
Date uploaded in London – 25 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-11(Post.13,379)
Date uploaded in London – 25 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஸிபிவிஷ்டஹ –நாம எண் 273
ஒளிக்கிரணங்களில் ஊடுருவி நிற்பவர் அல்லது யாகப் பசுக்களிடத்தில் யாக ரூபியாக உறைபவர்.
ஸிபி என்றால் பசுக்கள்.
ஸைத்யாச் சயன யோகாச் ச ஸீதிவாரி ப்ரேச க்ஷதே
தத்பாநாத் ரக்ஷணாச் சைவ ஸிபயோ ரஸ் மயோ மதாஹா
தேஷூ ப்ரவேஸாத் விஸ்வேஸஹ ஸிபிவிஷ்ட இஹோச் உச்யதே
பொருள்
தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதால் அதை ஸி என்பர்; ஏனென்றால் அதில் மஹாவிஷ்ணு சயனம் செய்கிறார்.
சூரியனின் கிரணங்களை ஸிபி என்பர். ஏனென்றால் அது தண்ணீரை உறிஞ்சி தன்னகத்தே வைத்துக்கொள்கிறது.அவைகளுக்குள் விஷ்ணு புகுந்துவிட்டதால் விஷ்ணுவை ஸிபிவிஷ்ட. என்கிறோம்.
xxxxx
சிஷ்டேஷ்டஹ –நாம எண் 310-
ஞானிகளுக்குப் பிரியமானவர் – அவர்களால் பூஜிக்கப்படுபவர்
இதை பகவான் கிருஷ்ணரே பகவத் கீதையில் 7-17 சொல்கிறார்.
तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः॥१७॥
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஸி²ஷ்யதே|
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||
அவர்களில் நித்திய யோகம் பூண்டு பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் பிரியமானவன் ; அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்-7-17
இதைக் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும்நாலாவது குறளுடன் ஒப்பிடலாம்.
எல்லாம் அறிந்த ஞானி இறைவனை வழிபடுவதால் கடவுளே எல்லா துன்பங்களையும் நீக்கி விடுவார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.-4
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
xxxx
வ்ருஷ – நாம எண் 313
அடியார்கள் விரும்பியவற்றை மழை போலப் பொழிபவர் அல்லது தரும வடிவினர்.
மஹாபாரதம் சாந்தி பர்வம் 352-23 சொல்கிறது
விருஷோ ஹி பகவான் தர்மஹ ஸ்ம்ருதோ லோகேஷு பாரத
நை கண்டுக பதாக்யானைர் வித்தி மாம் வ்ருஷமுத்தமம்
பொருள்
நிகண்டுகளில் போற்றுதற்குரிய தர்மம் வ்ருஷ என்று கூறப்பட்டுள்ளது ஆகையால் பார்த்தா ! என்னை வ்ருஷ என்று அறிவாயாக.
xxxx
வாசுதேவ ஹ — நாம் எண் 332
அனைத்திலும் உறைந்து விளையாடுபவர் . எல்லாவற்றிலும் வசித்தும் எல்லாவற்றையும் மாயையால் மறைத்து வைத்தும் இருப்பதால் வாசு எனப்படுகிறார். விளையாடுவதாலும் , ஜெயிப்பதாலும் , பிரவிருத்தி நிவ்ருத்திகளை உண்டாக்குவதாலும் , பிரகாசிப்பதாலும், மோக்ஷத்தை கருதுகிறவர்களால் துதிக்கப்பெறுவதாலும் தேவர் எனப்படுகிறார்.
மஹாபாரதம் சாந்தி பர்வம் சொல்கிறது :
சாதயாமி ஜகத் விஸ்வம் பூத்வா ஸூர்ய இவாம்சுபிஹி
ஸர்வ பூதாதி வாஸஸ்ச வாஸு தேவஸ்ததஹ ஸ்ம்ருதஹ
சூரியனாக மாறி நான் உலகம் முழுதும் கதிர்களைப் பரப்புகிறேன்.எல்லாரிடத்திலும் வசிக்கிறேன் .. அதனால் என்னை வாசு தேவ என்கிறார்கள்
***
மஹாபாரத உத்யோக பர்வம் 70-3 கூறுவதாவது:
வஸனாத் ஸர்வ பூதானாம் வஸூத் வாத் தேவ யோனிதஹ
வாஸு தேவஸ்ததோ ஞேயோ யோகிபிஸ் தத்வ தர்ஸி பிஹி
எல்லா தேவர்களுக்கும் உறைவிடமாகவும் , எல்லா மக்களுக்கும் உறைவிடமாகவும் இருப்பதால் அவரை வாசு தேவ என்று சொல்ல வேண்டும்.
—மஹாபாரதம்
***
விஷ்ணு புராணம் சொல்வதாவது:
ஸர்வத்ராஸ்செள சமஸ்தஞ் ச வஸத்ரயேதி வை யதஹ
ததஹ ஸ வாஸு தேவேதி வித்வத்பிஹி பரிபட்யதே
பரமாத்மாவானவர் எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் வசிப்பதால் அறிஞர்கள் அவரை வாசுதேவ என்கிறார்கள் .
ஸர்வாணி தத்ர பூதானி வஸந்தி பரமாத்மனி
பூதேஷு ச ஸ ஸர்வாத்மா வாஸு தேவஸ்ததஹ ஸ்ம்ருதஹ
பரமாத்மாவை வாசுதேவ என்பதற்கு காரணம் அவரிடத்தில் எல்லோரும் வசிக்கிறார்கள் ; அபவர் எல்லோரிடத்திலும் வசிக்கிறார்.
விஷ்ணு புராணம் 1-2-12 & 6-5-80
xxxx
ப்ருஹத்பானுஹூ — நாம எண் 333-
விஸ்தாரமாக எங்கும் பரவி நிற்கும் கிரணங்களை உடையவர் .
ப்ருஹந்தோ பானவோ யஸ்ய சந்த்ர சூர்யாதி காமினஹ
விஸ்வம் ஜகத் பாஸயதி ஸ ப்ருஹத்பானுருச்யதே
சந்திர சூர்ய கிரணங்கள் எவரிடத்தில் உறைகின்றனவோ , உலகையெல்லாம் எவர் பிரகாசிக்கச் செய்கிறாரோ அவரை ப்ருஹத்பானு என்று அழைக்கிறோம்.
— subham—
Tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், part-11