விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-18 (Post No.13,430)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,430

Date uploaded in London – 11 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

விஞ்ஞான ரகசியங்கள் தொடர்ச்சி………………………..

அஹ ஸம் வர்த்தஹ – நாம எண் — 232

பகலை உண்டாக்கும் சூரிய வடிவினர்.

த்வம்  அந்தரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஸாம்  பதிஹி

பிரச்னோபநிஷத் 2-9

பகல் முதலிய பிரிவுகளோடு  கூடிய காலச் சக்ரத்தை உருட்டுபவர்

அஹ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பகல் என்ற தமிழ்ச் சொல் பிறந்தது.

ராத்ரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து இரவு  என்ற தமிழ்ச் சொல் பிறந்தது.

அல்லது இரண்டும் ஒரே மூலச் சொல்லிலிருந்து வந்திருக்கக்ககூடும்.

திராவிட மொழிகள் பிரிவு என்று எதுவும் கிடையாது

XXX

ஜஹ்னு – நாம எண் —244-

ஸம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர்

ஜனான் ஸம்ஹார ஸமயே அபஹ்நுதே  அபநயதீதி ஜஹ்னு ஹு

அல்லது பக்தி இல்லாதவர்களை பரமபதத்திலிருந்து ஜஹாதி = விலக்கிவிடுவதால் அவர் ஜஹ்னு என்கிறார் ஆதி சங்கரர்.

என் கருத்து

பலூன் போல விரிந்து கொண்டே Expanding Universe போகும் பிரபஞ்சம் வெடித்துச் சுருங்கும் Big Crunch என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு. மேலை நாட்டினர் இதை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. காலம் என்பது சக்கர வடிவினால் நாம் காலச் சக்கரம் என்ற சம்ஸ்க்ருத பதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். .மேலை நாட்டினர் இதை ஏற்காமல் காலம் என்பது நேர் கோட்டில் செல்வதாகப் புகல்கிறார்கள் .இந்தப் பிரபஞ்சமே கிமு 4 000–ல் உருவானதாக கிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன கணக்கை கால்டுவெல் கும்பலும் மாக்ஸ் முல்லர் கும்பலும் ஏற்றுக்கொண்டு வாய் மூடி மவுனம் சாதித்தன ; வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டினர் இதை நம்பி நான் ஒரு முட்டாளுங்க; நல்லபடிச்சவங்க  நாலு பேரு சொன்னாங்க என்ற சந்திர பாபுவின் படலைப் பாடிக்கொண்டு நின்றன.

On 23 October 4004 BC, the world was created, according to Archbishop James Ussher of Armagh (1581-1656). Ussher was highly regarded in his day as a churchman and a scholar!!!!

வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்  கிறிஸ்தவர்கள் அதி முட்டாள்கள் என்று இப்போது நமக்குத் தெரிகிறது.

இந்துக் குழந்தைகளோ அப்போது இறைவனை சஹஸ்ர கோடி யுகதாரினே 1000 கோடீX  432000 என்று துதி பாடிக்கொண்டிருந்தன. இதை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தமிழிலும் சொன்னார்

xxxxx

வாயு வாஹன – நாம எண் 331-

ஆதி சங்கரர் தனது உரையில் மொழிகிறார்-

காற்றையும் இயக்குவிப்பவர் ; ஏழு விதமான காற்றையும் வீசும்படி செய்தவர்.

என் கருத்து

வானிலை இயல் Meteorology ,  மேகங்களின் பல பிரிவுகள், காற்று மண்டலத்திலுள்ள அடுக்குகள் பற்றி என்சைக்ளோபீடியாவில் காணலாம். ஏறத்தாழ ஏழு அல்லது 8 வகைகள்தான். இவையெல்லாம் 100, 200 வருடங்களாகத்தான் பேசப்படுகின்றன. நாமோ காளிதாஸ காவியங்களிலும் திருமூலர் பாடிய திரு மந்திரத்திலும் 7 வகை மேகம், பத்துவகை வாயு முதலியவற்றை ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னரே அறிந்து போகிற போக்கில் ஆன்மீகப் பாடல்களில் செப்பிவிட்டோம். வெளிநாட்டிலோ, இன்றும் கூட பாமர மக்களுக்கு இவை தெரியாது ; கால நிலை இயல் Meteorology படிப்போர், விமானம் ஓட்டுவோர் முதலியவர்கள் மட்டுமே இதைக் கற்கிறார்கள் . நம் நாட்டிலோ திரு மந்திர விரிவுரையிலும் கூட ஏழு மேகங்களின் பெயர்களும் உள்ளன.

நான் 2016–ல் எழுதிய கட்டுரையிலும் விளக்கியுள்ளேன்

ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064) written on August 15, 2016

xxxx

 சோமஹ – நாம எண் 505-

சந்திர ரூபியாகத் தானே பயிர்களை வளரச் செய்பவர்

கீதை 15-13 ஸ்லோகத்திலும் கிருஷ்ணர் இதையே சொல்கிறார்.

அல்லது உமாதேவியுடன் கூடிய சிவன் உருவத்தில் உள்ளவர்  அல்லது அமிர்தமாக இருப்பவர்

என்கருத்து

சோம என்ற சொல்லுக்கு மூன்று அர்த்தம்-

1.சந்திரன்,

2.உமையுடன் கூடிய சிவன்; ச+உமா = சோமா ,

3. சோம ரசம்

சந்திரனுக்கும் பூமியிலுள்ள பயிர்களுக்கும் உள்ள  தொடர்பை எந்த விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள் .

மற்றோர் முக்கிய விஷயம் சோமரசம் பற்றி வெளிநாட்டுக் கும்பல்கள் புரளியைப் பரப்பி அதை இங்குள்ள மார்சிஸ்ட் கும்பல்கள் பரப்பிவிட்டன . ஆனால் இந்துக்களோ அதி உயிர் காக்கும் டானிக் என்றும், அபூர்வ மூலிகை என்றும், கடவுளின் ரத்தம் என்றும் புகழ்கிறார்கள் . சோமம் என்னும் தாவரம் அழிந்துவிட்டது ; அதை பயன்படுத்திய இந்துக்கள் சொல்வதையே நாம் நம்பவேண்டும் . நிலவு பற்றி நாம் சொன்னதை விஞ்ஞானிகளும்  சொல்லும்போது நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம் என்று சொல்லி மேலைநாட்டினர் தலையில் ஒரு குட்டு வைக்கலாம்.

xxxxx

சோமம்  தொடர்பான மேலும் சில சொற்கள்

சோமபா நாம எண்  503

சோமா சொற்கள் 503, 505, 974

503-க்கு சங்கரர் சொல்லும் விளக்கம்-

யாக யக்ஞங்களில் தேவர் வடிவத்தில் சோம ரசம் அருந்துபவர்

நாம எண் 974–க்கு ஹரிவம்ச காவியத்திலிருந்து நீண்ட விளக்கம் தருகிறார். அதி ஒவ்வொரு அங்கமும்/ உறுப்பும் கடவுளின் ஒரு அம்சமாகக் காட்டப்படுகிறது சோமம் என்பது கடவுளின் ரத்தம்.

என் கருத்து

வேதத்துக்குப்  பொருளை எழுதிய எவரும் சோம ரசம் சாப்பிட்டதில்லை; ஏனெனில் கிடைக்கவில்லை. அதற்கு   மாற்றாக இப்போது  கிடைக்கும்  செடி கொடி வகைகள்  எவையும் சோமம் இல்லை. இந்து மதத்தை மட்டம் தட்டி கிறித்தவ மதத்தைப் பரப்பவந்தவர் சொல்லுவதை நாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம்.

xxxx

அணுவும் மிகப் பெரியதும்

ப்ருஹத் (836)க்ருஷ ( 837),ஸ்தூலஹ (836)

brhat (836), Krsah (837), Sthuulah (838)

இறைவன் என்பவன் அளவிட  முடியாத அளவுக்குப் பெரியவன் ;ஆதி சங்கரர் கடோபநிஷத் 1-2-20 வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார் – மஹதோ மஹீயான்

என் கருத்து

உபநிஷத்தின் முழு வாக்கியங்கள்

அணோரணீயான்   மஹதோ மஹீயான்

ஆத்மஸ்ய ஜந்தோர் நிகிதஹ குஹ்யாம்

தம் அக்ரது ஹு பச்யதி  வித சோகோ

தாதுஹு பிரசதான்  மஹிம்னம் ஆத்மநஹ

अणोरणीयान् महतो महीयान्- இறைவன் அணுவைவிடச் சிறியவன் ; பெரிய பொருளுக்கும் மேல் பெரிதானவன் ; இந்த வர்ணனை தேவார திருவாசக, திவ்யப் பிரபந்தம் எல்லாவற்றிலும் வருகிறது

இதிலுள்ள விஞ்ஞான விஷயத்தை ஆராய்வோம். அணு என்ற சம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலும் அப்படியே கையாளுகின்றனர். அணு என்பதுதான் பிளக்க முடியாத சிறு துகள். அதைப் பிளந்தால் மகத்தான சக்தி உண்டாகும். அதுதான் அணுகுண்டு; இந்தச் சொல்லை சம்ஸ்க்ருதத்தில் தமிழிலும் கையாண்டவர்களுக்கு இன்று நாம் சொல்லும் விஞ்ஞானப் பொருள் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பிப்னால் தெரியும் என்றே சொல்லவேண்டும். பல விஞ்ஞான விஷயங்களை அவர்கள் மனக்கண் கொண்டு பார்த்து இருக்கிறார்கள் போலும். அவ்வையார், மாணிக்கவாசகர், திருமூலர் முதலியோர் தமிழில் அணு என்பதை வருணித்துள்ளனர். இதில் அவ்வையும் திருமூலரும் அணுவைத் துளைப்பது கூறிடுவது பாடியுள்ளனர்.

குறிப்பாக அவ்வையார் பாடலில் இதைக்காணலாம்; திருக்குறளின் பெருமைதனை வருணித்த அவர் அணுவைத்துளைத்து ஏழ்  கடலைப்புகட்டிய குறள்  என்கிறார். அதாவது அணுவைத் துளைத்தால் 7 கடல் சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். ஜான் டால்ட னென்பவர் JOHN DALTON அணு பற்றி வருணிப்பதற்கு  2500 ஆண்டுகளுக்கு முன்னரே வைசேஷிக சாஸ்திரத்தின் கர்த்தா கணாதர் அணு பற்றி விள க்கிவிட்டார்.. பின்னர் கி.மு 400 வாக்கில்  வெட்ட முடியாதது என்பதை அடமஸ் என்கிறார்ஒரு கிரேக்க அறிஞர்.  அதிலிருந்து ஆட்டம் ATOM என்ற ஆங்கிலச் சொல் வந்தது என்பர்

அந்த அடமஸ் என்பதே சம்ஸ்க்ருத ‘அதம’ என்பதிலிருந்து பிறந்திருக்கலாம் என்பது என் கருத்து.

Adhama (अधम).—a. [av-ama; avateḥ amaḥ, vasya pakṣe dhaḥ Uṇādi-sūtra 5.54.] The lowest, vilest, meanest;

Wisdom Library says,

Aṇu (अणु).—a. (ṇu-ṇvī f.) [अण्-उन् (aṇ-un)] Minute, small, little, atomic (opp. sthūla, mahat); अणोरणीयान् (aṇoraṇīyān) Bhagavadgītā (Bombay) 8.9; सर्वोप्ययं नन्वणुः (sarvopyayaṃ nanvaṇuḥ) Bhartṛhari 3.26. insignificantly small; अण्वपि भयम् (aṇvapi bhayam) Manusmṛti 6. 4; अण्वपि याच्यमानः (aṇvapi yācyamānaḥ) Pañcatantra (Bombay) 4.26 asked but an atom, a very small quantity, न कन्यायाः पिता विद्वान् गृह्णीयात् शुल्कमण्वपि (na kanyāyāḥ pitā vidvān gṛhṇīyāt śulkamaṇvapi) Manusmṛti 3.51.

-ṇuḥ 1 An atom, a very small particle (an exceedingly small measure); the mote in a sunbeam, the smallest perceptible quantity; अस्थूलमनण्वह्रस्वमदीर्घं ब्रह्म (asthūlamanaṇvahrasvamadīrghaṃ brahma); अणुं पर्वतीकृ (aṇuṃ parvatīkṛ) Bhartṛhari 2.78. to magnify; cf. also ‘To make mountains of molehills.’

—subham—

TAGS-

விஷ்ணு சஹஸ்ரநாமம், அணு. அவ்வை , சோம , நிலவு, ஏழு மலை, கடல், காற்று மண்டலம், மேகங்கள்

Leave a comment

Leave a comment