திருமூலரின் அற்புதச் சொல்லாக்கம் – திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-34 (Post.13,427)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,427

Date uploaded in London – 10 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமூலர் பயன்படுத்தும் அற்புதச் சொற்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 34

திருமூலர் பயன்படுத்திய ஞான வாள் , ஞானக் கொழுந்து , ஞானத் தலைவன், ஞான விளக்கு முதலிய ‘ஞான’ச் சொற்களை முன்னர் கண்டோம்

திருமூலர் தமிழர் அல்ல; அவர் காஷ்மீர்க்காரர்; ஆயினும் மூலன் என்னும் ஆட்டிடையன் உடலில் புகுந்ததால் தமிழ் தெரிந்திருக்கும்; ஆயினும் ஆட்டிடையன் போலப் பேசாமல் நல்ல தமிழ் பேசுகிறார்; இருந்தபோதிலும் ஒரு சில  இடங்களில் அவர் பயன்படுத்தும் சொற்கள் நெருடலாக இருக்கும் ; இன்னும் சில ஐட்டங்களில் அற்புதச் சொற்களாக இருக்கும் முதலில் பட்டியலைக் காண்போம் ; பின்னர் விளக்கத்தைக் காண்போம்

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 34

பாடல் எண்கள் – சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்பின்படி :

இன்பப் பிறவி-418

துன்பக் கலசம்-452

எரு விடும் வாசல்- கரு விடும் வாசல்- 565

காலத்தை வென்றிடும் கருத்து இது – 564

புண்ணிய வானவர் பூமழை தூவி – 969

பதினெட்டு பாஷை -151

ஐம்பத்தோரு எழுத்து- 878, 925, 942/44, 904, 1195, 1200, 120, 1726, 2650, 2826

தந்தைக்கு முன் மகன் பிறந்தானே – 849, 2179

சொல்லற்றவர்களே – 2289

வேதமோடாகமம் – 2358

பிரணவ கூபம் – 2415, 2452

தமருக ஓசை -2278

உரை செய்யா  மந்திரம் – 2390, 2424

அச்சம் அறுத்தானை- 2417 (மாணிக்கவாசகர் எதிரொலி  )

தேவதத்தன்- 2454

சத்திய ஞான – 2498 (வள்ளலார் எதிரொலி  )

நாகசுவர்க்கம் – 2504 (புற நானூறு எதிரொலி)

சிம்மாசனம் -54, 2316 (ஆண்டாள், காளிதாசன் எதிரொலி  )

ஆரியர் – 547  (பாரதியார், அப்பர் எதிரொலி)

ஆசூசம் – 2510

வழிபடு , வணங்கு – 2512

காடு மலை கழனி – 2521

மன வாசல் – 2531

இலாபம் – 2551

பரகதி – 2517

இருளற்ற சிந்தை- 2553

முக்தி பக்தி – 2466

பண்டைத் தலைவன் – 2828

ஒருவன் ஒருத்தி விளையாடல்-383

மன விளக்கு- 582

கடல் குளம்- 496

தெக்கணம் – 2702

தலை நின்ற தாழ்வரை 2801

தென் குமரி – 1081

விரிநீர் வியனுலகு – 1013, 1338, 1992, 2988

எண் சாண்  உடம்பு – 2088

கடல் வாழ்வு – 2984 (Marine Trade)

கடல் வாணிபம்- 2874, 2882, 2888, 89, 95 (Marine Trade)

கன்யாகுமரி, காவிரி, நவ தீர்த்தம் – 2709

வடக்கில் அடங்கிய வையம் – 2032 ( Geological Wonder )

ஒளி ஒலி -427, 586

இராப்பகலற்ற இடம்- 318, 558, 1110  (Space Station)

அண்டம் பிண்டம் – 1337- 2761  (கிரேக்கGreek Echo Microcosm, Macrocosm)

இயங்கும் உலகு – 1836  (Space- Revolving Earth)

உலக வலம் – 687 Space- Travel around Earth

ஈனப்பிறவி -2023

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் (லோகா ஸமஸ்தோ சுகினோ பவந்து)

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்

குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்

குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.– கம்பன் ஒப்பீடு

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்

பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.— 547  (பாரதியார் எதிரொலி)

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே.- பகவத் கீதை வாசகம்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.- (சாக்ரடீஸ் உபநிஷத் வாசகம் )

அறிவு வடிவென்று அறியாத என்னை

அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி

அறிவு வடிவென்று அருளால் அறிந்தே

அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.- மாணிக்கவாசகர் எதிரொலி

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின் றனமறை ஈறுகள் தாமே.- Einstein

Einstein said, “Energy cannot be created or destroyed, it can only be changed from one form to another”. This first law of thermodynamics which also known as Law of Conservation of Energy works in all sphere of life.

2010. அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுஅற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்

தணிவற நின்றான் சராசரம் தானே. (Nuclear Science)

2010 Jiva and Siva Commingling Stand

He within the atom (Jiva),

And the atom (Jiva) within Him

Commingling stand,

They know this not;

The peerless Lord pervades all

Unintermittent, in creation entire.

இந்து மதம் தொடர்பான வாக்யங்களைத் தனியாகக் காண்போம் .

–Subham—

Tags – திருமூலரின், அற்புதச் சொல்லாக்கம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 34, அற்புதச் சொற்கள், திருமூலர்

Leave a comment

Leave a comment