ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி –7 (Post No.13,439)

Sri Venkateswara Temple.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,439

Date uploaded in London – 14 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேசரிகுட்டா கோவில்

ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி ……ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – 7

ஹைதராபாத் நகரம் தற்போது தெலுங்கனா மாநிலத்தின் தலை நகரம் ஆகும். அங்குள்ள சில கோவில்களை சென்ற கட்டுரையில் தரிசித்தோம்; 20 கோவில்களில் மேலும் சில முக்கிய கோவில்களை தரிசிப்போம்.

கேசரிகுட்டா கோவில்

இந்த வட்டாரத்திலுள்ள மிகப்பழைய கோவில் இது; ஏனெனில் ஆறாம்  நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டும் சிற்பங்களும் கிடைத்துள்ளன. இது ஒரு சிவன் கோவிலானாலும் அனுமன் – ராமனுடன் தொடர்புடைய கோவில். அழகான பசுமை மிக்க சூழ்நிலையில் குன்றின்மீ து கட்டப்பட்டுள்ளது.. ராவணன் ஒரு பிராமணன்; அவனைக்கொன்ற பிரம்மஹத்தி (பிராமணப் படுகொலை) பாவம் அகல ராமபிரான் ஒரு கோவிலைக் கட்டினார் . நல்ல சிவலிங்கத்தைக் காசி மாநகரிலிருந்து கொண்டுவருவதற்காக அனுமனை காசிக்கு அனுப்பினார் ராமன்.

அனுமன் வருவதற்குள் முகூர்த்த நேரம் போய்விட்டதே என்று ராமன் கவலைப்பட்ட நேரத்தில் ஸ்வயம்பூ லிங்கம்  தோன்றியதாம் ; ஸ்வயம்பூ  என்றால் ‘தான்தோன்றி’.

 அனுமன் வருவதற்கு தாமதம் ஏன்?

புடவைக் கடைக்குள் நுழைந்த பெண்மணிகள் எந்தப் புடவையை எடுப்பது என்று திக்குமுக்காடி, ஒரு புடவைக்குப் பதில் 3  புடவைகளை எடுத்துவருவது போல, அனுமனும் நல்லதை ‘செலக்ட்’ பண்ண முடியாமல் 100 லிங்கங்களை எடுத்து வந்தாராம் . முன்னரே லிங்கம் உருவானதால் அவற்றை மலைகளில் தூக்கி எறிந்தாராம் ; இப்போதும் அந்த லிங்கங்களையும் காணலாம்; அவைகளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் உண்டு. மஹாசிவராத்திரி பண்டிகையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் படை எடுக்கும் கோவில் இது.

கேசரி பெற்றெடுத்த  பிள்ளை அனுமன் ; ஆகையால் கோவிலின் பெயர் கேசரி குட்ட கோவில்.

இந்த இடத்திற்கு மேலும் இரண்டு சிறப்புகள் இருக்கின்றன ; தெலுங்கனாவின் மிகப்பழைய , அதாவது 1400 ஆண்டுக்கு முந்தைய தெலுங்குக் கல்வெட்டு இங்குதான் கிடைத்தது . அது ஒரு குடைவரைக் கோவிலுக்குள் கிடைத்தது.

அடுத்த சிறப்பு என்னவென்றால், 2014ம் ஆண்டில் தொல்பொருட்த் துறை நடத்திய அகழ்வாய்வில்  நிறைய சமண சமய தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்தன.

Opening hours: 6 am to 12:45 pm and 3 pm to 7: 30 pm
Location: Medchal-Malkajgiri district, Hyderabad

xxx

ஷ்யாம் பாபா மந்திர்

இதை காஞ்சி காமகோடி பீடம் ஷ்யாம் பாபா மந்திர் என்று அழைக்கிறார்கள்; இது ஒரு கிருஷ்ணன் கோவில்;அங்கு அழகான சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன; ஜன்மாஷ்டமி விழா/ கிருஷ்ணன் பிறப்பு நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாள் முழுவதும் பஜனைகள் நடக்கும்.

முழு முகவரி :

Opening hours: 6 am to 12 noon and 4 pm to 8:30 pm

 Shri Kanchi Kamakoti Peetham Shri Shyam Baba Mandir

Kachiguda Station Rd, Veeranna Gutta, Barkatpura, Kachiguda, Hyderabad, Telangana 500027

xxx

வெங்கடேஸ்வரா சுவாமி கோவில்- பாஸ்போர்ட்/ விசா பெருமாள் கோவில்

இந்தக் கோவில் ஹைதராபாத் நகரின் மிகப்பழைய கோவில்களில் ஒன்று. ஒரு வாரத்தில் லட்சக் கணக்கான பக்த்ர்களைக் கவர்ந்து இழுக்கிறது. ஏனெனில் இந்தப் பெருமாளை சேவித்தால் பாஸ்போர்ட் அல்லது விசா உடனே வந்துவிடுகிறதாம். இதை சிக்கூர் பாலாஜி கோவில், பாஸ்போர்ட்/ விசா பெருமாள் கோவில் என்று பொது மக்களை அழைக்கிறார்கள் . இதோ முகவரி

Venkateswara Swamy temple

Opening hours: 6 am to 1 pm and 6 pm to 9 pm
Location: Venkateswara Swamy Temple Ln, Sai Ratna Arcade, New Santoshnagar, Santosh Nagar, Hyderabad, Telangana 500059

xxxx

கர்மன்காட் ஹனுமார் கோவில்

ஹைதராபாத் நகரம் தோன்றுவதற்கு முன்னரே கட்டப்பட்ட கோவில். 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்திய காகதீய வம்ச மன்னர்கள் இதைக் கட்டினார்கள் ; நகர் முழுதும் சின்ன சின்ன அனுமார் கோவில்களும் உண்டு. அனுமன் இருக்கும் இடத்தில் ராமன் இருப்பான்; ராமன் இருக்கும் இடத்தில் ராம பக்த ஆஞ்சனேயன் இருப்பான்; ஆகையால் இந்தக் கோவில்களில் ஸ்ரீ ராமரையும் தரிசிக்கலாம்.

 Karmanghat Hanuman Temple

Opening hours: 6 am to 12 noon and 4 pm to 8 pm. Every Tuesday, the temples remain open from 5:30 am to 1 pm and 4 pm to 9 pm
Location: 8-2-61, Padma Nagar Colony, Champapet, Hyderabad, Telangana 500079

xxxx

பெத்தம்மா கோவில்

கிராம மக்களின் முக்கிய தெய்வம் பெத்தம்மா அன்னை ஆவாள் ; பெரிய அம்மன் என்ற பெயருடன் விளங்கும் இந்தக் கோவிலுக்கு பல வண்ண கோபுரம் இருக்கிறது; முக்கியத் திருவிழாக்கள் — போனலு பண்டிகையும் ரத சப்தமி பண்டிகையும் ஆகும்  ஜூன்- ஜூலையில் இந்த விழாக்கள் நடக்கும். ஆண்டு முழுதும் பகதர்கள் வரும் ஆலயம் இது .

Opening hours: 6 am to 1 pm and 3 pm to 8 pm
Location: Jagadish Nagar, Begumpet, Hyderabad, Telangana 500003

To be continued……………………..

–subham—

Tags–ஹைதராபாத்  கோவில்கள், கட்டுரை 7, தொடர்ச்சி, கேசரிகுட்டா

Leave a comment

Leave a comment