WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.147
Date uploaded in London – — 17 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யாருக்கு ஓட்டு போடுவது?
ச.நாகராஜன்
2024 – பொதுத் தேர்தல்
ஏப்ரல் 19, 2024-ல் ஆரம்பிக்கிறது. ஜூன் மாதம் 4-ம் நாள் முடிவு தெரிந்து விடும்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்.
யாருக்கு ஓட்டு போடுவது?
இது தான் நம் முன் உள்ள கேள்வி.
அரசியல்வாதிகளை நம்மால் நம்பமுடியவில்லை.
வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.
பணத்தையும் கூடத் தான்!
வாக்குறுதிகளுக்கு மயங்குபவர் பலர்.
பணத்திற்கு கேரள மாநிலம் போன்றவற்றில் உள்ளோர் மயங்குவதில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ளோர் மயங்குகின்றனர். இதில் சத்தியம் வேறு வாங்கிக் கொள்கிறார்களாம்!
அடுத்து ஒரு ஃப்ரீ பாட்டில்.
ஏனென்றால் இந்த பாட்டில் சமாசாரத்தை உற்பத்தி செய்வதே அவர்கள் தாம்! ஆகவே கோடானு கோடி கொள்ளையில் ஒரு நாள், இரண்டு நாள் ஃப்ரீ விநியோகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆக யாருக்கு ஓட்டுப் போடுவது?
நேராக அப்பரிடம் போனால் பதில் சொல்கிறார்.
ஓட்டுப் போட மட்டுமல்ல, எல்லா வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் ஒரே பதில் தான் அவரிடம்!
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்னும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே
சங்க நிதி, பதும நிதியை அளந்தவர் யார்? யாருமில்லை. அதையும் தரணி மற்றும் வானை ஆளும் அதிகாரமும் சேர்த்துக் கொடுத்தாலும் அவர்கள் செல்வம் மங்கும், அதிகாரம் நீங்கும் – அவர்களை மதிக்க மாட்டோம் – அவர்கள் மாதேவர்க்கு பக்தி செலுத்தாதவர் என்றால்.
ஆனால் அங்கம் எல்லாம் தொழுநோயால் குறைந்து பசுவை உரித்துத் தின்றால் கூட சிவபிரானுக்கு அவர்கள் அன்பர் ஆகில் அவரை நாம் கடவுளாக வணங்குவோம்.
ஓட்டுப் போட மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பதில் இதில் உண்டு.
கடவுள் இல்லை என்று சொல்லும் மாபாதகர்களைப் பார்க்காதே, பேசாதே, எண்ணாதே, அவர்கள் கூறுவதைக் கேட்காதே, அவர்களை அண்டாதே!
ஆனால் கடவுள் பக்தி கொண்டவரிடம் சேர், பேசு அவர்களில் உங்கள் தொகுதியில் நிற்கும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்.
சரி, நம்மை பக்தர்கள் என்று இனம் கண்டு மிரட்டுவார்களே, அப்போது என்ன செய்வது?
ஒரு இன்ஸ்பெக்டர் 30 போலீஸ்காரர்களுடன் ஒரு பிஜேபி பெண்மணி வீட்டிற்குச் சென்று அராஜகமாய் அவருக்குத் தொந்தரவு கொடுத்ததை யூ டியூபில் பார்க்கவில்லையா?
பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு எவ்வளவு இடைஞ்சல் கொடுக்க முடியுமோ அவ்வளவை பத்திரிகைகள் மூலமாகவும் போலீஸ் மூலமாகவும்
திருடர்கள் முரடர்கள் கயவர்கள் மூலமாகவும் கொடுப்பதைப் பார்க்கவில்லையா?
நல்லவேளை சோஷியல் மீடியா என்று ஒரு இருக்கிறது. அதில் டி.ஆர். பாலு நான் சரஸ்வதி கோவிலை இடித்தேன், லக்ஷ்மி கோவிலை இடித்தேன் என்று சொல்வதையும் பார்க்க முடிகிறது.
இவர்கள் மிரட்டினால் என்ன செய்வது என்பதற்கும் அப்பரே பதில் சொல்கிறார்.
மாபெரும் மன்னன் அவரைக் கல்லில் கட்டி கடலில் போட்டான். ஆனால் அவர் மிதந்து வந்தார். இறைவன் எல்லா அயோக்கியரையும் எல்லாக் காலத்திலும் சும்மா விட்டு வைப்பதில்லை.
ஒரு நாள் அவர்கள் அழிந்தே ஆக வேண்டும்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
நமச்சிவாய நாமம் நல்லதையே செய்யும்.
சிவனையும், ராமரையும் இழிவு படுத்துவோரை, – கடவுள் இல்லை என்று சொல்வோரை ஒதுக்குவோம்.
ராமருக்கு கோவில் கட்டித் தொழுவோரை ஆதரிப்போம்.
யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற கேள்விக்கு விடை கிடைத்தே விட்டது.
நமது ஓட்டு ராமருக்கே! ராம பக்தியினருக்கே!!
***