ராமாயணத்தில் சாபங்கள் (36) ஶ்ரீ ராமரிடம் சுகன் சாபம் தொனிக்கும் வார்த்தைகளைக் கூறியது! (Post.13426)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.426

Date uploaded in London – 10 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் சாபங்கள் (36)

ராமாயணத்தில் சாபங்கள் (36) ஶ்ரீ ராமரிடம் சுகன் சாபம் தொனிக்கும் வார்த்தைகளைக் கூறியது!

ச.நாகராஜன்

.

யுத்த காண்டத்தில் இருபதாவது ஸர்க்கமாக அமைவது – “சுகனிடம் தூது அனுப்புவது” என்ற ஸர்க்கம்.

சுக்ரீவனின் சேனையை ராவணனின் ஒற்றனான சார்த்தூலன் என்பவன் பார்த்து விட்டு ராவணனின் ஓடோடி வந்து சேனையைப் பற்றிச் சொன்னான்.

இதைக் கேட்ட ராவணன் காரியம் அறிந்தவர்களுள் சிறந்தவனான சுகன் என்ற அரக்கனை சுக்ரீவனிடம் சென்று, “ராமரது மனைவியை நான் அபகரித்து வந்ததற்கும் உமக்கும் என்ன சம்பந்தம். பேசாமல் கிஷ்கிந்தை திரும்பிச் செல்லுக” என்று சொல்லுமாறு அனுப்பினான்.

சுகனைப் பார்த்த வானரர்கள் அவனைப் பிடித்து அடித்துப் புடைத்து கீழே வீழ்த்தினர்.

அவன் ஶ்ரீ ராமரிடம் தான் தூதுவன் என்று சொல்லவே ராமர் அவனைக் கொல்ல வேண்டாம் என்று வானரர்களிடம் உத்தரவிட்டார்.

சுக்ரீவன் அவனைப் பார்த்து ராவணனிடம் ராமரிடம் ஆற்றலை எடுத்துரைக்குமாறு கூறினான். அப்போது அங்கதன், “இவன் தூதன் போல இல்லை. வேவுகாரன் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இவனை மீண்டும் லங்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது” என்று கூறுகிறான்.

உடனே வானரர்கள் அவனைப் பிடித்துக் கட்டுகிறார்கள்.

அப்போது அலறியவாறே சுகன் ராமரைப் பார்த்துக் கூறுகிறான் இப்படி:

யா. ச ராத்ரிம் மரிஷ்யாமி ஜாயே ராதிரிம் ச யாமஹம் |

ஏதஸ்மின்னந்தரே காலே யன்மயா ஹ்ரசுபம் க்ருதம் |

சர்வம் ததுபத்யேதா ஜஹ்யாம் சேத்யதி ஜீவிதம் ||

ஜீவிதம் – உயிரை

ஜஹ்யாம் சேத் யதி – நான் விடுகின்றேன் என்றால்

யாம் ராத்ரிம் – எந்த இரவில்

அஹம் ஜாயே ச – நான் ஜனித்தேனோ

யாம் – எந்த

ராத்ரிம் – இரவில்

மரிஷ்யாமி ச – சாகின்றேனோ

ஏதஸ்மின் – இந்த

அந்தரே  – இடையில் உள்ள

காலே – வாழ்நாளில்

யத் – எந்த ஒரு

அசுபம் – பாவமானது

மயா – என்னால்

க்ருதம் – செய்யப்பட்டதோ

தத் – அது

சர்வம் ஹி – எல்லாவற்றையும்

உபபத்யேதா: – நீர் அடைய வேண்டும்.

யுத்த காண்டம்,, இருபதாவது ஸர்க்கம், ஸ்லோகம் 33

இப்படி சுகன் ராமரை நோக்கிக் கூறுகிறான். ராமர் அவனை விட்டுவிடுமாறு ஆணை இடுகிறார்.

இது சாப வார்த்தைகள் போலத் தோன்றுகிறது. அதே சமயம் அடிபட்ட ஒருவன் வேதனையில் கூறும் வார்த்தைகள் போலவும் அமைகிறது.

சுகன் சாபம் கொடுக்கக்கூடிய அளவு வல்லவனா, அவனுக்கு எப்படி இந்த சக்தி வந்தது என்பது பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை.

ஆகவே இதை சாபம் என்றோ அல்லது வேதனையில் கூறிய மொழி என்றோ எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

**

Leave a comment

Leave a comment