திருமந்திரத்தில் மேலும் யானைகள் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 14 (Post.13,261)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,261

Date uploaded in London – –   21 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ELEPHANTS IN Tirumanthiram continued………………

திருமந்திரத்தில் யானைகளைப்  பயன்படுத்தி திருமூலர் தந்த செய்திகளை சென்ற கட்டுரையில் கண்டோம். இதோ மேலும் சில யானைப் பாடல்கள் .

திருமூலர் எல்லோருக்கும்தெரிந்த பழமொழிகளையும் பாடல்களில் பயன்படுத்துகிறார்; யானை உண்ட விளாம் பழம் என்னும் பழமொழியை பயன்படுத்தும் பாடல் இதோ:-

யானை உண்ட விளாம்பழம்…………………

கரியுண் விளவின் கனிபோல் உயிரும்

உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்

அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்

திரிய விழுங்குஞ் சிவபெரு மானே.  2548

விளாம்பழத்துக்கு யானை நோய் வந்தால் ஓட்டுக்குள் ஒன்றுமே இராது.  அதுபோல, சிவனது அருளுக்கு ஆட்பட்டவரும் மாறுதலடைந்து உன்னத நிலையை அடைவர்.

நான் யானை உண்ட விளாம்பழம் போல் ஆனேன்.

TATTVAMASI VAKYAM*5

Beyond Siva Turiya

As unto the wood-apple

By “elephant” disease consumed,

So are Jiva and Para before Siva;

In the rare state beyond Siva Turiya

Is Supreme Siva

That engrosses worlds all.

XXXX

அவன் கறுப்பா சிவப்பா?

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை

அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்

கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.   2769

அவன் அரியன் என்று அவனுக்கு ஆட்பட்டேன்

அவன் கறுப்பா சிவப்பா என்று தெரியாது

Adore Lord as “Rare” and “Great”

With His hands He peeled the elephant hide,

In His hands He held the skull,

On His crest He adorned the crescent moon,

That Lord I adored;

“Rare; Great is He;”

Beyond that I knew nothing;

Is He black or red?

I have not seen.

XXXX

ஞானத்து உழவினை நான் உழுவேனே

ஆனை துரக்கிலென்அம்பூடு அறுக்கிலென்?

கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்?

ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே. 2807

மதயானை என்னைத் துரத்தினால்தான் என்ன? கூரிய அம்பு என்னைத் துளைத்தால்தான் என்ன? காட்டுப் புலி என்னை சுற்றி வளைத்தால் தான் என்ன? ஞான பூமியில் ஞானத்தை தலைவன் ஆகிய எம் பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டினைச் செய்வதிலிருந்து நான் வழுவ மாட்டேன்.

Plough the Field of Jnana

What thought the elephant pursues,

What though the arrow pierces,

What though the wild tiger surrounds,

Deep I plough the field of Jnana

In the Other Land,

Lord has me allotted. 2807

XXXX

ஆக மதத்தன ஐந்து களிறு உள

ஆக மதத்து அறியோடு அணை கின்றில

பாகனும் மெய்த்தவை தாமும் இளைத்த பின்

யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.-1985

மிக்க மதத்தை உடையனவாகிய யானைகள் உடம்பகத்து ஐந்துள. அவை செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்பன. இவற்றையே ‘உரன் என்னும் தோட்டியான் ஒரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’ என திருவள்ளுவர் குறளில் மொழிந்தனர். அவை அடங்கா மதங்கொண்டிருப்பதால் கட்டுத்தறியில் அணைகின்றில. ஈண்டுச் சிவபெருமானைக் கட்டுத்தறியாக உருவகித்தனர் பாகராகிய ஆருயிர்களும் இளைத்தன. அக் யானைகளும் அலைந்து அலைந்து எய்த்தன. இந்நிலையில் சிவபெருமான் திருவருளால் புலன்களாகிய யானைகளைக் கட்டுத்தறியாகிய சிவத்தின் பால் அணைத்தது. இஃதல்லாது வேறொன்றும் யாம் அறியோம் என்க.

Do Not Delay to Control Senses

Five are the elephants (Senses)

That are in MAST

Their MAST increasing

They do not to the (Divine) Post remain tied;

As the mahout (Jiva) tires,

And the elephants (Senses) too, get their energy exhausted,

Then they turn to Yoga;

Why this way (they delayed) we know not!

xxxxx

புலன்களை அடக்குவது மத யானைகளை அடக்குவது போன்றது

உடலைச் சார்ந்த கருவிகளை மதம் பிடித்த யானைகளுக்குத் திருமூலர் ஒப்பிடுகின்றார். யானைகளுக்கு மதம் பிடிக்கும்பொழுது அவைகளை ஊருக்கு வெளியே உள்ள, மக்கள் நடமாட்டம் இல்லாத, கோட்டைப் பகுதியிலே விட்டுவிடுவார்கள். அதேபோல நமது இந்திரியங்கள் பொருள்கள் மீது நாட்டம் கொண்டு செல்ல முயலும்போது, அவற்றை நமது அறிவால் அடக்கி வைக்க முயலுகின்றோம். ஆனால், அவை தப்பி ஓடி வெளியே வந்து விடுகின்றன. உடம்பையே அழித்துத் திமிர் கொண்டு அலைகின்றன என்றும் திருமூலர் பெருமான் கூறுகின்றார்.

முழக்கி யெழுவன மும்மத வேழம்

அடக்க அறிவென்னுங் கோட்டையை வைத்தேன்

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்

கொழுத்தன வேழங் குலைக்கின்ற வாறே”. (திருமந்திரம் – 1996)

Mere Control Does Not Avail

Loud they roar, the

elephants in MAST triple, (Pasas)

I applied the goad of knowledge to them control;

But they romped about and in fury escaped,

They fat became, causing destruction in their train,

And sweet fields of sugarcane (goodly qualities) devastating.

xxxx

சிவனை வழிபடுவோர் யானை மேல் கொட்டுமேளத்துடன் பவனி வருவர்

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்

இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்

முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்

பன்னினர் என்றே பாடறி வீரே. -2941

Glorious Reward of Prayer

Who were they,

Unto mountain on kingly elephant sat,

And to sweet music accompanying, in procession went?

Of yore, they chanted the Primal Lord’s name in fervor

And so attained the status exalted.

—-subham—–

Tags- Tirumular, Tirumanthiram, Elephants, Part 2, திருமந்திரத்தில் யானைகள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 14

Leave a comment

Leave a comment