பூனையிடம் அகப்பட்ட கிளி! நாயாய்ப் பிறப்பவர் யார்? திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-17 (Post No.13,279)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,279

Date uploaded in London – –   27 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வாரம ராபதி நாடி

எளியனென் றீசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையிற் கீழது வாகுமே.-509

திருவடி யுணர்வுடையார் சிவபெருமானை விண்ணவர் முதலியோர் தொழுது அவன் திருவருளைப் கீழோர் சிவபெருமானை எளிமையாக எண்ணிப் புறக்கணிக்கின்றனர். அதனால் அவர்கள் பிறவித்துன்பத்தில் உழல்கின்றனர். அவர்கள் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளி  போலாகின்றது.

Abuse of Siva Brings Misery

Those who have Jnana attained,

Rid of all doubts in their thoughts

Seek Him in love intense

Shall reach the World of Celestials;

If the low-born think any the less of Him,

Dismal indeed is their fate-

Unto the parrot in cat’s claw.

xxxxx

நாயாய்ப் பிறப்பவர் யார்?

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்

வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.-514

ஓம் என்ற ஓரெழுத்தை ஓதிவரும்  சிவனடியாரை மனம் வருந்தும்படி செய்பவர், ஊழிக்காலம் நாயாய்ப் பிறந்து  துன்புறுவர். பலவூழிக்காலம் புழுவாய்ப் பிறந்தும்  துன்புறுவர்..சுணங்கன் – நாய். ஓருகம் – ஒரு யுகம் ;. .கிருமி – புழு.

Do not Abuse Guru

Those who wounded feelings,

Of Holy Guru who taught,

The One-lettered mantra, “AUM”

Will be a dog born,

And after a hundred dog incarnations

Will die a human out-caste.

xxxx

கடைவாசலைக்  கட்டிக்  காலை எழுப்பி

இடைவாசலை நோக்கி இனிதுள் இருத்தி

மடைவாயிற் கொக்குப்  போல் வந்தித்திருப்பார்க்கு

குடையாமல் ஊழி இருக்கலுமாமே ( 571 )

மூலாதாரத்தில் பிராணன் கீழ்ப்போகாதவாறு கட்டி வாயுவை மேல் நோக்கி திருப்பி ஒவ்வொரு நிலையையாக தாண்ட, சகஸ்ரம் அடைந்து பரவெள்ளி திறக்கும். மடையில் மீன் வரும் வரை காத்து இருக்கும் கொக்கு போல் பரவெளி அடைந்த நிலையில் இருந்தால் ஊழிக் காலம் வரையில் உடல் அழியாமல் என்றென்றும் இருக்கும்.

Practice of Kundalini Yoga

Bind the Muladhara

Raise the Prana breath upward

Through the spinal hollow course it

And within in aptness retain,

And like a stork at stream’s head

Sit calm

In singleness of thought;

Well may you live forever and ever.

xxxxx

சிவனெனு நாமம்  தனக்கே யுடைய   செம்

மேனியம்மான்

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து

ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்

ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்

ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 2764

அந்தி வானத்தின் வண்ணம் கொண்டவன் சிவன்; அமரர்கள் குலக் கொழுந்து சிவன்; பெரிய பாம்பைத் தன் உடலில் அணிந்தவன்; அவன் வான் மயமாக விளங்குவான்; அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான். அவனே நெருப்பை போன்ற சிவந்த நிறம் படைத்த நம் சிவபெருமான்.

He Fills Space and Outer-Space

He fills the space;

He is the darling of Celestials;

He wears the serpent;

Having filled the space

He stands as outer-space

He the Fire-Hued.

மாசுணம்Python, Big Snake

xxxxx

பாம்புத் தோலும் பறவை முட்டையும்

நாகம் உடலுரி போலும் நல் அண்டசம்

ஆக நனாவில் கனா மறந்து அல்லது

போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று

ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே- 2093

ஆங்கிலத்தில் உள்ள விஷயம் :

நாம் விழித்துக்கொண்டிருக்கையில் முன்னிரவில் கண்ட கனவுகள்மறந்துபோகின்றன. பாம்பு தோலை உரிப்பது போலவும் பறவைகள் முட்டையிலி ருந்து வெளிப்படுவதுபோலவும் நாமும் பல உடல்களில் மாறி மாறி பிறக்கிறோம். முன் பிறப்பு நினைவு இருப்பதில்லை இறைவன் அருள் கிடைக்கும் வரை இருவினைப் பயன்களை அனுபவிக்கிறோம்

XXXX

ஆருயிர் ஓர் உடம்பைவிட்டு மற்றோர் உடம்பை வினைக்கீடாக எடுக்கும். அதற்கிடையில் இருவினைப் பயனுள் தீவினைப் பயனின் ஒரு பகுதியை விண்ணுலகில் நுகரும். அவ்வுயிர்கள் ஆண்டு நுகருங்கால் தாம் செய்த வினைவகையும், அதன் பயனை அவ்வவ்வாறே இப்பொழுது அடைகின்றோம் என்னும் நினைவும், வரும்; யமனின் ஏவலாளர் சொல்லும் செய்கையும் அவர்களைத் துன்புறுத்தும்.. இதுபோல் நல்வினைப் பயனுக்கும் உண்டோ என்பது உரைகள்  மூலம் அறிய  முடியவில்லை. ஆனால் இன்பப்பயன் நுகரும் தேவர்கள் செருக்குறுவதும்  கஷ்டம் வருகையில் அஞ்சிமுறையிடுதலானும் அவர்களுக்கு வழிகாட்டுவோர் ஆங்கு இலரென்பதே துணிபு.

இவ்வுண்மை வரும் சிவஞானசித்தியார் திருப்பாட்டானும் உணரலாம்:

“அரசனும் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள்

தரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத்து

உரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்

நிரயமுஞ் சேரார் அந்த நிரயமுன் னீர்மை யீதாம்.”

சித்தியார், 2. 2 – 29.

மீண்டு நிலவுலகத்துப் பிறக்கும்போது அவ்வுயிர்கள் இவற்றை மறந்துவிடுகின்றன. பருவுடம்பைவிட்டுப் போவதற்கு ஒப்பு, பாம்பு தோலைக்கழற்றிப் புதுத்தோலை எடுப்பதாகும். குஞ்சு முதற்கண் முட்டையைவிட்டு வெளிவந்து கூட்டில் சின்னாட்கள் தங்கும்; பின்பு பறந்து புறத்துப்போகும்; இடவேறுபாட்டிற்கு இஃதொப்பாகும். அறிவு வேறுபாட்டிற்கு நனவின்கண் நினைவோடியற்றிய செயல்கள் எல்லாவற்றையும் கனவில் மறந்துவிடுவது ஒப்பாகும். அரனருளாலே ஆருயிர்கள் இம்முறையாகப் பாம்பு தோலுரிப்பதும், முட்டையிலிருந்து குஞ்சு வெயிப்படுவதும், நனவை மறந்து கனவிற்செல்லுவதும் போற்சென்று ஆண்டுப்பயன் உழந்து மீண்டு பிறக்கும்

In the Waking State Dreams are Forgotten;

So it is Through Successive Lives

Even as the snake sloughs off its skin

And another assumes;

Even as the bird its shell leaves

And another life pursues;

In its waking state the Jiva forgets

Happenings of the dream state;

Thus does Jiva from one body to another migrate;

Until with Grace of Hara

It reaches where it is destined to be;

And there experiences

The Karmas two, good and evil.

To be continued……..

Tags— பூனை, கிளி, நாய், பிறப்பு, மாசுணம், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை 17, பாம்புத் தோல்  , பறவை முட்டை

Leave a comment

Leave a comment