வாழைப்பழம் வாழ்க! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-9 (Post No.13,234)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,234

Date uploaded in London – –   12 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மா, பலா , வாழை ஆகிய மூன்றும் முத்தமிழ் போல இனிக்கும் முக்கனிகள் ஆகும். திருமந்திரம் 3000 இயற்றிய திருமூலர் வாழைப் பழத்தைப் பயன்படுத்தி,  நமக்கு பல ஆன்மீகச் செய்திகளை அளிக்கிறார்.

வாழை அல்லது வாழைப் பழத்தை  பல பொருள்களில் பயன்படுத்துவது திருமந்திரத்தின் சிறப்பு ஆகும். ஆனால் திருமந்திரத்திற்கு உரை எழுதியோர் சிக்கலான மொழியைப் பயன்படுத்தி அர்த்தத்தை விளங்காமல்  செய்துவிடுகின்றனர். சிமெண்ட் ரோட்டில் செல்ல விடாமல் தார் போடாத கரடு முரடான சாலையில் நம்மை அழைத்துச் செல்கின்றனர்.  ஆகையால் நான் உங்களுக்கு சில வரிகளில் பொருள் சொல்ல விழைகிறேன்

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்

செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்

நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

யோகப் பயிற்சியில் பக்குவப்பட்டோர் மாதர்களிடம் சிக்கார். தவத்தில் மூ ன்று நிலைகளை கடந்து சிவானந்த யோகத்தை நுகர்வர்.

முக்குணங்கள் வழியிலே தேர்ச்சி பெற்ற பெரியோர் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களையும் வென்று நனவு, கனவு, உறக்கம் என்ற நிலைகளைக் கடந்து (3 வாழை), அழகிகள் வலையில் சிக்காமல் சிவானந்தத்தைப் பருகுவர்.

முக்காதம் ஆற்றிலே= மூன்று குணங்கள் வழியிலே ;

மூன்றுள வாழை = கனவு, நனவு, சுழுத்தி நிலைகள் ;

மலருண்டு = சிவானந்தத்தைப் பருகி ;

படங்கினார்= நகை அணிந்து அழகிகள்;

பக்கனார் = பக்குவப்பட்ட ஆன்மாக்கள் .

2916: Yoga’s Triumph

In the river of Leagues Three

Are Plantain Trees Three;

Ruddy fruits of triple Malas they bore;

They who are with the Lord exceeding,

Hoisted their Flag;

And seeking the Virgin through Central Sushumna,

Inhaled the Flower’s fragrance, divine sweet.

xxxxx

வானச் சிறப்பு
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  105

பொருள்

மழைநீர் அமுதம் ஆகும் அதனால் பூமியில் அமிர்தம் போன்ற உணவினை வழங்கும் பயிர்கள் தழைக்கும்

கமுகு என்னும் பாக்கு மரம், தென்னை மரம் , கரும்பு, வாழை முதலியன அமிர்தம் போன்றவை மழையில்லாவிடிலோ காஞ்சிரங்காய் நிலை / வறட்சி / துன்பம் நேரிடும்

248: Vegetation Blooms

The fertilising flood of rains outpouring

Makes trees and plants bloom enriched with sap;

The areca palm, coconut, cane and plantain green,

And vomica to Samadhi’s nectar leading-Stand laden rich with crop.

xxxxx

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது

தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது. அதில் பூசணி பூத்தது. அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,  தொழுது கொண்டு ஓடினார்கள்.  அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

இந்தப் பாடலுக்கு பல விளக்கங்கள் தரப்படுகின்றன.அனைத்துப் பாடல்களும் வேதம் போல மறைவாகப் பேசுகின்றன. அதாவது உண்மைப்பொருளை மறைத்துப் பேசுகின்றன.

இதோ ஒரு விளக்கம் ,

வழுதலை  விதை= யோகப் பயிற்சி ,

பாகற்காய் – வைராக்கியம்,

புழுதியைத் தூண்டினேன் – தத்துவ ஆராய்ச்சி செய்தேன் ,

பூசணி பூத்தது –  சிவம் வெளிப்பட்டது ,

தோட்டக்  குடிகள் – புலன் இன்ப வேட்கை ,

வாழைக்கனி – ஆன்ம லாபம்

சுருக்கமாகச் சொன்னால் யோகப் பயிற்சி மூலம் ஆன்மீக முன்னேற்றம் கண்டேன் .

இதற்கு குண்டலிணி சக்தியை எழுப்புதல் போன்ற விளக்கங்களும் உண்டு.

2869: Abnegation of Desires Leading to Liberation Through

Yoga

I sowed the seed of brinjal

And the shoot of bitter gourd arose;

I dug up the dust;

And the pumpkin blossomed;

The gardner-gang prayed and ran;

Full well ripened the fruit of plantain.

xxxxx

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்

கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

(குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை, அறிவு, இன்ப, வடிவ உருவமாகும்.

உலக இன்பங்களை வேண்டுவோர் எட்டிப்பழத்துக்கு ஆசைப்படுவோர் ஆவர்.

எட்டிப்பழம் பார்க்க அழகானது ஆனால் விஷத்தன்மையுடையது.  உலக இன்பங்களும் அப்படித்தான் 

கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.

2901 : Sweet Ambrosia and Bitter Nux Vomica Within the Body

In the tank where bloomed Kotti and Lily

Are Neem and Nux Vomica, too;

They who eat not the Salad of Plantain sweet,

With candy and honey mixed,

Lo! hanker after the fruit of nux vomica.

xxxxx

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.

வாழைமரமும், சூரை முள்ளும் ஓரித்தில் வளர்ந்திருந்தன. வாழை மென்மையானது. சூரை வலிமையானது. மக்கள் வாழையை விரும்புகின்றனர். 

வாழை- இன்பம்; சூரை – துன்பம்

இன்பமும் துன்பமும் வந்து நம்மை ஆட்டுகிறது; இதில் துன்பமே வலியது  இந்த இரண்டினையும் மனத்திலிருந்து விலக்கிவிட்டு இரண்டினையும் ஒப்ப நோக்கினால் சிவம் என்னும் இன்பத்துடன் வாழலாம்.

2922: Iruvinai Oppu Leads to Siva

The Plantain Tree and the Surai Creeper (pepper) together covered space;

The Surai creeper is stronger by far than the Plantain tree, they say;

Cutting down the Plantain tree and Surai creeper together,

The Plantain extending flourishes sure.

—subham—-

Tags- வாழையும் சூரையும், கொட்டியும் ஆம்பலும், வழுதலை வித்திடப் பாகல், அமுதூறு மாமழை, முக்காதம் ஆற்றிலே, திருமூலர், வாழைப்பழம், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-9

Leave a comment

Leave a comment