
Date uploaded in London – – 20 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 35
xxxx
391. பல் வலிக்கு
நன்னாரி வேர் கிஷாயத்தில் கொஞசம் காடிவிட்டு கொப்பளித்து வந்தால் பல் வலி சவுக்கியமாகும்.
XXXX
கண் மாசு நீங்க
நவாச்சாரத்தை முலைப்பாலில் இழைத்து கண் ரிப்பை மேல் பூச கண்மாசுகளையருக்கும் .
XXXX
மயிர் உதிராதிருக்க
நவாச் சாரத்தை தேனில் உரைத்துப் பூச மயிர் உதிர்வதை நிறுத்தும் .
XXXX
காது நோய்க்கு

நல்லெண்ணெய் ஒரு பலத்தில் கரப்பான் பூச்சி ஒன்று போட்டுக் காதில் இரண்டொரு வேளை விடவும்.தீரும்.
XXXX
395. வீக்கம் கரைய
நத்தைச்சூரி என்னும் பூண்டை அரைத்து கல்லைப்போன்ற வீக்கத்திற்குத் தடவினாலும் கரைந்துபோகும் .
xxxx
கண்நோய்க்கு
நந்தியாவட்டைப் பூவைப்பிழிந்து அந்தச் சாற்றைக் கண்ணுக்கு விட்டால் கண்காசம் படலம் இவை தீரும் .

xxxx
நா
நாள்பட்ட இருமலுக்கு
நாக்குப் பூச்சியென்னும் பூநாகத்தை எள் எண்ணெயில் போட்டுக் காய்ச்சிக்குடிக்க நாள்பட்ட இருமல் நிவர்த்தியாகும். ரிண ங்களில் தடவினால் ஆறிப்போகும் .
xxxx
கிராணிக்கு
நாவல் வித்தைப் பாலில் அரைத்து உண்டால் கிராணி – நீரிழிவு- மூலச்சூட்டின் கிராணி இவை போகும்.
xxxx
இதுவுமது
நாவல் பட்டையைச் சூரணித்து எருமைத்தயிரில் கலந்து உண்டு வந்தால் கிராணி- காசம் தீரும் .
xxxx
முக வசியம்
நாயுருவிக் கட்டையினால் பல்துலக்கி வந்தால் முகவசியம் உண்டாகும்; லட்சுமி கடாட்சம் உண் டாம்
xxxx
சூதகம் உடைய
நாயுருவிசமூலமும் – வாழைச்சருகு– மூங்கில் குருத்து — இவை கிஷாயம் வைத்துக் கொடுத்தால் பெண்கள் வயிற்று அழுக்கைத் தள்ளும் . . நாவறட்சி தீரும்.
xxxx
சீழ் எடுக்க
நாக தாளிப்பட்டையின் முள்ளைச் சீவிப்போட்டு கும்பியில் சொருகி வெந்த பிறகு பிசை ந்துருட்டி பில்லை தட்டி துளி விளக்கெண்ணெய் தடவி உடைந்த கட்டிகள் மேல் வைத்துக்கட்டினால் அதிலுள்ள சீழ் வெளிப்படும் .
xxxx
உதிரவாதத்திற்கு
நாய்க்கடுகை கிரமப்படி துகையல் செய்து தின்றுவந்தால் உத்திரவாதம்- சூதகவாய்வு- குன்மம் – சாத்தியாகும். மலக்கட்டையுண்டாக்கும் . இதை பேய்க்க்குப் புகை போடுவதுமுண்டு .
xxxx
நி
உடம்பு பூரிக்க

நிலாவிரையென்னும் நிலவாகை சமூலம் பச்சையாகக் கொண்டுவந்துநிழலில் உலர்த்தியிடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு திருகடிப்பிரமாணம் எடுத்து பசும் நெய்யில் குழைத்து தின்றுவந்தால் உடம்பு பூரிக்கும். இரத்தம் சுத்தியாகும்.
xxxx
உடம்பு சுருங்க
நிலாவிரைச் சூரணத்தை இருவேளையும் திருகடிப்பிரமாணம் தேனில் குழைத்து உண்டுவந்தால் உடம்பு சுருங்கும்.
xxxx
எலிக்கடிக்கு
நிலாவிரைச் சூரணத்தை சித்தாமணக்கெண்ணெயில் குழைத்து உண்டுவந்தால் எலிக்கடி விஷம் , பயித்தியம், சில்லறை விஷம் , ஏப்பம் இவை தீரும். பத்தியமிருக்கவேண்டும்.
xxxx
கிருமி நீங்க
நிலாவிரைச் சூரணத்தை வெந்நீரில் உட்கொண்டுவந்தால் கிருமிகள்- திமிர் பூச்சிகள் யாவும் மலத்துடன் நீங்கிப் போகும்.
xxxx
சமியாமைக்கு
நிலாவிரைச் சூரணத்தை பசுவின் மோரில் ஒருவேளைக்கு திருகடிப்பிரமாணம் உட்கொண்டுவந்தால் பெண்கள் சமியாமை நீங்கும் .
xxxx
பாண்டுரோகத்திற்கு
நிலாவிரைச் சூரணத்தை எருமை சாணிப் பாலில் திருகடிப்பிரமாணம் இரு வேளையும் உட்கொண்டுவந்தால் , பாண்டு- நீர்க்கோவை இதுகள் தீரும். பத்தியம்
xxxx
உடல் தடிக்க
நிலாவிரைச் சூரணத்தை பாகவிலைச் சாற்றில் குழை த்துண்டுவந்தால் இளைத்த தேகம் தடிக்கும்.
xxxx
தேள் விஷத்திற்கு
நிலாவிரைச் சூரணத்தை குப்பைமேனிச் சாற்றில்குழைத்து ஒருநாளைக்கு மூன்று வேளை யுண்டால் தேள்விஷம் நீங்கும்.
xxxx
பெருச்சாளிக் கடிக்கு
நிலாவிரைச் சூரணத்தை ஆலம்பழுப்புச் சாற்றில் மத்தித்து உண்டுவந்தால் பெருச்சாளிக் கடி விஷம் தீரும்.பத்தியம்.
xxxx
செவ்வட்டைக்கடிக்கு
நிலாவிரைச் சூரணத்தை வேப்பம்பட்டைச் சாற்றில் மத்தித்து உண்டுவந்தால் செவ்வட்டை கடி தீரும். பத்தியம் .
xxxx
சகல விஷத்திற்கு
நிலாவிரைச் சூரணத்தை எலுமிச்சம்பழச் சாற்றில் குழைத்துத் தின்றுவந்தால் சகல விஷமும் தீரும். பத்தியம்
xxxx
414. அரணை வண்டு கடிகளுக்கு
நிலாவிரைச் சூரணத்தை அவுரியிலைச் சாற்றில் குழைத்துத் தின்றுவந்தால் அரணை வண்டு இதுகளின் விஷம் தீரும்.
–சுபம்–
Tags- விஷக்கடி , மூலிகை, நிலாவிரை, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 35, நிலவாகை