விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-19 (Post No.13,440)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,440

Date uploaded in London – 14 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வரலாற்று ரகசியங்கள்

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள வரலாற்று ரகசியங்கள் குறித்து ஆதிசங்கரர் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் குப்தஸ்ரீ விஜயஅசோக பிரதர்தன போன்ற நாமங்கள் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளதைக் காண்போம்

விக்ரமி – நாம எண் 909-

நடையழகு படைத்தவர் அல்லது மிகுந்த பராக்கிரமம் உடையவர்.

என் கருத்து

இந்தியாவில் விக்ரம அல்லது விக்ரமாதித்யன்  என்ற பெயர்கள் சோழ , பாண்டிய, சாளுக்கிய வம்ச அரசர்களிடையே காணப்படுகிறது  இதற்கெல்லாம் காரணம் உலகப் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் ஆகும்.அவன் உஜ்ஜைனி நகரிலிருந்து வெளிநாட்டுப் படையெடுப்புகளைத் தோற்கடித்தான். அவன் பெயரில் கி.மு. 57-லிருந்து புதிய சகாப்தம் துவங்கியது, வேதாளம் கதைகளுக்கு மூல காரணம் அவன்தான் ; காளிதாசன் போன்ற பெரும் புலவர்களை ஆதரித்தவன்.

xxxx

அபராஜிதஹ — நாம எண் 716

வெல்ல  முடியாதவர் ; எங்கு கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கு வெற்றி என்பது மஹாபாரத வாக்கியம்.. அகமும் புறமும் உள்ள எதிரிகளை ஜெயிப்பவன் விக்ரமன்

என் கருத்து

பல்லலவர்களில் ஒரு மன்னன் பெயர் அபராஜித வர்மன் (885-903 CE ).ஆதித்ய சோழனுக்கு அவன் உதவி செய்தபோதும் பின்னர் நடந்த போரில் அவனை ஆதித்ய சோழனே கொன்றுவிட்டான்

XXXXX

தீர்த்தகர — நாம எண் 691-

உலகை  உய்விக்கும் வித்தைகளை உண்டாக்கி உபதேசித்தவர்; ஹயக்ரீவ வடிவம் கொண்டு மது கைடபர்களைக் கொன்ற பின்னர் பிரம்மாவுக்கு சிருஷ்டி துவக்கத்தில்  எல்லா வித்தைகளையும் உபதேசித்தவர் .

யோ ப்ரஹ்மாணம்  விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி  தஸ்மை

தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரகாஸம் முமு க்ஷுர்வை  சரணமஹம் ப்ரபத்யே

நினைப்பது நாமத்தை உச்சரிசிப்பது முதலியவை செய்தவுடன் எல்லாப் பாவங்களையும் போக்குவனவாகிய கங்கை, புஷ்கரம் முதலான புண்ணிய தீர்த்தங்களை உண்டுபண்ணியவர். சுருதி ஸ்ம்ருதி முதலிய ஸத் சம்பிரதாயங்களைப் பிரவர்த்திக்கச் செய்தவர். கடல் போல இறங்க முடியாத ஆழமான தம்மிடத்தில் பக்தர்கள் இறங்கும்படி படிகளை உண்டுபண்ணியவர் .

கங்காதி  தீர்த்தஹேதுத்வாத் சுருதி ஸ்ம்ருத்யோ ஹோ ப்ரவர்த்தநாத்

ஆத்ம ப்ரவேஸ சோபானம் க்ருதவா தீர்த்தகர ஸ்ம்ருதஹ – பட்ட பாஸ்கரர் உரை

என் கருத்து

சமண மதத்தின் துறவிகளை தீர்த்தங்கரர் என்பார்கள். 24 தீர்த்தங்கரர்களில் புத்தர் வாழந்த காலத்தில் வாழ்ந்தவர் வர்த்தமான மஹாவீரர். அந்த வர்த்தமான என்ற சொல்லும் வேறு ஓரிடத்தில் விஷ்ணுவின் நாமமாக வருகிறது . பிறப்பு- இறப்பு என்னும் நதியைக்கடந்து செல்ல உதவும் துறை போன்றவர்களை சமணர்கள்,  தீர்த்தங்கரர் என்று அழைப்பார்கள். அதே பொருள் இங்குள்ள வியாக்கியானத்திலும் தொனிப்பதைக் காணலாம். வர்த்தமான மஹா வீரர்  2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.

xxxx

பஹு சிரஹ — நாம எண் 115-

பல தலைகளையுடைய விராட் புருஷ வடிவினர்

ஸஹஸ்ர சீர்ஷா புருஷஹ- ஆயிரம் தலையுடையவன் என்று ரிக்வேதத்திலுள்ள புருஷசூக்தம் போற்றுகிறது.

என் கருத்து

தமிழில் கொம்பன் என்ற சொல்வழக்கு உள்ளது ; நீ என்ன பெரிய கொம்பனோ என்று சொல்வார்கள் அதன் பொருள் நீ என்ன அவ்வளவு பெரிய தலைவனோ  முக்கியமானவனோ என்று பொருள்; இதற்கு காரணம் அந்தக்காலத்தில் தலைவர்கள் தலையில் எருமைக் கொம்பால் ஆன மகுடத்தை வைத்துக்கொள்வார்கள். இதை சிந்து-சரஸ்வதி நாகரிக பசுபதி சின்னத்தில் காணலாம். அந்த பசுபதி சின்னத்திலும் பல தலைகள் இருக்கின்றன ஆயிரம் தலைகளையும் சிலையில்/ உருவத்தில் வடிக்க முடியாதல்லவா ?

இப்போது கிரீடம், மகுடம், டர்பன், பரிவட்டம் ஆகியன அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.

XXXX

நைக ச்ருங்கஹ — நாம எண் 763-

ஒரே ஒரு கொம்புமட்டும் உடையவர் அல்ல- ந ஏக ச்ருங்க – நாம எண் 763-

முன்னர் சொன்ன சிந்து-சரஸ்வதி நதி தீர பசுபதி முத்திரையை நினைவிற்கொள்க .

அல்லது நான்கு கொம்புகளை உடையவர்- அதாவது நான்கு வேதங்களையோ அல்லது தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு பண்புகளையோ, குறிக்கோள்களையோ உடையவர். ஏனெனில் ரிக்வேதத்திலும் சத்வாரி ச்ருங்காஹா – நான்கு கொம்புகளை உடையோனே என்ற வரி வருகிறது – தைரிய ஆரண்யகம் 1-10-17; ALSO RV.

சத்வாரி ஸ்ருங்கா த்ரயோஸ்ய பாதா

த்வே சீர்ஷே சப்த ஹஸ்தாஸோஸ்ய

த்ரிதா பத்தோ வ்ருஷபோ  ரோரவீதீ

மஹா தேவோ  மார்த்யான் ஆவிசேச – RV 4-58-3

எருது/ காளை  ரூபத்தில், பெரிய கடவுள் உறைகிறார் 

அவருக்கு 4 கொம்புகள், 3 கால்கள், 7 கைகள்,

அவை மூன்று இடங்களில் கட்டப்பட்டவை ;

அவை  ஒலியை எழுப்பிக்கொண்டு மனிதர்களுக்குள் புகுந்துவி ட்டது– ரிக் வேதம் 4-58-3

XXXXX

சதுர் மூர்த்திஹி – நாம எண் 765-

ஆதி சங்கரர் சொல்கிறார்  : நான்கு வடிவுடையவர்.விராட், ஸூராத்மா , அவ்யாக்ருதம், துரியம் என்பவை நான்கு வடிவங்கள்  அல்லது வெண்மை , செம்மை, பசுமை, கருமை என நான்கு நிறமுள்ள மூர்த்திகள். இன்னொரு உரைகாரரான பட்ட பாஸ்கரர் கிருஷ்ணனாகிய விபவா அவதாரத்திலும்  அதற்கு காரணமான வ்யுயூஹங்களை  நினைவூட்டுவது போல  பலபத்ரன், வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு  மூர்த்திகளை உடையவர்.

நான்கு கொம்புகள் உடைய சொல்லுக்கான  முந்திய  விளக்கங்களையும் காணவும்.

XXXX

ச்ருங்கி- நாம எண் 797-

கொம்புள்ள மீனாக அவதரித்தவர்.

சஹஸ்ரநாமத்தில் இதுவரை கொம்பில்லாத, மற்றும் 4 கொம்புகளையுடைய, ஒரே கொம புள்ள மீனாகக்  கடவுள் வருணிக்கப்பட்டுள்ளார். பிரளய கால மச்சாவதாரத்தை நினைவு படுத்தும்  கதை இது. எல்லா பண்பாடுகளிலும், ப்ரளய கதை உள்ளது

—subham—-

Tags- வரலாற்று ரகசியங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part-19

Leave a comment

Leave a comment