Date uploaded in London – 28 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Buddhist Manjushri
திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 29
பகவத் கீதையில் கிருஷ்ணன் பயன்படுத்திய ஞானச் சொற்களை முன்னரே எழுதினேன் ; பாரதியாரும் ஆழ்வார்களும் ஞான விளக்கு, ஞான தீபம், ஞான வாள் முதலியன பற்றிப் பாடியதை முன்னர் கண்டோம். திருமூலர் அவர்களுக்குச் சளைத்தவர் இல்லை ; ஞானம் என்ற சொல்லை நிறைய இடங்களில் பயன்படுத்துகிறார் . முதலில் கீதையை ஓப்பிடுவோம் .
பகவத் கீதையில் ஞானம் ( பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும்) பின்வருமாறு
ஞானப் படகு – 4-36
ஞான விளக்கு- 10-11
ஞானத் தீ – 4-3, 19
ஞானக் கண் – 15-10
ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70
ஞானத் தவம் – 4-10
ஞான யோகம்- 3-3; 16-1
அப்பர் தேவாரத்தில் பகவத் கீதைச் சொற்கள் ஏராளமாகப் பயிலப்படுகின்றன. மிகவும் குறிப்பிடத்தக்கது
ஞானப் பெருங்கடலுக்கு ஒரு கப்பல்!
நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன் காண்,
ஞானப் பெருங்கடலுக்கு ஓர் நாவாய் அன்ன
xxxx
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் — (பூதத்தாழ்வார்)
xxxx
“பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயை எல்லாம் ஞானம் எனும்
வாளாலே அறுத்துத் தள்ளி….. (பாரதியார் பாடல்)
xxxxx
கிபி. 600 ஆம் ஆண்டில் வாழ்ந்த சம்பந்தரின் பெயரே ஞான சம்பந்தன். அப்பரும் சம்பந்தரும் ஞான சொற்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு சற்று முன்னர் வாழ்ந்த மாணிக்க வாசகர் ஞான்ச் சாரலை அள்ளித்தெளித்திருக்கிறார். இவைகளை பார்க்கும் போது பகவத் கீதையின் தக்கத்தைக் காண மு டிகிறது கீதையின் இரண்டு அத்தியாயங்களுக்கே ஞான – சொல்லுடன் தலைப்பு அமைந்துள்ளது.
மாணிக்க வாசகரின் திருவாசகத்தில் காணப்படும் ஞான சொற்கள் :-
ஞான நாடகம் , ஞானக் கரும்பு, ஞான சுடர், ஞான வாள் .
இவை தவிர எட்டு இடங்களில் ஞானம், ஞானி சொற்களை மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் காணலாம்.
குறிப்பாக ஞான வாள் பாரதியார் பாடல் வரை வந்துள்ளது!
xxxx
திருமந்திரத்தில் 406, 877, 1033, 1335, 1423, 1403, 1416, 1454, 1500, 1541, 1605, 1640, 1814, 1860, 1858, 1913, 2000, 2167, 2277, 2285, 2598, 2677, 2695, 2755, 2747, 2782, 2777, 2807, 2803, 2927,
(சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் நூல் எண்கள் இவை )
ஞானக் கொழுந்து (406), ஞானத் தலைவன் (878), ஞானக் கொம்பு (1033), ஞானப் பொருள் (1335), ஞானபூபதி, ஞானோதயம் (1403) ஞான நிர்வாணம் (1449), ஞான சமாதி (1605) ஞான வேடம் (1640), ஞான முத்திரை (1860), ஞானத் தறி (2000)
இன்னும் நிறைய சொற்கள் இருக்கலாம். நான் 1997 / 98ம் ஆண்டுகளில் படித்தபோது எடுத்த நோட்ஸிலிருந்து தொகுத்தவை இவை.
xxxxx

ஞான வாள்
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.
அத்தகைய நமன்றன் தூதுவர் சிவனைமறவா நமக்கு உறவாவர். மறந்து வருவரேல் அடியேன் சிவன்றன் மீளாவடிமை என்று தாமே உணருமாறு அவன்றன் அடையாளமாகிய நமச்சிவாய என்னும் ஆயுதத்தை வெளிப்பட வழுத்துவேன். இதுவே ஞானவாள்.
சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு’ என்பது முதுமொழி அத்தகைய சிவத்தைப் பேணும் சிந்தையர்க்கு எதிராவர் யாரே? ஒருவரும் இலர் என்பதாம்.
2968: Their Thought Power
If God of Death comes,
I shall smite him with Sword of Jnana,
If Siva comes,
I am sure to go with Him;
Long back had I sundered Karma,
To birth leads;
Who can stand against Thought,
Of intense devotion born?

xxxx
ஞானக் கொழுந்து
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.
யாக யக்ஞங்கள் வழியாகஅருகில் சென்றாலும் சிவன் தூரத்தே நிற்பான் .ஆனால் அன்புடன் பணிந்து நின்றாள் அவன் ஞானக் கொழுந்தினை நல்குவான் . நமக்கு முக்தியை நல்குவான்
420: He Grants Immortal Body to Those Who Seek Him in Love
Well may you seek Him
Through rituals before fires,
Distant only shall He be;
Seek Him in yearning love
Bend low on ground
Hanker after Him life after life,
The great One Shall Grant you the body immortal.
1500 ம் பாட்டிலும் , 1541 ம் பாட்டிலும் மீண்டும் ஞானக் கொழுந்து வருகிறது.
xxxx
ஞானத் தலைவன்
897. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 14
897: The Lord is Supreme
He is the Lord who stood dancing eternal;
He is the Lord who the holy one is;
He is the Lord who unfolds Jnana’s honey-laden Flower;
He is the Lord whose Feet are holy beyond peer.
அழிவே இல்லாமல் எப்போதும் ஆடும் தலைவன் அவன்
புனிதமானவன்; தே ன் உள்ள ஞான மலரை நமக்கு அளிப்பவன்.
2285, 2755-ல் மீண்டும் ஞானத் தலைவன் வருகிறது.
xxxx
போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. 13
பராசக்தியானவள் பக்தர்களின் ஞானம் படரும் கொழுகொம்பாக நிற்கிறாள்
அவளி டமிருந்தே இன்பம் யாவும் பெருகுகிறது. சுருள் முடியாளின் அருள் சுரக்கிறது.
அவள் பராசக்தி; சிவனின் ஒரு பாகத்தைப் பகிர்ந்து கொண்டவள்; பக்தர்களின் உள்ளத்தில் பெருகும் ஞானக்கொடி படர ஆதரவு அளிக்கிறாள்
1057: She is Support for Devotees’ Jnana
From Her emanates all enjoyments,
She is of curly tresses that Grace grants,
She is Para Sakti that shares Siva’s Form,
She stands as support
For tender Jnana Vine,
That Her devotees daily in their hearts grow.
xxxx
1335ம் பாடலில் ஞானப்பொருள் என்ற சொல்லை திருமூலர் பயன்படுத்துகிறார்.
xxxx
1428. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. 2
1428 Greatness of Jnani in Suddha Saivam
The blemishless Jnani is king of Wisdom’s realm,
He is the Sun, whose beams pierce the massive lore of Vedanta-Siddhanta
His is salvation True
He, the immortal one
And devoted true to Suddha Saiva way.
xxxxx
அடுத்த கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.
To be continued…………………………………..
—subham—
Tags- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 29, அழகிய சொற்கள், ஞான வாள், ஞான பூபதி, ஞானத் தலைவன், ஞானப்பொருள், ஞானக் கொழுந்து