Date uploaded in London – 21 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
புருஷ – நாம எண் 14-
புரம் எனப்படும் சரீரத்தில் இருப்பவர்.
மஹாபாரத சாந்தி பர்வம் 21-37 சொல்வதாவது
நவத்வாரம் புரம் புண்யம் ஏ தைர் பவைஹி சமன்விதம்
வ்யாப்ய சேதே மஹாத்மா யஹ தஸ்மாத் புருஷ உச்யதே
பொருள்
பரம்பொருள் 9 வாசல்களைக் கொண்ட புரம் என்னும் உடலில் வசிக்கிறது .அதனால் புருஷன் என்கிறோம்.
ஏற்கனவே வசித்தவர் என்ற பொருளும் உண்டு. இன்னும் ஒரு பொருளும் உண்டு. பூரணத்தை /முழுமையை உண்டாக்குபவன்.
மஹாபாரத உத்யோக பர்வம் 7-11 சொல்லுவதாவது
பூரணாத் சதநாத் சைவ ததோ செள புருஷோத்தமஹ
கடவுளை புருஷோத்தமன் என்று சொல்லுவதற்கு காரணம் அவன் எல்லாவற்றையும் நிரப்பி/ வியாபித்து அதை நிலை நிறுத்துகிறான்.
என் கருத்துக்கள்
நவத்வார புரி — ஒன்பது வாசல் கோட்டை — என்று உடலை வருணிப்பது பகவத் கீதை முதல் தமிழ் தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தம் வரை எல்லா நூல்களிலும் உள்ளது ஆனால் வேறுயெந்த மதத்திலும் கலாசாரத்திலும் இதைக் காண முடியாது
பகவத் கீதை 5-13 சொல்கிறது-
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக²ம் வஸீ²|
நவத்³வாரே புரே தே³ஹீ நைவ குர்வந்ந காரயந் ||5-13||
வஸீ² தே³ஹீ = தன்னை வசங்கொண்ட ஆத்மா
ந குர்வந் ந காரயந் ஏவ = எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி
நவத்³வாரே புரே = ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய = எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து
ஸுக²ம் ஆஸ்தே = இன்புற்றிருக்கிறான்
தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.
xxxxx
யோகஹ -நாம எண் 18
யோகத்தால் அடையத்தக்கவர் அல்லது முக்திக்கு உபாயமாகவும் தானே ஆகியவர்.யோகம் என்பதைக் கீழ்கண்ட ஸ்லோகம் வரையரை செய்கிறது:
ஞானேந்திரியாணி ஸர்வாணி நிருத்திய மனசா ஸஹ
ஏகத்வ பாவனா யோகஹ க்ஷேத்ரக்ஞ பரமாத்மனோ
பொருள்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஐக்கியமாவதை மனத்தால் சிந்திப்பது யோகம் ஆகும்.
XXXX
க்ஷேத்ரஜ்ஞஹ – நாம எண் –16
க்ஷேத்ரம் என்னும் சரீரத்தை அறிபவர்.
பகவத் கீதையில் கிருஷ்ணன்13-2 சொல்கிறார் :
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||
பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
மனு சொல்வதாவது:
யோஅஸ்யாத்மனஹ காரயிதா தம் க்ஷேத்ரஜ்ஞம்ப்ரசக்ஷதே
யஹ கரோதி து கர்மாணி ஸ பூதாத்மா இத் யுச்யதே புதைஹி
ஜீவ சம் ஜ்னோ அந்தரசஸ்திம்ஸ்சண்யாஹ சஹஜஹ ஸர்வ தேஹினாம் – மனு ஸ்ம்ருதி
xxxx
ஸர்வஹ – நாம எண் 25
எல்லாமாயிருப்பவர்
பகவத் கீதை 10-8 சொல்வதாவது-
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥१०- ८॥
அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||
அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வ: = நான் அனைத்திற்கும் தொடக்கம்
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே = என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது
இதி மத்வா = என்று புரிந்து கொண்டு
பா⁴வஸமந்விதா: பு³தா⁴:= நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள்
மாம் ப⁴ஜந்தே = என்னை தொழுவார்
நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.
விஷ்ணு புராணம் சொல்கிறது ,
யஜன் யக் ஞான் யஜத்யேனம் தபத்யேனம் ஜபன் ந்ருப
நிக்னன் – னன்யான் ஹினஸ்த்யேனம் ஸர்வ பூதோ யதோ ஹரிஹி
மஹாபாரதம் உத்யோக பர்வம் 70-11 சொல்கிறது –
அஸதஸ் ச சதஸ்‘சைவ ஸர்வஸ்ய ப்ரபவா ய்யாத்
ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேவம் பிரசக் சதே
பொருள்
ஸ்தூலமாயும் நுணுக்கமாயுமுள்ள எல்லாவற்றுக்கும் மூல ஆதாரமாக இருப்பதாலும் எல்லாவற்றையும் எல்லாக்கா லத்திலும் அறிவதாலும் அவரை ஸர்வ என்கிறார்கள் .
XXXX
க்ருஷ்ணஹ– நாம எண் 57
கரிய நிறம் படைத்தவர் அல்லது ஸச்சிதானந்த வடிவினர்.
மஹாபாரத உத்யோக பர்வம் கூறுவதாவது-
க்ருஷிர் பூவாசகஹ சப்தோநஸ் ச நிர்வ்ருத்தி வாசகஹ
விஷ்ணுஸ் தத் பாவ யோகா ச க்ருஷ்ணோ பவதி சாஸ்வதஹ
பொருள்
க்ருஷ் என்றால் நிலையாக இருப்பது ; ந என்றால் ஆனந்தமாக இருப்பது; விஷ்ணு என்பது இதுதான் ஆகையால் அவர் எப்போதும் க்ருஷ்ண.
ஸச்சிதானந்த ரூபாய க்யுக்லிஷ்ட்ட க்ருஷ்ணாயாக்லிஷ்டகாரிணே
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்திசாக்ஷிணே – சங்கரர்.
ஸத் +சித் +ஆனந்த = சச்சிதானந்த
XXXX
மங்களம் பரம் – நாம எண் 63-
சிறந்த மங்கள வடிவினர் .
அல்லது வழிபடுவோருக்கு சிறந்த நலன்களை அருள்பவர்
விஷ்ணு புராணம் சொல்கிறது-
அசுபானி நிராசஷ்டே தனோதி ஸு ப ஸந்ததிம்
ஸ்ம்ருதி மாத்ரேண யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன் மங்கலம் விதுஹு
பொருள்
எவர் ஒருவரை நினைத்தாலே சுபமற்றவை நீங்குகிறதோ , அபரிமிதமாக சுபங்களை அருள்கிறதோ அந்த பிரம்மனையே மங்களம் என்கிறோம் என்று எல்லாம் அறிந்தோர் சொல்லுவர் . அத்தோடு அதிஉயர்ந்த / பரம் என்பது அதிக மங்களம் என்பதாகும்
XXXX
வ்ருஷா கபிஹி – நாம எண் 101
தர்ம ரூபியாகவும் வராக ரூபியாகவும் இருப்பவர். எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்ம வ்ருஷஹ (மழை ) எனப்படும். காத் நீரிலிருந்து பூமியை அபாத் காப்பாற்றியதால் வராகம் கபி எனப்பட்டது. .
மஹாபாரத சாந்தி பர்வம் 342-89 சொல்லுவதாவது-
கபிர் வராஹக ஸ்ரேஷ்ட ஸ் ச தர்மஸ் ச வ்ருஷ உச்யதே
தஸ்மாத் வ்ருஷா கபிம் ப்ராஹ காஸ்யபோ மாம் ப்ரஜாபதிஹி
பொருள்
கபி என்றால் வராஹம் (காட்டுப் பன்றி) சிறந்தது என்ற பொருளும் உண்டு.. ஆகையால் காஸ்யப ப்ரஜாபதி அவரை வ்ருஷா கபி என்று அழைக்கிறார்.
–SUBHAM–
விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் Part 8