விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-16 (Post.13,421)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,421

Date uploaded in London – 8 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

There are more words in Vishnu Sahasranama (VS) which are interpreted beautifully by Adi Shankara in his commentary.

விஞ்ஞான ரகசியங்கள் தொடர்ச்சி……………………………………………

ஆதி தேவஹ — நாம எண் 490

தேவர்கள் அனைவருக்கும் முந்தியவர் ;

பூர்வோயோ தேவேப்யோ ஜாதஹ — புருஷ ஸூக்தம் , ரிக்வேதம்

அல்லது எல்லாப் பிராணிகளையும் பற்றிக் கொள்ளுகிறவர்; .

ஸர்வ பூதான் யாதீ யந்தேஸ்னேனேத் -யாதிஹி

ஆதிச் ஸாசெள தேவாஸ் சாதி தேவஹ 

என் கருத்துக்கள்

திருக்குறளில் முதல் குறளிலேயே ஆதி பகவன் என்று இறைவனைப் புகழ்வதை ஒப்பிடலாம். மேலும் அவர் லெட்சுமி, விஷ்ணு, கிருஷ்ணன் , த்ரிவிக்ரமன் பற்றிப் பாடியுள்ளதால் அவரை வைஷ்ணவர் என்று கருதலாம்.

மேலும் எல்லாவற்றையும் தன்னிடம் இழுத்துக்கொள்கிறான் என்பதைப் பிரளய கால ஒடுக்கம் என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் பிக் க்ரஞ்ச் BIG CRUNCH என்பார்கள் .

இதை  உபநிஷத் சிலந்தியுடன் ஒப்பிடுகிறது அதாவது சிலந்தி நூலை வெளியிட்டு வலை பின்னுகிறது; வேண்டாத பொழுது அது வெளியிடும் நூலை தானே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளும்

இன்னொரு சுவையான ஒப்பீடு :_

தில்லை நடராஜருக்கு நேரே கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ளது. நடராஜருக்குப் பூஜை செய்த தீட்சிதர்களே பெருமாளுக்கும் பூஜை செய்ததை 2 ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

திருமங்கையாழ்வாராலும் குல சேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகும். தில்லை மூவாயிரவராகிய அந்தணர்களே திருச் சித்திர கூடப் பெருமாளையும் முற்காலத்தில் பூஜை செய்து வந்தனர்.

தேவ +ஆதி தேவன்= தேவாதிதேவன்

மூவாயிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காயசோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே.

(பெரிய திருமொழி 3-2,3)

எனத் திருமங்கை ஆழ்வாரும்,

‘செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வமமான் றானே”

(பெருமாள் திருமொழி 10-2)

எனக் குலசேகர ஆழ்வாரும் பாடிப் போற்றிய பனுவல்களால் புலனாகின்றது.

இங்ஙனம் ஓரிடத்தில் நின்றே சிவபெருமான் திருமால்  ஆகிய இருபெருந் தெய்வங்களையும் ஒரு சேர வழிபட உதவும்  தலம் தில்லைப் பெருங்கோயில் ஆகும் .

தேவாதி தேவன் என்ற  பெயர் பல பாடல்களில் சிவபெருமானுக்கும் சூட்டப்பட்டுள்ளது

xxxx

பவனஹ – நாம எண் 291

காற்று வடிவிலிருந்து கொண்டு பரிசுத்தப்படுத்துபவர்.

அதாவது நானே ஆக்சிஜன் (Oxygen) என்கிறார். கீதையிலும் சுத்தம் செய்யும்  பொருட்களில் நான் காற்றாக இருக்கிறேன் – 10-31 என்று சொல்கிறார். இதிலிருந்தே இது தூய உயிர் முச்சு (Oxygen) என்பது புலனாகிறது

पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।

झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥१०- ३१॥

பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்ருதாமஹம் |

²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||

பவதாம் பவந: அஸ்மி = தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்

ஸ²ஸ்த்ரப்⁴ருதாம் அஹம் ராம: = ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன்

ஜ²ஷாணாம் மகர: ச அஸ்மி = மீன்களில் நான் சுறா

ஸ்ரோதஸாம் ஜாஹ்நவீ அஸ்மி = ஆறுகளில் கங்கையாக இருக்கிறேன்

தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்படை   தரித்தோரில் நான் ராமன்மீன்களில் நான் சுறாஆறுகளில் கங்கை.

என் கருத்து

கங்கையைச் சொல்லும் இடத்தில் காற்றினையும் சொல்லுவதால் இது உயிர் வளி / ஆக்சிஜன்(Oxygen)  என்று அறிகிறோம். அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தஸ்னிடம் கேட்டிருந்தால் துடைப்பம்/விளக்குமாறு என்றும் தற்காலத்தில்  வாக்வம் கிளீனர் Vacuum Cleaner என்றும் சொல்லியிருப்பார்கள்.

XXXX

சங்கர்ஷணாச்யுதஹ  — நாம எண் 552.

சம்ஹார காலத்தில் பிரஜைகளை இழுத்து ஒடுக்குபவர்.;தமது ஸ்வரூபத்தில் மாறுதலின்றி இருப்பவர்.

இதை அனைத்தையும் தன்னிடம் இழுத்துக்கொள்ளும் Black Hole பிளாக் ஹோலுடன் ஒப்பிடலாம். அவர் பெயரே பிளாக் Black – கிருஷ்ணா  பகவத் கீதையிலும் மனு ஸ்ம்ருதியிலும் இது உள்ளது .

நானே பிளாக் ஹோல் Blackhole என்னும் கருந்துளை.

2016ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரையில் இதைச் சொன்னேன் .

இதோ அந்த   வரிகள்!

பகவத் கீதை    

உலகங்களும்மன்னர்களும் உன் வாய்க்குள் புகுவதைக் காண்கிறேன் (கீதை 11-26) 

எவ்வாறு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதிகள் அனைத்தும் கடலை நோக்கி விரைகின்றனவோ அவ்வாறே இந்த மானிட உலக வீரர்கள் எப்புறமும் கனல் வீசும் உன்வாய்களில் புகுவதைக் காண்கிறேன் (11-28) 

எவ்வாறு விட்டிற்பூச்சிகள் அதிபயங்கர வேகத்துடன் நாசமடைவதற்காகதீக்குள் புகுகின்றனவோ அவ்வண்ணம் உலகத்து உயிர்களும் நாசமடைவதற்காகவே உன் வாய்க்குள் நுழைகின்றன. 11-29 

கனல் வீசும் வாய்கள்  உலகங்களை விழுங்குவதைக் காண்கிறேன். உன் நாக்குகள் அவைகளை நக்கி விழுங்குகின்றன. உன்னுடைய வெப்பம் மிக்க கிரணங்கள் உலகங்களை எரிப்பதையும் பார்க்கிறேன் 11-30 

—என்று அர்ஜுனன் இயம்புவதை படித்துவிட்டு கருந்துளைகள் பற்றி பார்த்தாலோ, அறிவியல் அறிஞர்கள் சொன்னது அப்படியே இருப்பதைக் கண்டு வியப்போம். 

பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன யோகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் என்ன எழுதினாரோ அதை அப்படியே இன்று கருந்துளைகளின் காட்சியாக வருணிப்பர் வானைனியல் வல்லுநர்கள்!

xxxx

மனு ஸ்ம்ருதி — 1–5/6 

மனு இதற்கும் மேலாக ஒருபடி சென்று ஆதியில் இருந்த கருந்துளைகள் பற்றி கறுப்பு (BLACK) என்றே சொல்லுகிறார்! 

“கேள்! ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது (கறுப்பு). எது என்ன என்பதைக் காண இயலாதவாறு கும்மிருட்டு!!

அது என்ன என்றே யாருக்கும் புரியாது. எல்லாம் நெடுந் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தது. 

எப்போதுமுள்ள இறைவன், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். தனது சக்தியை எல்லாம் பயன்படுத்தி காணும்படி செய்தான். இருளை விரட்டி அடித்தான்” – மனு ஸ்ம்ருதி — 1–5/6 

மாபெரும் வெடிப்பு (BIG BANG பிக் பேங்) கருந்துளைகள் (BLACK HOLE)  ஆகியன இதில் அடக்கம்!

–Subham—

Tags-விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-part 16, — மாபெரும் வெடிப்பு, (BIG BANG பிக் பேங்) ,கருந்துளைகள் ,(BLACK HOLE)  Big Crunch

Leave a comment

Leave a comment