ராமாயணத்தில் சாபங்கள் (15) –   வசிஷ்ட புத்திரர்களுக்கு விஸ்வாமித்திரர் தந்த சாபம்! (Post.13,286)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.286

Date uploaded in London – 30 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (15)

ராமாயணத்தில் சாபங்கள் (15) –   வசிஷ்ட புத்திரர்களுக்கு விஸ்வாமித்திரர் தந்த சாபம்!

ச.நாகராஜன்

வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அளிக்கப்பட்ட திரிசங்கு  நேராக விஸ்வாமித்திரரிடம் சென்று சரணடைந்தான்.

அவர் நடந்ததை எல்லாம் அறிந்தார்.

பின்னர் திரிசங்குவிடம், “நீ என்னிடம் சரணம் அடைந்தாய். நீ விரும்பியபடியே இதே உடலுடன் நீ வானுலகம் செல்வாய்” என்று ஆறுதல் கூறினார்.

தனது சிஷ்யர்களை அழைத்து, “இதற்காக ஒரு யாகத்தைச் செய்ய இருக்கிறேன். ரிஷிகணங்கள் அனைவரையும் இங்கு அழைத்து வருவீராக. யாராவது ஒருவர் இதை நிந்தித்து ஏதேனும் சொல்வார்கள் ஆகில் அதை அப்படியே என்னிடம் வந்து சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டார்.

சிஷ்யர்களும் பல ஸ்தலங்களுக்குச் சென்றார்கள். எல்லா தேசங்களிலிருந்து வேதவித்துகள் வந்து சேர்ந்தார்கள்.

சிஷ்யர்கள் விஸ்வாமித்திரரிடம் வந்து, “அனைத்து தேசங்களிலிருந்து வேத வித்துகள் வந்து விட்டனர். ஆனால் வசிஷ்டரின் பிள்ளைகளான அந்த நூறு பேர் மட்டும் விஸ்வாமித்திரரால் ரக்ஷிக்கப்பட்டாலும் கூட அந்த சண்டாளன் எப்படி ஸ்வர்க்கத்திற்குச் செல்வார் என்று கேட்டனர். மஹோதயரும் அங்கு இருந்தார்” என்று கூறினர்.

இதைக் கேட்ட விஸ்வாமித்திரர் கோபத்தால் கண்கள் சிவந்து கூறலானார்.

யே துஷ்யன்ந்த்யதுஷ்டம் மாம் தப உக்ரம் சமாஸ்திதம் |
பஸ்மீபூதா துராத்மானோ பவிஷ்யந்தி ந சம்ஸய: ||

யே – எந்த

துராத்மன: துராத்மாக்கள்

அதுஷ்டம் – குற்றமற்றவனும்

உக்ரம் – உக்கிரமான

தப: – தவத்தை

சாமாஸ்திதம் – கைக்கொண்டிருக்கிறவனுமான

மாம் – என்னை

தூஷயந்தி – தூஷிக்கிறார்களோ, அவர்கள்

பஸ்மீபூதா: – பொசுங்கி சாம்பலாக

பவிஷ்யதி – ஆகி விடுவார்கள்.

சம்ஸய: ந – இதில் சந்தேகமில்லை.

அத்யதே காலபாஷேன நீதா வைவஸ்தக்ஷயம் |

சப்தஜாதிசதான்யேவ ம்ருதபா: சந்து சர்வஷ: ||

தே – அவர்கள்

காலபாஷேன – கால பாசத்தால்

அத – இன்றைய தினமே

வைவஸ்தக்ஷயம் – யமன் வீட்டை அடைந்தவர்களாய்

சப்தஜாதிசதானி – எழுநூறு ஜன்மம்

சர்வஷ: – எப்பொழுதும்

ம்ருதயா ஏவ – சவ மாமிசங்களைப் புசிப்பவர்களாகவே

சந்து – ஆகட்டும்

ஸ்வமாம்ஸநியாதாஹாரா முஷ்டிகா நாம நிர்த்ருணா: |
விக்ருதாக்ஷ விரூபாக்ஷ லோகாநனுசரந்தித்வமான் ||

ஸ்வமாம்ஸநியாதாஹாரா – நாய் மாமிசத்தை நியதமாய் சாப்பிடுபவர்களாய்

விக்ருதா: ச – விகாரமான காரியங்களைச் செய்பவர்களாயும்

விரூபா: ச – விகார ரூபமுடையவர்களாயும்

முஷ்டிகா: – முஷ்டிகர்கள் என்ற

நாம – பெயரை படைத்து

நிர் த்ருணா – தயா தாக்ஷிண்யமில்லாதவர்களாய்

இமான் – இந்த

லோகான் – உலகங்களில்

அநுசரந்து – அலையட்டும்

மஹோதயஸ்ச துர்புத்திமார்மதூஷய்ம் ஹ்ருதூஷயத் |

தூஷித: சர்வ லோகேஷு நிபாதத்வம் கமிஷ்யதி ||

துர்புத்தி: – துர்புத்தியாகிய

மஹோத்ய: ச – மஹோதயனும்

அதூஷ்யம் – அவமதிக்கத்தகாத

மாம் – என்னை

அதூஷயது – அவமதித்தான்

ஹி – ஆகையால்

சர்வ லோகேஷு – எல்லா உலகங்களிலும்

தூஷித; – நிந்திக்கப்பட்டவனாய்

நிஷாதத்வம் – வேடத்தன்மையை அவன்

கமிஷ்யதி – அடைவான்

ப்ராணாதிபாதநிரதோ நிரனுக்ரோஷதாம் கத |

தீர்க காலம் மம க்ரோதாத்துர்கதிம் வர்தயிஷ்யதி ||

மம – என்னுடைய

க்ரோதாத் – கோபத்தால்

தீர்க காலம் – நீடித்த காலம்

ப்ராணாதிபாதநிரத: – உயிர்களைக் கொல்வதே காரியம் உடையவனாய்

நிரனுக்ரோஷதாம் – தயை தாக்ஷிண்யம் இல்லாதிருத்தலை

கத: – அடைந்தவனாய்

துர்கதிம் – இழிந்த பிறப்பை

வர்தயிஷ்யந்தி – அடைவான்

ஏதாவதுக்த்வா வசனம் விஸ்வாமித்ரோ மஹாதப|: |

விரராம மஹாதேஷா ருஷிமத்யே மாஹாமுனி: ||

மஹாதபா: – மஹா தபஸ்வியும்

மஹா தேஜா: – மஹா தேஜஸ்வியும்

மஹா முனி: – மஹாமுனிவருமான

விஸ்வாமித்ர – விஸ்வாமித்திரர்

ருஷி மத்யே – முனிவர்களின் நடுவில்

ஏதாதத் – இவ்வாறான

வசனம் – வார்த்தையை

உக்த்வா – சொல்லி

விரராம – ஓய்ந்தார்

இந்த ஸ்லோகங்கள் பாலகாண்டம், 59-ம் ஸர்க்கத்தில் 17 முதல் 22 முடிய உள்ள ஸ்லோகங்களாகும்.

இப்படியாக விஸ்வாமித்திரர் வசிஷ்ட புத்திரர்களையும் மஹோதயரையும் சபித்தார்.

இந்த வரலாற்றை விரிவாக பாலகாண்டம் 58 மற்றும் 59-ம் ஸர்க்கங்கலில் காணலாம்.

**

Leave a comment

Leave a comment