திருமந்திரத்தில் அணுகுண்டு;  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -18 (Post No.13,285)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,285

Date uploaded in London – –   29 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரம் இயற்றிய திருமூலர் ஒரு பெரிய விஞ்ஞானி ; அவர் பாடாத அறிவியல் விஷயம் எதுவுமில்லை.ஆங்கிலத்தில் A to Z ஏ to டு இசட் என்றால் அஸ்ட்ரானமி  முதல் ஸூவாலஜி ASTRONOMY to ZOOLOGY என்று சொல்லுவார்கள். திருமூலரும் வானவியல் முதல் விலங்கியல் வரை பாடியுள்ளார். அவர் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் . ஸம்ஸ்க்ருதத்தில் திருமூலருக்கு முன்னரே இந்த எல்லா விஷயங்களும் உள்ளன. திருமூலரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களையே பயன்படுத்தி இருப்பதும் அதை விளக்கும் உரைகளும் ஸம்ஸ்க்ருத சொற்களையே பயன்படுத்துவதாலும் இது நமக்கு நன்றாகவே விளங்கும். ஆயினும் திருமந்திரத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் அத்தனை கருத்துக்களையும் ஒரே நூலில் கொண்டு வந்திருப்பதாகும் . இனி அவரது பாடல்கள் மூலம் அறிவியலை அலசுவோம்.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் கணாதர் என்பவர் எழுதிய வைசேஷிக சூத்திரத்தில் कणाद वैशेषिकसूत्र அணு என்பதுதான் மிகச்சிறிய , பிரிக்க முடியாத பொருள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும் இதே கருத்தைத்தான் 2000 ஆண்டுகளாகக் கூறி வந்தனர். அப்படிப் பிரித்தால் பிரம்மாண்டமான சக்தி கிடைக்கும் என்பதை இரண்டாவது உலக யுத்த (1939-1945) காலத்தில் கண்டறிந்தனர் . அமரிக்கா  1945-ம் ஆண்டு அப்பாவி புத்த மத , ஷிண்டோயிச மத மக்களின் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை ஒரு சில வினாடியில் கொன்று குவித்தது. இது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களில் நடந்ததை நாம் அறிவோம்.

இப்படிப் பிரிக்க முடியும் என்பதும் பிரித்தால் பிரம்மாண்ட சக்தி எழும் என்பதும் இந்துக்களுக்குத் தெரியும். இதற்கு திருவள்ளுவ மாலையில் உள்ள இரண்டு பாடல்களும் திருமூலர் பாடல்களும் சான்று ஆகும்.

திருவள்ளுவ மாலையில் இடைக்காடர் பாடலில் , குறளின் பெருமையைக் கூறவந்த அவர் “கடுகை துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்” என்கிறார். அவ்வையார் புகழ்ந்த பாடலில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் என்கிறார். உலகின் 70 சதவிகித பரப்பு கடல்தான். நாம் வாழும் 200 நாடுகள் ஆக்கிரமிக்கும் பரப்பு 30 சதவிகிதம்தான். ஆக ஏழு கடலின் பரப்பு,  மிகப்பெரிய  சக்தியென்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் பாடினர்.

அணுவின் அற்புதமான ஆற்றல் 75 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் தான் உலகிற்கே தெரியும். ஒரு சிறிய அணுவைப் பிளந்தால் ஏழ் கடல் அளவுக்கு சக்தி வெளியாகும் என்பது, முதல் அணுகுண்டை வெடித்துப் பரிசோதித்த போதுதான் தெரியவந்தது. ஆனால் இதைக் கொள்கை அளவில் முதலில் கூறியவர் இடைக்காடர்தான். அதற்குப் பின்னர் திருமூலரும் பலரும் தமிழில் பாடிவைத்தனர்

அவ்வையாரையும் இடைக்காடரையும் மிஞ்சிவிட்டார் திருமூலர். அவர் குறைந்தது மூன்று பாடல்களில் சிறிய பொருள்களை பிரிப்பது பற்றிப் படுகிறார் . மயிர், தினை, அணு ஆகியவற்றைப் பிரிப்பது பற்றி  அவர் பாடுவதால் அவரை நிபுணர் என்றே சொல்ல வேண்டும்.

XXXX

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவியது கூறது ஆயிரமானால்

ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974

“Take one piece of cow’s hair and cut it into 100

Parts, then take one part of it and again cut it into

1000 parts, then take one part from that and again

cut it into another 10000 parts. The remaining 1 part

from those 10000 parts will resemble the size of the

Atom (Anu in Tamil)”.

சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் அணீயாம், மஹதோர் மஹீயாம்” என்று புகழ்கிறது ( கடவுள் அணுவுக்கும் அணுவானவன் பிரம்மாண்டமான மலையைவிடப் பெரியவன்).

XXXX

அணுவில் அணுவினைஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே”

 Lord is Atom-Within-Atom

The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom.– Tirumanthiram

பொருள்:

அணுவாகிய ஆருயிர்க்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் ஆவன். அவனைத் திருவருளுணர்வால் நுணுகி ஆராயவல்லார்கட்கு அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும். அணோரணீயாம்  மஹதோ மஹீயான் என்ற உபநிஷத் வாக்கியத்தை திருமூலர் மொழிபெயர்த்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அணுவை ஆயிரம் கூறு போடுதல் என்ற வரிகள் ஆகும். நடக்காத ஒன்றைப்  புலவர்கள் உவமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படிப் பயன்படுத்தினால் அதுவும் நடக்க முடியாத செயலாக இருக்கும்  திரு மூலரோ அடிக்கடி கூறுபோடுவதை பாசிட்டிவ் விஷயங்களில் ( நடக்கக்கூடிய) பயன்படுத்துவதால் இந்துக்களுக்கு இந்த அணுப்பிளப்பு அத்துப்படி என்றே சொல்லத் தோன்றுகிறது .

XXXX

இதோ நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய இரண்டு கட்டுரைகளில் உள்ள விஷயம்.

ஒரு கடுகில் 2,62,144 அணுக்கள் இருப்பதாக ஒரு பாடல் கூறுகிறது. இன்றைய இயற்பியல் கூறும் அணுவுக்கும் இதற்கும் தொடர்பில்லைதான். ஆனாலும் யாருமே நினைத்துக் கூடப் பார்க்காத கணக்குகளை நம்மவர் போட்டதை யாரும் மறுக்க முடியாது. 

இதோ ஒரு பழந்தமிழ்ப் பாட்டு:

அணுத் தேர்த் துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி

மணர் கடுகு நெல் விரலென்றேற—வணுத் தொடங்க

யெட்டோடு மண்ணு விரற் பன்னிரண்டார் சாணாக்கி

லச்சாணிரண்டு முழமாம் –(செந்தமிழ்த் தொகுதி12, பக்கம் 127)

8 அணு= ஒரு தேர்த்துகள்

8 தேர்த்துகள்= ஒரு பஞ்சிழை

8 பஞ்சிழை= ஒரு மயிர்

8 மயிர்= ஒரு மணல்

8 மணல்= ஒரு கடுகு

8 கடுகு= ஒரு நெல்

8 நெல்= ஒரு விரல்

12 விரல்= ஒரு சாண்

2 சாண்= ஒரு முழம்

4 முழம் =ஒரு கோல்

500 கோல்= ஒரு கூப்பீடு

4 கூப்பீடு= ஒரு காதம்

இம்மி என்னும் அளவு

தமிழர்கள் பேச்சு வழ்க்கில் பயன்படுத்தும் மிகச் சிறிய அளவு இம்மி. ஒரு இம்மி கூடப் பிசகவில்லை என்று கூறுவார்கள். இது பற்றி 1968 உலகத் தமிழ் மாநாட்டு மலரில் ஸ்தபதி கணபதி எழுதியது இதோ:

8 அணு= ஒரு தேர்த்துகள்

8 தேர்த்துகள்= ஒரு இம்மி

8 இம்மி= ஒரு எள்ளு

8 எள்= ஒரு நெல்

8 நெல்= ஒரு பெரு விரல்

 இன்னுமொரு வாய்ப்பாடு

1/8 அரைக்கால்

1/16 மாகாணி

1/32 அரை வீசம்

1/160 அரைக்காணி

1/320 முந்திரி

லிட்டர் அளவு முறை வருவதற்கு முன் தமிழ் நாட்டில் படி என்னும் அளவு பயன் படுத்தப்பட்டது. ஒரு படியில் இருக்கும் தானியங்கள்:

 அவரை=1800

மிளகு=12,800

நெல்=14000

பயறு=14,800

அரிசி=38,000

எள்= 1,15,200

XXXX

திருமந்திரத்தில் தினை

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்

சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்

தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்

கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.

(ப. இ.) பேரன்புவாய்ந்த மெய்யடியார்கள் காதலுடன் தன்னை நினைப்பார்களானால் அங்ஙனம் நினைப்பவரைச் சிவபெருமானும் திருவருளால் நினைந்தருள்வன். புருவநடுவாகிய சுழு முனையின்கண் அறிவுப் பேரொளியானை, நெஞ்சத்தாமரையினிடத்து விளைந்து மலரும் உள்ளொளியாக,  உறையும் சிவபெருமானைத் தினையைப் பிளந்தாலொத்த சிறுமையராயுள்ளாரும் திருவைந்தெழுத்தினையே எண்ணி அவ்வெண்ணத்தால் உறுதி எய்தியவுள்ளத்தின்கண் நினைப்பாராயின் அவ்வுள்ளம் உரனுடைய வுள்ளமாகும்.

மேலும் பல அறிவியல் கருத்துக்களைத் தொடர்ந்து காண்போம்.

–SUBHAM—

TAGS- அணுவில் அணுவினைமேவிய சீவன் வடிவதுதிருமந்திரத்தில், அணுகுண்டுதிருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 18

Leave a comment

Leave a comment