
BHAGYALAKSHMI TEMPLE

Date uploaded in London – 15 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி ……ஹைதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது
ஸ்வயம்பூ சென்னகேசவ சுவாமி கோவில்
Swayambhu Chennakesava Swamy Temple
இது ஒரு சிவன் கோவில் . ஹைதராபாத்திலுள்ள பழைய கோவில்களில் இதுவும் ஒன்று.
வெள்ளை கற்களால் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் , சிவ பக்தர்களுக்கு முக்கியமான கோவில் ஆகும்.
விஜயநகர வம்சத்துக்கு பின்னால் எழும்பிய, 600 ஆண்டுகள் பழமையான, கோவில்.சந்திராயானகுட்டாவில் இருக்கும் மலைப்பாறைகளைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அழகான சிற்பங்கள் . வரலாற்று நோக்கில் பலரும் அணுகும் கோவில்
XXXX

சூரியன் கோவில்
இது 1959ம் ஆண்டில் கட்டப்பட்டது.. பசுமை மரங்கள் சூழ்ந்த இடத்தில் வண்ணமிகு கோபுரம் கவர்ச்சியுடன் நிற்கிறது
Timings: 6:30 AM-12:30 PM & 5:00 PM-7:30 PM
Location: Aruna Enclave, Trimulgherry, Hyderabad – 500015, Near SP Colony
Sri Surya Devalayam, Trimulgherry is now available on Whatsapp and Telegram.
Please reach us out on +91 – 95425 52425
Mail id : srisurya.devalayam@gmail.com
Address Secunderabad, Tirumalagiri, Telangana 500015.
நரசிம்ம சுவாமி கோவில்
இது ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. அங்கு ஐந்து வெவ்வேறு நரசிம்மர்களை தரிசிக்கலாம்.அமைதியான சொல்நிலையை விரும்புவோர் இந்த இனத்திற்குச் செல்லலாம்.
Timings: Morning and Evening
Location: Nampally Gutta

XXXX
தத்தாத்ரேயர் கோவில்
அண்மைக்காலத்தில் தோன்றிய தத்தாத்ரேயர் கோவில் சீதாராம் பாக் என்னுமிடத்தில் உள்ளது.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் ஒன்று . வார இறுதி நாட்களில் அதிகம் பக்தர்கள் வருகிறார்கள்.
Timings: 6:00 AM-11:00 AM and 4:00 PM-8:00 PM
Location: Sitaram Bagh, Hyderabad, Telangana-500006.
XXXX
எட்டு வகையான லெட்சுமி உருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் இருக்கின்றன . சென்னையில் உள்ள அஷ்ட லெட்சுமி கோவில் போலவே கட்டப்பட்டுள்ளது.1996 முதல் இயங்கிவரும் இக்கோவில் , தில்சுக் கக்கருக்கும், எல்.பி நகருக்கும் இடையே உள்ளது ;பளிங்கனுக்கு கற்கள் போல பளபளக்கும் இக்கோவில் இரவு நேர மின் ஒளியிலும் நிலவு ஒளியிலும் பார்க்கப் பரவசம் ஊட்டும்;
அமைதியான சூழ்நிலை உடைய கோவில்.
Timings: 6:00 AM-9:00 PM
Location: Vasavi colony, Ramakrishnapuram, Kothapeta, Hyderabad, Telangana-500035
XXXX
இஸ்கான் கோவில் ISKCON Temple Hyderabad
இஸ்கான் என்பது ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சுருக்கப்பெயர் ; அங்கு ராதா கிருஷ்ணர் மூர்த்திகளைக் காணலாம் . எப்போதும் ஹரேகிருஷ்ணா பக்தர்களின் பஜனை ஒலியைக் கேட்கலாம் . அதிகளாயில் திறக்கும் கோவில் இது.
Timings: 4:30 AM-8:30 PM
Location: Hare Krishna Land, Nampally Station Road, Abids

XXXX
ஸ்ரீ கணேஷ் கோவில், செகந்திராபாத் Sri Ganesh Temple, Secunderabad
ராம்கோடி பகுதியில் உள்ளது. இங்குள்ள சிவ லிங்கமும் ஒப்பற்றது
ஹைதராபாத்தும்,செகந்தராபாத்தும் இரட்டை நகரங்கள். அங்குள்ள பிள்ளையார் கோவில், 200 ஆண்டுப் பழைய கோவில். பிள்ளையார் முக்கிய சந்நிதியில் இருக்கிறார்.; மேலும் ஆறு சந்நிதிகளில் நவக்கிரகங்கள், உமா மகேஸ்வரர், ஆஞ்சனேயர் , முருகன், சிவ பிரான் மூர்த்திகளைத் தரிசனம் செய்யலாம். நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே கோவில் அமைந்துள்ளது.
XXXX
ஹரேகிருஷ்ணா பொற்கோவில்
இது மிகவும் புதிய கோவில் 2018ம் ஆண்டில்தான் கட்டப்பட்டது நரசிம்ம சுவாமிக்கு ஒரு சந்நிதியும் , ராதா கிருஷ்ணருக்கு ஒரு சந்நிதியும் தனித்தனியே உள்ளன. பஞ்சரா ஹில்ஸ் சாலை 12ல் கோவில் இருக்கிறது. நரசிம்ம சுவாமிக்கு ஸ்வயம்பு உருவம் என்று சொல்லப்படுகிறது.

xxxx
ஸ்ரீ பாக்யலட்சுமி கோவில்
Shri Bhagya Laxmi Mandir, Charminar
எல்லோரும் நன்கறிந்த சார்மினார் சின்னம் உள்ள பகுதியில் பாக்ய லெட்சுமி கோவில் அமைந்துள்ளது 1960 ஆம் ஆண்டுகளில் உருவான கோவில்;. கோர்ட் வரை சென்ற கோவில்; சதவிரயத்தமாகக் கட்டப்பட்டதாக வழக்கு தொடர்ந்தபோது, இனி விரிவாக்கம் செய்யக்கூடாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது.லெட்சுமி தே விக்குரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களில் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
xxxx
சாய் பாபா கோவில்
Sai Baba Temple Dilsukhnagar
தில்சுக் நகரில் 1990 முதல் பிரபலமாகி வரும் கோவில்.அங்கு காலையிலும் மாலையிலும் ஷீரடி பாபாவுக்கு மராத்தி பாணி பூஜை , ஆரத்தி நடைபெறுகிறது. வியாழக் கிழமைகளில் அதிக கூட்டம் வருகிறது ; கோவில் இருக்குமிடம்- தில்சுக் நகர்.
-இவை தவிர சமண தீர்த்தங்கரை கோவில், புத்தர் கோவில் ஆகியனவும்கட்டப்பட்டுள்ளன.
–SUBHAM—
Tags- சக்தி கணபதி ,அஷ்டலெட்சுமி , புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 8, ஆந்திரம், தெலுங்கானா , ஹைதராபாத், செகந்தராபாத்