முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் –36 (Post No.13,264)


Picture of Neermulli

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,264

Date uploaded in London – –   22 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 36

xxxx

415. மாரல் சுரத்திற்கு

நிலாவிரைச் சூரணத்தை கொடிக்கள்ளி ச் சாற்றில் குழைத்துத் தின்றுவந்தால் , நாள்விட்டு நாள் காய்கிற மாரல் சுரம் – குளிர் சுரம் இதுகள் தீரும்

xxxx

சோகை காமாலைக்கு

நிலாவிரைச் சூரணத்தை வெள்ளாட்டு மூத்திரத்தில் கலக்கியுண்டுவந்தால் சோகை- பித்த சோகை- காமாலை தீரும். குட்டரோகமும் தடிப்பும் சாந்தியாகும்.

xxxxx

நீறாமை  ரோகத்திற்கு 

நிலாவிரைச் சூரணத்தை பசுவின் கோமயத்தில் கலக்கியுண்டுவந்தால்சொறி-சிரங்கு- பெருவயிறு–மகோதரம் – நீர் கோவை நீராமை இவைகள் தீரும்

xxxx

அஜீரணத்திற்கு

நிலக்கடம்பு ,பாலில் அரைத்து உண்டால் அஜீரணம், கிருமி ஜன்னி நேத்திர நோய் பலவிஷம் தீரும். மண்டையிலுண்டான நீரேற்றத்தை  நீக்கும்.

xxxx

கண்சொருகல் கொட்டாவிக்கு

நிலக்குமிள் சமூலத்தைப் பாலில் அரைத்து உண்டு வந்தால் கண்சொருகல், கல்லடைப்பு,  கொட்டாவி சீதளம் பேதி மாந்தம் வாத வலியும் போம் . இது கெர்ப ஸ்திரீகளுக்கு ஆகாது .

xxxx

நீ

இரத்த விருத்திக்கு

நீர்முள்ளி விரையை சூரணித்து  பாலில் உட் கொண்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் வாந்தி நிற்கும் அதிசாரம் நீர்வீக்கம் இளைப்பு  இருமல் யிவை தீரும்.

xxxx

420. சிரங்கிற்கு

நீரிடிமுத்தின் பருப்பை தயிரில் ஊறவைத்து எலுமிச்சம்பழ ச்சாறு அல்லது காடி வார்த்தரைத்து  உடம்பில் பூசிக் காய்ந்த பிறகு சாணம் தேய்த்து அல்லது இலுப்பைக்கட்டியாலரப்பு தேய்த்துக் குளிக்கவும். நமை , சொறி யாவும் தீரும்.

xxxx

கண்நோய்க்கு

நீலாஞ்சனம் என்னும் சிறுமா கல்லுமுத்து கஸ்தூரி  இதுகள் சமனிடை யெடுத்து முலைப்பால் விட்டரைத்து கண்ணில் கலிக்கம்  தீட்டிவந்தால் சகல கண்ணோயும் தீரும்.

xxxxx

நீர் சுரப்பு நீர் சிறுப்பு

நீர்முள்ளியிலை – பசலையிலை – குப்பைமேனியிலை – இவைகளில் ஒன்றை அவித்துத் தின்றால் நீர் சுரப்பு அல்லது  நீர் சிறுப்பு  இவை நிவர்த்தியாகும் .

xxxx

நு

மந்தத்திற்கு

நுணா யிலையைக் கிஷாயம் வைத்து கொஞ்சம் சக்கரை கூட்டி சாப்பிட்டால் மந்தத்தை நீக்கும்.

இதுவுமது

நுணா யிலையை பிள்ளைகளுக்கு கொடுக்கும் மாந்த கிஷாயத்துடன் சேர்த்து காய்ச்சுவதும் உண்டு . மாந்தம்- புண் – சிலேட்சும சுரம் இவைகளை  நிவர்த்தியாக்கும் .

xxxx

நூ

காயசித்தி

நூறாண்டு சென்ற வேப்பம் பட்டையையிடித்து வஸ்திரகாயம் செய்து சீனி சக்கரை சமன் கூட்டி மண்டலக்கணக்காக இருவேளையும் திருகடியளவு சாப்பிட்டுவந்தால் தேகத்தில் ஊறிய நாட்பட்ட பித்தம் வாய்வு- உஷ்ணம்- யாவும் நிவர்த்தியாகும். கண்கள் பிரகாசிக்கும் – புத்தி நுட்பமாகும் – காயத்தில் யாதொரு வியாதியும் அணுகாது – ஞானம் துலங்கும் .

xxxx

நெ

நீர் குறுகலுக்கு

நெருஞ்சிக்காயை சூரணித்து பாலில் காய்சசியுண்டுவந்தால் நீர் குருகல் – நீர் அடைப்பு-சதை யடைப்பு – வெட்டை – எலும்புருக்கி இவை சாந்தியாகும்.

xxxx

சகல விஷத்திற்கு

நெய்க்கொட்டான் மூலத்தை அரைத்து பாலில் உட்கொண்டுவந்தால் சகல விஷக்கடிகளும் கரப்பான் கிரந்தி மேகச்  சூலை இவை தீரும்.

xxxx

நாத விருத்தி

நெய் சிட்டிக் கிழங்கை உலர்த்தி சூரணித்து பாலில் காய்ச்சியுண்டுவந்தால் நாதம் விருத்தியாகும் . சூட்டைத் தணிக்கும் .xxxx

பித்த சூட்டுக்கு

நெல்லிவற்றல்  கிஷாயம் வைத்து சீனி கூட்டி பால்விட்டு அருந்திவந்தால் பித்த சூடு ஆண் குறியில் சிறு கொப்பளம்  வாந்தி அரோசிகம் இவை தீரும் .

xxxx

நே

நேர்வாளம் என்பது வைத்தியரால் கையாளவேண்டுமேயன்றி சாதாரண மாணவர்கள் கையாளுவது அசாத்தியமாகும். ஆகையால் அது விடப்பட்டிருக்கிறது .

xxxx

நொ

430. கட்டிகள் அமுங்க

நொச்சிச் சாற்றை கட்டிகளின் மேல் பற்றுப்போட்டு வந்தால்  கரைந்து போகும், வீக்கங்கள் இறங்கும். இந்த இலையை வீட்டில் சில நெருக்கமான இடங்களில் போட்டு வைத்தால் சில்லரைப் பூச்சிகள் சேராது .

xxxx

தலைநோய்க்கு

நொச்சிச் சாற்றை எடுத்து பின்னிசுப்பு , நரம்பிசுப்பு, தலைநோய் முதலிய சீதளத்தாலுண்டாகும் வியாதிகளுக்கு தடவி நன்றாய்த் தேய்ப்பதினால் நிவர்த்தியாகும்..

நீலாஞ்சனம் 

—subham—

Tags- மூலிகை மர்மம்,  பகுதி 36 நீர்முள்ளி,  காயசித்தி,நீலாஞ்சனம் 

Leave a comment

Leave a comment