
Date uploaded in London – – 31 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
XXXXX
491. பித்தத்தால் கண்ட உதடு நாக்கு வெடிப்புக்கு
மரு மாங்காயிலையை அரைத்து புன்னைக்காயளவு எடுத்து பசும்பாலில் கலக்கி காலையில் சாப்பிடவும். மூன்று நாள் சாப்பிடவும். ; பத்தியம் பால் சாதம்.
XXXX
புண்களுக்கு
மஞ்சள் பொடியை புண்ணின் பேரில் தூவி வந்தால் சிவந்து ஆறிப்போகும். இலுப்பைக்கட்டி தேய்த்து குளிக்கவும்.
XXXX
தாது விருத்திக்கு
மகிழம் வித்தை அரைத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் தாது விருத்தி யுண்டாம்
XXXX
ஓடு வாய்வுக்கு
மலை வேம்பின் மூலத்தைப் பாலில் உரவாக்கி உண்டு வந்தால் மலக்கட்டு கிருமி உடலில் ஓடி ஓடி குத்துகிற வாய்வு தீரும்.
XXXX


நீரிழிவு பிரமேகத்திற்கு
மருத மரத்தின் சமூலத்தைப் பாலிற் கொள்ள நீரிழிவு பிரமேகம் மயக்கம் தாகம் கபம் வயிற்று வலி கிருமி இவை தீரும் .
XXXX
எரிகுட்டம் வண்டு கடிக்கு
மருள் கிழங்கை பாலில் அரைத்து பாலில் கலந்து உண்டு வந்தால் கரப்பான் புண் எரிகுட்டம் சிலந்தி வண்டு கடி இவை தீரும் .
XXXX
நாதம் கட்ட
மரவீழிக் கிழங்கைப் ((மரவள்ளிக்கிழங்கு ??? )) பாலில் அரைத்து கலந்து உண்டு வந்தால்மூலக் கிரிச்சினம் மேக வேட்டை தீரும். காமம் அதிகரிக்கும். நாதம் கட்டுப்படும். நாவில் அமுதம் ஊரும் .
XXXX
திரேக பலம் உண்டாக
மரவீழிக் கிழங்கைப் பாலில் அவித்து உலர்த்தியிடித்து தூள் செய்து வறுத்த உளுந்த மாவும் எள்ளுப்பொரியும் சமன் கலந்து திருகடியளவு சாப்பிட்டு வந்தால் திரேக பலம் உண்டாகும்.
XXXX
மேனியழகு உண்டாக

மகா மூலி என்ற ஆகாச கருடன் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு ஆவின் பாலில் உண்டு வந்தால் நரை திரை மாறும். மேனி அழகு உண்டாகும்.
சர்வ நோய்களும் விஷக் கடிகளும் தீரும். பத்தியம் பாலும் அன்னமும் உண்ணவும்; புளி புகை ஆகாது.
XXXX
மா
மாதவிடாயுண்டாக
மாவிலங்கம் பட்டை உள்ளி மிளகு இம்மூன்றும் சமனிடை கொண்டு அரைத்து விழுது கொட்டைப் பாக்களவு மூன்று நாள் காலையில் கொடுக்க மாதவிடாய் உண்டாகும்.
XXXX
வெட்டுக் காயத்தின் உதிரப் பெருக்கு நிற்க
மாசிக்காய்களைச் சுட்டு அந்த சாம்பலை வைத்து அழுத்த உதிரப் பெருக்கு நிற்கும்.
XXXX
மேகக் கடுப்புக்கு
மாதுளம் வித்தை அரைத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் ,மேக க் கடுப்பு சுக்கில தோஷம் இவை தீரும்.
XXXXX
இரத்தக் கடுப்புக்கு
மாங்கொட்டைப் பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் இரத்தக் கடுப்பு சீதக் கடுப்பு இவை தீரும்.
XXXX

சுரோணிதக் கட்டுக்கு
மாவிலங்கம் மூலத்தைப் பாலில் கொள்ள , சுரம்- வெட்டை – சூலை – சுரோணிதக் கட்டு- கல்லடைப்பு – நீரடைப்பு இவை தீரும்.
XXXX
504- சூதகக் கட்டுக்கு
மாவிலங்கம் பட்டை- மூங்கில் இலை – சித்திரமூலவேர்- சதகுப்பை- சுக்கு- திப்பிலி – இவைகள் சம னிடை கொண்டு படி தண்ணீர் வைத்து வீசம் படியாக இறக்கி வடிகட்டி பன வெட்டுக் கொஞ்சம் போட்டு கொடுக்கவும். இப்படி மூன்று வேளை கொடுத்தால் பிரசவ காலத்தில் தடைப் பட்டிருக்கும் சூதகத்தை உடைக்கும்.
தொடரும் …………………………………….
tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், Part 40