விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-9 (Post No.13,369)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,369

Date uploaded in London – 22 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ருத்ரஹ –  நாம எண் 114-

துக்கத்தையும் துக்கத்தின் காரணத்தையும் ஓட்டுகிறவர் .

தனது திவ்ய ரூபத்தாலும் லீலைகளாலும் பக்தர்களை நெஞ்சுருகிக் கண்ணீர்விடும்படி செய்பவர்

லிங்க புராணம் கூறுவதாவது-

ருர் :துக்கம்  துக்க ஹேதும் வா வித்ராவயதி ச ப்ரபுஹு

ருத்ர இத்யுச்யதே தஸ்மாத் சிவஹ பரமகாரணம்

பொருள்

ரு என்றால் துக்கம்; இறைவன் துக்கத்தையும் துக்கத்திற்கான

 காரணங்களையும் நீக்கும் மூல புருஷன் சிவ – ருத்ரன் எனப்படுகிறான் .

XXXX

வேதஹ – நாம எண் –127

வேத வடிவானவர்.

பகவத் கீதை சொல்கிறது 15-15

सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।

वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15|

எல்லோருடைய இருதயத்திலும் நான் இருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

xxxx

சதுராத்மா – நாம எண் 137

நான்கு மூர்த்திகளை உடையவர் .

சிருஷ்டி -ஸ்திதி- லயம் என்னும் தோற்றம்,  நிலைத்தல் , அழித்தல்  ஆகிய மூன்றிலும் நாலு நாலு அணிகள் உள்ளன .

விஷ்ணு புராணம் 22-31/33 சொல்வதாவது,

ப்ரஹ்மா தக்ஷாதயஹ  காலஸ் ததைவாகில ஜந்தவஹ

விபூதயோ ஹரே ரேதா ஜகதஹ ஸ்ருஷ்டி ஹேதவஹ

விஷ்ணுர் மன்வாதயஹ காலஹ ஸர்வ பூதானி ச த்விஜ

ஸ்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதயஹ

ருத்ரோ கால அந்தகாத்யாஸ்ச  ஸமஸ்தா ஸ்சைவ   ஜந்தவஹ

சதுர்த்தா ப்ரலயாயை தா ஜனார்த்தன விபூதயஹ

பொருள்

பிரம்மா போன்ற ப்ரஜாபதிகளும்,, தக்ஷ, கால, ஜீவர்கள் படைப்புத் தொழிலுக்கான சக்திகள்.

விஷ்ணு, மனு, , கால, உயிரினங்கள்  ஆகிய நான்கும் விஷ்ணுவின்  நிலைத்தல் சக்திகள் .

ருத்ரன் காலம், மரணம், உயிரினங்கள் ஆகிய நான்கும் மகாவிஷ்ணுவின் அழித்தல் சக்திகள் .

xxxx

பேந்த்ரஹ- நாம எண் – 151

இத்திரனுக்குத் தம்பியாகியவர்.அல்லது இத்திரனுக்கும் மேலான இத்திரனாகியவர்.

ஹரிவம்சம் 2-19-46 சொல்லுவதாவது,

மமோபரி யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபி-ரீஸ்வரஹ

உபேந்த்ர இதி  க்ருஷ்ணத்வாம் காஸ்யந்தி புவி தேவதாஹா

பொருள்

பசுக்கள் உன்னை எனக்கும் மேலான எஜமானனாக நியமித்து விட்டன .

ஓ கிருஷ்ணா ! ஆகையால் உன்னை தேவர்கள் உபேந்த்ரன் என்று போற்றித்  துதிப்பார்கள்

 xxxx

பிராம்சுஹு – நாம எண் 153

மூவுலகையும் அளந்தபோது உயர்ந்தவர் .

ஹரிவம்சம் 3-71-43/44 சொல்லுவதாவது-

தோயே து பதிதே ஹஸ்தே வாமனோ பூதவாமனஹ

ஸர்வ தேவ மயம் ரூபம் தர்சயாமாஸ வை ப்ரபுஹு

பூ பாதெள த்யவ்ஹு சிரஸ் சாஸ்ய சந்த்ராதித்யத்வ ச சக்ஷுஸி

பொருள்

கேட்ட தானத்தைத் தருவதற்காக மஹாபலி தாரை வார்க்க கைகளில் ஜலத்தினை விட்ட தருணத்தே வாமனன் அதற்கு நேரான பெயருள்ளவனாக மாறினான் அப்போது பெருமாள் தனது சுய ரூப்பத்தைக் காட்டினார் .அந்த உருவத்தில் எல்லா தேவர்களும் இருந்தனர். அவருடைய கால்கள் பூமியாகவும் தலை வானம் ஆகவும் சந்திர சூரியர்கள் கண்களாகவும் பிரகாசித்தன.

(ஓங்கியுலகளந்த உத்தமன்- திருப்பாவை )

-சுபம் –

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 9

Leave a comment

Leave a comment