மேலும் 31 சாணக்கியர் பொன் மொழிகள்– ஜுலை 2024 நற்சிந்தனை காலண்டர் (Post No.13,390)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,390

Date uploaded in London – 29 JUNE 2024                                    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முன்னர் வெளியான எனது அர்த்தசாஸ்திர, சாணக்கியர் பொன்மொழிக் கட்டுரைகள் :-1

1.சாணக்கியரின் 31 பொன்மொழிகள்; மே 2022 நற்சிந்தனை காலண்டர் (Post No.10,912)

WRITTEN BY LONDON SWAMINATHAN,Post No. 10,912,Date 30 APRIL  2022   

2.மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

3.கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து! (Post. 4804)

4.இந்துக்கள் கருத்து: டாக்டர்கள், வழக்கறிஞர்கள் பற்றி!Research Article No.1995;Written  by London swaminathan; Date 15th July 2015

XXXXXX

ஜுலை 2024 விடுமுறை நாட்கள் -ஜுலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்; பிரிட்டனில் தேர்தல்; 15- தட்சிணாயண புண்ய காலம் ; 17- மொஹரம்; 21 குருபூர்ணிமா .

அமாவாசை –  ஜூலை 5; பெளர்ணமி – 21.

ஏகாதசி விரத நாட்கள் – 1/2, மற்றும் 17

முகூர்த்த நாட்கள் – 3, 7, 10, 12

ஜுலை 1 திங்கட் கிழமை

பலம் ஹாய் சித்தம் விகரோதி 

அதிகாரம் வந்தால் மனம் (தடு) மாறிவிடும் 

XXXX

ஜுலை 2  செவ்வாய்க் கிழமை

தாத்ருஸாஹா தாத்ருசைரேவ போத்தயாஹா

அவரவர் இனத்தை அவரவரே கண்டுபிடிக்க முடியும் (பாம்பின்கால் பாம்பறியும்)

XXXX

ஜுலை 3 புதன் கிழமை

ஸஹஸ்ரேஷு ஹி முக்யோ பவத்யேகோ  ந வா

ஆயிரக்கணக்கான  பேரில் தலைவர் குணமுள்ள ஒருவனைக் கண்டுபிடிப்பது அரிது

XXXX

ஜுலை 4 வியாழக் கிழமை

தைவ மானுஷம் ஹாய் கர்ம லோகம் யாபயதி

இந்த உலகம் இயங்க மனித சக்தியும் இறைவன் சக்தியும். அவசியம்

XXXX

ஜுலை 5 வெள்ளிக் கிழமை

புத்ரார்த்தா ஹி ஸ்திரியஹ 

குழந்தைகளைப் பெறுவதற்கு பெண்கள் அவசியம்

XXXX

ஜுலை 6 சனிக் கிழமை

கர்ம பலோப போகானாம் க்ஷேமாராதனஹ சமஹ

நாம் பெற்ற சாதனைகளை அனுபவித்து மகிழ அமைதி அவசியமாகிறது

XXXX

ஜுலை 7 ஞாயிற்றுக் கிழமை

ப்ரணி பாதேன ப்ராஹ்மணபலம் பரோ அபிஹாரயேத்

ஒரு நமஸ்காரம் செய்வதன் மூலம் படை போன்ற பிராமணர்களையும் வென்றுவிடலாம் .

XXXX

ஜுலை 8 திங்கட் கிழமை

அசுசயோ ஹாய் காரவஹ

பொதுவாக கொல்லன், கொத்தன் தொழில் புரிவோர் மோசடிக்காரர்கள்

XXXX

ஜுலை 9  செவ்வாய்க் கிழமை

ந ச அகாமஹபுருஷோஸ்தி 

ஆசையில்லாத மனிதன் இல்லை

XXXX

ஜுலை 10 புதன் கிழமை

ஸ்திரகர்மா நாஸமாப்ய கர்மோபரமதே 

முனைப்புள்ள ஒருவன் எடுத்த காரியத்தை முடிக்காமல் இடையிலே விடமாட்டான்..

XXXX

ஜுலை 11 வியாழக் கிழமை

காஷ்டம் ஹ்யாக்நிரவஹி தோ வசதி

விறகினில் தீ  மறைந்துள்ளது (விறகினில் தீயினன் பாலில் படுநெய்போல் ….தேவாரம்)

XXXX

ஜுலை 12 வெள்ளிக் கிழமை

ந த்வேவார்யஸ்ய தாச பாவஹ

நல்ல மனம் உடையவனை அடிமைபோல நடத்தாதே

XXXX

ஜுலை 13 சனிக் கிழமை

தாபி தர்மர் திதெள யத் வித்யாத் தத் வித்யானாம் வித்யாத்வம்

அறத்தையும் செல்வத்தையும் வழங்கும் கல்வியே கல்வி

XXXX

ஜுலை 14 ஞாயிற்றுக் கிழமை

சித்தமநித்யம் ஹி மனுஷ்யாணாம்

ஆண்கள் மனம் ஊசலாடும் (சினிமாப்  பாட்டு- ஆண்கள் மனமே அப்படித்தான்; அது அடிக்கடி மாறும் இப்படித்தான்)

XXXX

ஜுலை 15 திங்கட் கிழமை

மஹா தோஷமபுத்தபோதனம்

கெட்ட விஷயங்களை கற்பிப்பது பெரிய குற்றம்

XXXX

ஜுலை 16  செவ்வாய்க் கிழமை

தூஷ்ணீம் வா பிரதிவாக்யே ஸ்யாத் த்வேஷ்யாதீம்ஸ் ச  ந வர்ணயேத்

வருத்தத்தை உண்டாக்கும் பதிலை விட  (சொல்லைவிட) மவுனம் சாதிப்பதே  மேல்

xxxx

ஜுலை 17 புதன் கிழமை

அபிஹாஸ்யேஸ்வபி ஹசேத்  கோர ஹாஸாம்ச்ச   வர்ஜயேத்

ஜோக் அடித்தால் சிரிக்கலாம்; உரத்த குரலில் சிரிக்காதீர்கள்

xxxx

ஜுலை 18 வியாழக் கிழமை

பராத் ஸங்க்ராமயேத் கோரம் ந ச  கோரம் ஸ்வயம் வதேத்

பிறரைப் பற்றி கோள் சொல்வதைக் கேட்காதே; நீயும் கோள் சொல்லாதே

xxxx

ஜுலை 19 வெள்ளிக் கிழமை

திதி க்ஷேதாத் மனஸ் க்ஷமாவான் ப்ரூதிவீ  ஸமஹ

உன்னை இகழ்ந்தோரை மன்னித்து விடு;.பூமி போல பொறுமையாக இரு.

xxxx

ஜுலை 20 சனிக் கிழமை

அசாரம் ஹி பாலப்ராதிபாக்யம் 

சிறுவர்கள் கொடுக்கும் உத்தரவாதம் செல்லுபடியாகாது

xxxx

ஜுலை 21 ஞாயிற்றுக் கிழமை

ரக்ஷேத் ஸ்வ தேஹம் ந தனம் கா ஹ்ய நித்யே தனே தயா

உடலைக் காப்பாற்றவேண்டும் ;செல்வத்தை அல்ல. நிலையற்றவற்றை ஏன் நாடவேண்டும் ?

XXXX

ஜுலை 22 திங்கட் கிழமை

ந சாபி யுக்தே அபியோகோ அ ஸ்தி

குற்றம்சாட்டப்பபட்டவர் மீது புதிய வழக்குகளை போடக்கூடாது

XXXX

ஜுலை 23  செவ்வாய்க் கிழமை

ஸர்வாபராதேஷ்வபீ டனீ யோ  ஹி ப்ராஹ்மணஹ

என்ன குற்றமானாலும் சரி, கற்றறிந்த பிராமணர்களைத் துப்புறுத்தக் கூடாது 

XXXX

ஜுலை 24 புதன் கிழமை

வினய மூலோ தண்டஹ ப்ராண ப்ருதாம் யோக  க்ஷேமாவஹக

கட்டுப்பாட்டின் வேர் தண்டனை அளித்தல் ; மக்களின் வளமான வாழ்வுக்கும் அதுவே காரணம்

XXXX

ஜுலை 25 வியாழக் கிழமை

க்ஷீர க்ருத ப்ரு தா  ஹி வத்ஸானுபஹன்யுஹு 

பால்காரனுக்கு நெய்யாகவும் பாலாகவும் சம்பளம் கொடுக்காதே; கன்றுகள் பாதிக்கப்படும் .

XXXX

ஜுலை 26 வெள்ளிக் கிழமை

பர ரஹஸ்யம் நைவ ஸ்ரோதவ்யம்

மற்றவர்களின் ரகசியங்களை செவி மடுக்காதே

xxxx

ஜுலை 27 சனிக் கிழமை

கக்ஷாதவ்யவுஷதம் க்ரு ஹ்யதே

காய்ந்த புல்லிலிருந்து கூட மருந்து எடுக்கலாம்

xxxx

ஜுலை 28 ஞாயிற்றுக் கிழமை

கோசாத் தண்டஹ பிரஜாயதே

கஜானாவின் பலத்தில்தான் ராணுவம் உதிக்கிறது

xxxx

ஜுலை 29 திங்கட் கிழமை

யஹ ஸமுதயம் த்விகுண புத  பாவயதி ஸ ஜனபத பக்ஷயதி

வருவாயை இரு மடங்காக்குபவன்  மக்களின் சொத்தை கொள்ளையடிப்பவன் ஆவான்

XXX

ஜுலை 30  செவ்வாய்க் கிழமை

க்ஷீண நிசயம் சாவாப்தமபி ராஜ்யம் க்ஷயா  சைவ பவதி

வறுமை பீடித்த நாட்டினைக் கைப்பற்றினால் அது வேண்டாத சுமையாக அமையும்

xxxx

ஜுலை 31 புதன் கிழமை

அர்த்த ஏவ பிரதான இதி கெளடில்யஹ ; அர்த்த மூலோ ஹி தர்மகாமாவிதி

செல்வமே முக்கியம் என்கிறார் கெளடில்யர் ; தர்மமும் காமமும் பொருட் செல்வத்தைப் பொருத்தே அமையும்

xxxx

போனஸ் பொன்மொழிகள்

மாதா அபி துஷ்டா த்யாஜ்யா

அம்மா கொடுமைக்காரி ஆனால் அவளைக்கூட துறந்துவிடலாம்

xxxx

ஸ்வ ஹஸ்தோபி விஷதிக்த ஸ் சேத்யஹ 

சொந்தக் கையானாலும் விஷம் பரவினால் வெட்டிவிடலாம்

xxxx

பரோ அபி  ச ஹிதோ பந்துஹு

நன்மை செய்பவன் வெளிநாட்டுக்காரன்  ஆனாலும் அவன் நமக்கு சொந்தக்காரனே

—SUBHAM—

TAGS- மேலும் 31, சாணக்கியர் பொன் மொழிகள்,  ஜுலை 2024,  நற்சிந்தனை ,  காலண்டர்

Leave a comment

Leave a comment