைகெட்ட பெண்களும் பயமில்லாமல் புணரலாம் என்கிறார் நாகார்ஜுனா.

xxxx

ஆண்குறியை  பலப்படுத்த

அலக்தக Alaktaka , இந்திர கோப பூச்சி, பழுப்பு நிற பசுவின் நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட திரியைக் கொண்டு வீட்டில் விளக்கு ஏற்றினால் அந்த அறையில் புணரும் ஆண் -பெண்ணுக்கு நீடித்த இன்பம் கிட்டும் ; தளர்ச்சியே வராது; இருவரின் குறிகளும் வலுப்படும்.

அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு (சீவக.2446.)  

Alaktaka (अलक्तक).—[na rakto’smāt, rasya latvam, svārthe kan Tv.] The red resin of certain trees, red lac or sap (formerly used by women to dye certain parts of their body, particularly the soles of the feet and lip.

xxxx

பிரகதி (ஆனைச்  சுண்டை) விதை, வெண்  கடுகு , குஷ்ட , வசம்பு,அஸ்வகந்தா , தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த பசையை ஆண்குறியில் அடிக்கடி தடவி வந்தால் , குதிரையின் ஆண்குறி போல வலு ஏறிவிடும்

குஷ்ட= Saussurea lappa C.B. Clarke, one of the best-known species within this genus, is commonly known as costus in English and has different vernacular names in India like, Kut (Gujrati), Kur (Bengali), Postkhai (Kashmiri), Sepuddy (Malayalam), Kot (Punjabi), Kushta (Sanskrit), Kostum (Tamil), Kustam (Telgu), Kushta (Marathi), Koshta (Kannada) and Kuth (Hindi) (Kirtikar and Basu, 2001). Saussurea costus (root oil and roots) has become an important drug in the international market.

xxxx

விந்துவைக் கட்டுப்படுத்த

கரஞ்சபல பழத்திலுள்ள உட்பகுதியை நீக்கிவிட்டு அதற்குள் பாதரசத்தைக் கொஞ்சம் விடவும் அதன் வாயை மூடிவிட்டு அதையும் வெள்ளை நிற சரபுங்க வேரையும் வாயில் அடக்கிக்கொண்டு ஒரு பெண்ணுடன் கூடினால், விந்து வெளியே வரவே வராது.

அவை இரண்டையும் அரைத்து உண்டால் விந்து வெளியே வரும் .

Karanj – करंज – Indian Beech – Pongamia glabra

xxxx

ஒரு தேனீ,  கரமஞ்சரி வேர், எருக்கம் பஞ்சு ஆகியவாற்றைப்  பொடித்து திரி செய்து  எரித்தால் அந்த இடத்தில் உடலுறவில் ஈடுபடும் ஆண்  மகனின் விந்து வெளியே விழாது .

தற்காலத்தில் வயாக்ரா மாத்திரை செய்யும் பணிகளை இது செய்யும்.

—subham—

Tags – மலடி, குழந்தை பெற, விந்து, கட்டுப்படுத்த, ஆண்குறி, வலுப்பட, கருவுறுதல், தடுக்க

Leave a comment

Leave a comment