விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-13 (Post No13,393)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,393

Date uploaded in London – 30 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

தாவரவியல் அதிசயங்கள்

சுவீடன் நாட்டு தாவரவியல் விஞ்ஞானி கார்ல் லின்னேயஸ் 

 கார்ல் லின்னேயஸ்     Swedish botanist Carl Linnaeus தாவரங்களை குடும்பம் குடும்பமாகப் பிரித்து தாவரவியல் ஆராய்சசிக்கு வழிவகுத்தார். அவர் இப்படி ஒரு புதிய உத்தியை வகுப்பதற்கு முன்னரே இந்துக்கள் ஆயுர்வேதத்  துறையை உருவாக்கி அவர்கள் பாணியில் தாவரங்களை வகைப்படுத்தினார்.அதிசயம் என்னவென்றால் லின்னேயஸ் பிரிவுப்படி ஆல மரம் , அரச மரம், அத்திமரம் ஆகிய மூன்றும் ஒரே குடும்ப மரங்கள்; மேலும் அதற்குக் கீழ்வரும் உட்பிரிவிலும்  ஒன்று சேர்ந்தே வரும். அதை மோரேசி குடும்பம் , பைகஸ் ஜீனஸ்(Moraceae Family, , Ficus Genus என்று பிரித்தார்கள். இந்த மூன்று மரங்களும் ஒரே ஸ்லோகத்தில் கடவுளின் பெயர்களாக வி.ச.வில் வருகின்றன . மேலும் இவை மூன்றும் இன்றுவரை புனிதமாகவே கருதப்படுகின்றன.

வட சாவித்திரி விரதம் மூலம் ஆலமரம் புனிதம் அடைந்தது. தட்சிணாமூர்த்தி நல்லவருக்கு உபதேசம் செய்ததும் குருக்ஷேத்திரத்தில் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதை உபதேசம் செய்ததும் ஆலமரத்தின் கீழேதான் . சங்க இலக்கியத்தில் ராமன்,  பாலம் கட்ட என்ஜினீயர் நீலனுடன் ஆலோசனை நடத்தியதும் ஆலமரத்தின் கீழேதான்.

ரிக் வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்றும் கீழ் நோக்கிய மரம் என்றும் அழைக்கப்பட்டது .

xxx

அரச மரத்தின் புகழ் சிந்து சமவெளி நாகரீகம் காலம் முதல் இன்றுவரை நீடிக்கிறது. புத்தர் இந்தமரத்தின் கீழ் தவம் செய்து ஞானம் அடைந்ததால் இலங்கை வரை இதன்  கிளைகள் எடுத்து செல்லப்பட்டன. பிள்ளையார் கோவில்களில் பெரும்பாலானவை அரச மரம் அல்லது ஆல மரத்தின் கீழ் அமைந்தன. இதை புனித மரம் என்று பெயர் சூட்டினார்கள் . உபநிஷதத்தில் பிப்பலாடன் என்று ரிஷியின் பெயர் கிடைக்கிறது ; இது அரச மரத்தின் பெயர் ஆகும்

Nyagrodha – Ficus indica (Banyan Tree) ந்யக்ரோத /ஆல

Udumbarah-Ficus glomerata உடும்பரா /அத்தி

Asvatthah- Ficus religiosa/ அஸ்வத்த / அரச

விஷ்ணு ஸஹஸ்ரநாம 88ஆவது ஸ்லோகம்

ஸூலபகஸ்  ஸூவ்ரதஸ்  ஸித்தஸ்  ஸத்ருஜிச்சத்ருதாபனஹ

ந் யக்ரோதோ தும்பரோஅ ஸ்வத்தஸ்  சாணூராம்த்ர நி ஷூதனஹ

அரச மரக்குச்சிகளை இன்றும் சமித்து என்ற பெயரில் யாக யக்ஞங்களில் பயன்படுத்துகின்றனர்.

அத்தி மரக்குச்சிகளும் யாகத்தில் பயன்படுகின்றன.

ந்யக்ரோத — நாம எண் 822-  என்ற ஆலமரத்துக்கு சங்கரர் வியாக்கியானம் :- கீழேயுள்ள பிரபஞ்சத்துக்கெல்லாம் மேலா யிருப்பவர் அல்லது தனது மாயையினால் எல்லாப் பிராணிகளையும் கீழே வைத்து மறைப்பவர் .

உதும்பரா – நாம எண்  -823-

ஆகாயத்திற்கு மேம்பட்டவர் ; அன்னம் முதலியவறறால் அனைத்துலகையும் போஷிப்பவர்.

அஸ்வத்த- நாம எண் 824 

எல்லா மரங்களுக்குள்  நான் அரச மரமாய் இருக்கிறேன் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் 10-26 சொல்கிறார்.

xxx

திருமூலரும் செப்பும் அதிசயம் 

லின்னேயசுக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலரும் இந்த மூன்று மரங்களையும் ஒரே பாட்டில் வைத்துப் பாடுகிறார். இது நாட்டின் கலாசார ஒற்றுமையைக் காட்டுகிறது மூன்று மரங்களும் புனித மரங்கள் என்பதையும் உறுதி செய்கிறது இதோ திருமந்திர பாடல்

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்

உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

ஆறாம் தந்திரம்/  3 திருநீறு / திருமந்திரம்

இந்த மரத்தின் குச்சிகள் எரிந்து சாம்பலானவுடன் அதை விபூதியாகப் பயன்படுத்திய செய்தியைத் தருகிறார்.

xxxxxx

 tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள் 13 ,தாவரவியல் அதிசயங்கள்

Leave a comment

Leave a comment