WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,423
Date uploaded in London – 9 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பூத- பவ்ய- பவத் – நாம எண் 290
கடந்த காலத்தில் நடந்தது, இனி வரப்போவது, இப்போது நிகழ்வது ஆகிய அனைத்திற்குமிறைவன் என்பது பொருள்.
நானே காலம் என்றும் பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறான்.
वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन।
भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन॥7-२६॥
வேதா³ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந|
ப⁴விஷ்யாணி ச பூ⁴தாநி மாம் து வேத³ ந கஸ்²சந ||7-26||
அர்ஜுந! = அர்ஜுனா
ஸமதீதாநி வர்தமாநாநி ப⁴விஷ்யாணி ச = சென்றவை , நிகழ்வன, வருவன
பூ⁴தாநி = ஆகிய உயிர்களையெல்லாம்
அஹம் வேத³ = நானறிவேன்
து கஸ்²சந மாம் ந வேத³ = ஆனால் எவரும் என்னை அறிவதில்லை
சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர். 7-26
*****
உ லகில் காலம் பற்றி எந்த சமய இலக்கியமும் இவ்வளவு சொன்னதில்லை.; ஏதோ விஞ்ஞான சஞ்சிகைக்கு கட்டுரை எழுதியது போல மஹாபாரதம் முழுவதும் காலம் பற்றிய செய்திகள் வருகின்றன. காலம் என்பது நாலாவது பரிமாணம்;அது இல்லாமல் எ தையும் சிந்திக்க இயலாது என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அவர் சொல்லாத மேலும் 3 விஷயங்களை நாம் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம்.
1. ஒளியை மிஞ்சும் மனோ வேகத்தில் விண்வெளியில் எங்கும் செல்லலாம் .
2. இறைவன் என்பவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்திராயாதீதஹ – என்று வேதம் சொல்கிறது.
3.மூன்றாவது ஒன்றையும் சொல்லிவருகிறோம் ; காலம் என்பது வட்டப்பாதையில் செல்கிறது ;மேலை நாட்டார் சொல்லுவது போல நேர் பாதையில் செல்லவில்லை.
.xxxx
பானுஹூ — நாம எண் 284
தாமே பிரகாசிப்பவர்.
கடோபநிஷத் 2-5-15 சொல்கிறது-
தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் –அது ஒளி வீசும் போது மற்றவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது.
சூரிய ஒளி அங்கிருந்து பூமிக்கு வர ஒன்பது நிமிடங்கள் ஆகின்றன. சூரியன் மறைந்த 24 மணி நேரத்தில் பூமியிலுள்ள உயிரினங்கள் அழியத் துவங்கிவிடும்.
XXXX
சச பிந்துதுஹூ – நாம எண் 285
இது விஞ்ஞானிகளுக்குத் தெரியாத சந்திர ரகசியம்!
உயிர்களை போஷிப்பதில் சந்திரன் போன்றவர் என்று இந்துக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
இது விஞ்ஞானிகளே இதுவரை கண்டுபிடிக்காத விஷயம்
கீதையிலும் 15-13 கண்ணன் சொல்கிறார்.
गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥
கா³மாவிஸ்²ய ச பூ⁴தாநி தா⁴ரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ⁴: ஸர்வா: ஸோமோ பூ⁴த்வா ரஸாத்மக: || 15- 13||
ச அஹம் கா³ம் ஆவிஸ்²ய = நான் பூமியுட் புகுந்து
ஒஜஸா பூ⁴தாநி தா⁴ரயாமி = உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்
ரஸாத்மக: ஸோம: ச பூ⁴த்வா = மேலும் நான் நிலவாகி
ஸர்வா: ஒஷதீ⁴: புஷ்ணாமி = அனைத்து பயிர்பச்சைகளையும் வளர்க்கிறேன்
நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன். ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.
என் கருத்து
சச பிந்து என்றால் முயல் உள்ள நிலவு. அதிலுள்ள மலைகள் பள்ளங்கள் முயல் போலத் தோன்றுவதால் சச= முயல் என்பார்கள். இது வரை எந்த விஞ்ஞானியும் இப்படிச் சொன்னதுமில்லை ஆனால் தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது தொடர்ந்து பேசப்படுகிறது.
சூரியன் செய்யும் உதவி (Photosynthesis) எல்லோருக்கும் தெரியும். சந்திரன் செய்யும் உதவி இந்துக்களுக்கு மட்டுமே தெரியும். எதிர்காலத்தில் அவர்களும் நாம் சொல்லுவதை ஒப்புக்கொண்டால், நாம் பெருமைப்படலாம்..
xxxx
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஜேஷ்டா (கேட்டை; நாம எண் 67), புனர்வசு (150), த்ருவன் (388) மகா மகம் (439) முதலிய நட்சத்திரங்களின் பெயர்கள் விஷ்ணுவுக்குச் சூட்டப்பட்டுள்ளன . ஆயினும் ஆதி சங்கரர் , வெவ்வேறு அர்த்தங்களை விளம்பியுள்ளார்.. இதுதவிர நக்ஷத்திர நேமி என்ற நாமமும் உளது.
அந்தகாலத்தில் அவ்வளவு நட்சத்திரப் பெயர்களும் நன்கு தெரிந்துள்ளதால் நம்மவர்கள் வானாராய்ச்சியில் ஈடுபட்டது தெரிகிறது. முன் காலத்தில் எல்லோரும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் காட்டி சிறுவர்களுக்கு ஒவ்வொரு நட்சத்திரம் பற்றிய கதைகளையும் சொல்லுவார்கள். பாரதியாரும் ஒரு பாடலில் இன்று இந்த விண்மீன்களின் பெயர்கள் கூட மக்களுக்குத் தெரியவில்லையே என்று வருத்தப்பட்டுப் பாடியுள்ளார். அவரோ ஹாலி வால் நட்சத்திரம் (Halley’s Comet) பற்றிக் கூடப் பாடியுள்ளார் .
xxx
ஹிரண்ய கர்பஹ– நாம எண் 70-
பொன் மயமான பிரம்மாண்டத்தில் பிரம்ம ரூபியாக உறைபவர்; அல்லது ஹிரண்ய கர்பர் என்ற பெயருள்ள பிரம்மாவுக்கும் ஆத்மாவாக உறைபவர். அண்டம் என்றால் முட்டை; கோள வடிவம் ; பிரபஞ்சம்.
வெளிநாட்டினர் பிரபஞ்ச்சத்தின் படத்தைப் போட்டுக் காண்பிப்பதற்கு முன்னரே நாம் இவற்றைக் காட்டிவிட்டோம் பிக் பேங் BIG BANG பற்றிய முந்தைய விளக்கத்தில் மேலும் தகவல் அளித்துவிட்டேன்.
xxxx
ஜகதாதிஜ– நாம எண் 145-
உலகம் உண்டாவதற்கு முன் ஹிரண்யகர்ப வடிவத்தில் உதித்தவர்.
பூர்வோ யோ தேவேப்யோ ஜாதஹ — புருஷசூக்தம், ரிக்வேதம் சொல்கிறது
–subham–
Tags- சந்திரன், ரகசியம், நட்சத்திரப் பெயர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம், அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் part -17