ஹைதராபாத்தில் 20 கோவில்கள்; ஆந்திர மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள்- 6

Ratnalayam Temple Fountains with Lord Vishnu

ஹைதராபாத்தில் 20 கோவில்கள் ஆந்திர மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் 6

 தற்போதைய மாநிலப் பிரிவின்படி ஹைதராபாத்தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின்  தலைநகரமும் ஆகும். அங்கு  சிறிதும் பெரிதுமாக 20 கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை சமீப காலத்தில் கட்டப்பட்டவைதான்.

மிக அருகிலேயே செகந்திராபாத் நகரம் உள்ளதால் இவைகளை இரட்டை நகரங்கள் என்று அழைக்கிறார்கள் .

ஹைதராபாத் நகரத்தின் வரலாறே சுமார் 500 ஆண்டுகள்தான்.1591-ஆம் ஆண்டில் முஸ்லீம் மன்னர் ஒருவரால் நிறுவப்பட்டது ; பின்னர் முகலாயர் வசம் வந்தது ; நிஜாமின் சொத்து, கட்டிடங்கள், மியூசியங்களால் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்தது. முசி நதிக்கரையில் அமைந்த இந்த நகரத்தை முத்து நகரம் என்று அழைப்பார்கள்.

xxxxx

முக்கிய கோவில்கள்

1.Jagannath Temple ஜெகன்நாத் கோவில்

2.Ratnalayam Temple ரத்தநாலயம்

3. Venkateswara Swamy Temple வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

4. Birla Temple பிர்லா கோவில்

5. Shyam Temple ஷ்யாம் மந்திர கோவில்

6. Sri Gnana Saraswati Temple ஸ்ரீ ஞான சரஸ்வதி கோவில்

7. Peddamma Temple பெத்தம்மா கோவில்

8. Karmanghat Hanuman Temple கர்மன்காட் ஹனுமான் கோவில்

9. Sri Adinatha Temple சமணர்களின் ஆதிநாத் கோவில்

10. Keesaragutta Temple கீசரகுட்டா கோவில்

11. ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடம் ஸ்ரீ ஷியாம் பாபா மந்திர்;

12. பல்காம்பேட்டை எல்லம்மா, போச்சம்மா கோவில்;  

13. ஹரே கிருஷ்ணா பொற்கோவில்;

ஸ்ரீ பாக்யலட்சுமி கோவில் , சார்மினார்;

14, சாயிபாபா கோவில்;  

15. அஷ்டலெட்சுமி கோவில்;

16.  சக்தி கணேஷ் கோவில்;  

17. ஸ்வயம்பு சென்னகேசவ கோவில்;

18. சிவ பெருமான் கோவில்;

19. சூரியன் கோவில்;  

20. நரசிம்ம சுவாமி கோவில்;

21. தத்தாத்ரேயர் கோவில்;

Shri Kanchi Kamakoti Peetham Shri Shyam Baba Mandir. …

Balkampet Yellamma Pochamma Temple. …

Hare Krishna Golden Temple. …

Shri Bhagya Laxmi Mandir, Charminar. …

Sai Baba Temple Dilsukhnagar. …

Ashtalakshmi Temple, Hyderabad. …

Shakthi Ganesh Temple. …

Swayambhu Chennakesava Swamy Temple.

Sri Jagannath Mandir, Banjara Hills

Hindu temple

Plot No- 1269, Road No. 12

Ornate Hindu site with colorful carvings

Sri Peddamma Talli Temple

(73K) · Hindu temple

CCJ3+9X3, Road Number 55

Colorful tower with a golden effigy;

Shri Ashtalakshmi Temple

Plot No.52, 55, W Road No. 4

Ornate architecture, idols & lights

xxxx

ஒவ்வொரு கோவில் பற்றியும் சுருக்கமான விவரம்; எல்லா கோவில்களையும் காலை ஆறு மணிக்குத் திறந்துவிடுகிறார்கள்

பஞ்சசரா ஜெகந்நாத் கோவில்

ஜெகந்நாத கோவிலை ஒரிஸ்ஸா (ஓடியா) மாநில மக்கள் கட்டினார்கள். நகரிலுள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது இது. பஞ்சரா குன்றின் மேல் அமைந்துள்ளது ;கலை அழகு  மிக்கது பலராமா , சுபத்ரா, ஜகன்னாதா விக்கிரகங்கள் பிரதானமானவை ஹனுமான், பார்வதி, சிவன், கணபதி சந்நிதிகளும் உள்ளன புரி மரத்திலுள்ள பெரிய ஜகந்நாதர் கோவிலைப் போலவே இங்கு கட்டப்பட்டுள்ளது 70 அடி உயர கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது

xxxx

ரத்தினாலயம் கோவில்

இது வெங்கடேஷ்வரர் கோவில்; அலமேலு மங்கை, பத்மாவதி சகிதம் பெருமாள் காட்சி அளி க்கிறார். அமைதி தவழும் நந்தவனம் இருப்பதால் மக்கள் மவுனமாக நாம ஜபம் செய்யலாம்; தியானம் செய்யலாம்; அல்லது யார்கையை அனு பவிக்கலாம் ; விஷ்ணு ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் பெரிய நீர் ஊற்று ஆலயத்தின் சிறப்பு அம்சம் சங்கு சக்ர ஊற்றுகளும் உண்டு  கல்யாண கட்டம்,  பெரிய மண்டபம், கான்டீன், சிறுவர் விளையாடும் இடம், யாக சாலை, வாகனம் நிற்கும் வசதி அனைத்தும் உள்ளதால் பக்தர்கள் அதிகம் வருகின்றனர்  இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.. நகருக்கு வெளியே இருந்தாலும் பஸ் வசதி உள்ளது .

Ratnalayam Temple Picture

.

xxxx

பிர்லா மந்திர்

நகரின் நடுவில் வெள்ளை பளிங்கால் அமைந்த வெங்கடேசுவரர் சுவாமி கோவிலான பிர்லா மந்திர் உள்ளது.

பிர்லா பவுண்டேஷன் இதை 1976-ம் ஆண்டில் கட்டியது . திருப்பதி பாலாஜி கோவில் மாதிரியில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வெங்கடாசலபதி உருவம் வழிப்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது .

280 அடி உயர குன்றின் மேல் கோவில் கட்டப்பட்டுள்ளது நகரத்தை இங்கிருந்து காண்பதற்கு நிறைய பேர் வருகிறார்கள். மேலும் வெங்கடாசலபதி தவிர சிவன், கணபதி, ஹனுமான் , பிரம்மா சரஸ்வதி விக்கிரகங்களும் உள்ளன. காலை ஏழு மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்; பகலில் சில மணி நேரத்திற்கு கோவில் மூடப்பட்டிருக்கும்

xxxx

தொடர்ந்து மேலும் பல கோவில்களை தரிசிப்போம்

—subham—

Tags- ஹைதராபாத், 20 கோவில்கள், ஆந்திர மாநிலத்தில், 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 6

Leave a comment

Leave a comment