ராமாயணத்தில் சாபங்கள் (42) நந்தீஸ்வரர் ராவணனுக்கு சாபம் கொடுத்தது! (Post No.13,442)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.442

Date uploaded in London – 15 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (42) 

ராமாயணத்தில் சாபங்கள் (42) நந்தீஸ்வரர் ராவணனுக்கு சாபம் கொடுத்தது! 

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் என்ற பெயரை பெற்றது’. 

ராவணன் தன்னுடைய தமையனான குபேரனது இடத்தை அடைந்து அவனுடன் போரிட்டு அவனை வென்றான். குபேரனது புஷ்பக விமானத்தையும் பறித்துக் கொண்டான். 

அந்த விமானத்தில் ஏறி சுப்ரமண்யக் கடவுள் இருக்கும் சரவணம் என்ற இடத்திற்க்குச் சென்றான். அங்கு விமானம் அசையாமல் நின்று விட்டது.

இதற்குக் காரணம் என்ன என்று அவன் யோசிக்கும் வேளையில் சிவபிரானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் ராவணனிடம் வந்தார்.  வானர முகத்துடன் அவர் வந்ததைக் கண்ட ராவணன் பெரிதாக நகைத்தான்.

உடனே நந்தீஸ்வரர் அவனை நோக்கி இப்படி சாபம் ஒன்றைக் கொடுத்தார்:

யஸ்மாத்வானர மூர்த்தி மாம் த்ருஷ்ட்வா ராக்ஷஸ துர்மதே |

மௌக்யார்த்த்வமவஜானிஷே பரிஹாஸம் ச முச்சஸி |\

துர்மதே – புத்தி கெட்ட

ராக்ஷஸ – ராக்ஷஸனே

மாம் – என்னை

வானரமூர்தி – வானர உருவத்துடன் இருப்பதை

த்ருஷ்ட்வா – பார்த்து

யஸ்மாத் – அக்காரணத்தால்

பரிஹாஸம் ச முச்சஸி – பரிஹாஸமாய் நகைக்கின்றனை!

மௌக்யார்த் – மூடத்தனத்தால்

த்வம் – நீ

அவஜானிஷே – அல்பமாய் நினைக்கின்றாய்

தஸ்மாந்மத்ரூபசம்பன்னா மத்வீர்யே சமதேஜஸ: |

உத்பத்ஸ்யந்தி வதார்தம் ஹி குலஸ்ய தவ வானரா: ||

தஸ்மாத் – இதன் காரணமாக

தவ – உனது

குலஸ்ய ஹி – குலத்திற்கே

வதார்த – கருவழிக்க

மத்ரூபசம்பன்னா – எனது ரூபம் கொண்டவர்களும்

மத்வீர்யசம தேஜஸ: – எனக்குச் சமமான வீர்யமும் பராக்கிரமும் கொண்டவர்களான

வானரா: – வானரர்கள்

உத்பத்ஸ்யந்தி – உற்பவிப்பார்கள்

கிம் த்விதானீம் மயா சக்யம் ஹந்தும் த்வாம் ஹே நிஷாசர |

ந ஹந்தவ்யோ ஹதஸ்த்வம் ஹி பூர்வமேவ ஸ்வகர்மபி: ||

ஹே நிஷாசர் – அடே அரக்கனே

இதானீம் – இப்போதே

மயா – என்னால்

த்வாம் – உன்னை

ஹந்தும் – கொல்வதற்கு

சக்யம் – சாத்தியம் தான்.

கிம் து – அப்படி இருந்தும்

த்வம் – நீ

ஸ்வகர்மபி: – உன்னுடைய கர்மங்களால்

ஹத: – கொல்லப்பட்டவனாய்

பூர்வ ஏவ ஹி – முன்னமேயே ஏற்பட்டிருக்கும் காரணத்தால்

ஹந்தவ்ய: – (என்னால் இப்போது) கொல்லப்பட வேண்டியவனாக

ந – இல்லை

–    உத்தரகாண்டம் பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 14 முதல் 16 முடிய

இதைச் சற்றும் பொருட்படுத்தாத ராவணன் மலையைப் பெயர்த்து எறிகிறேன் என்று கைலாய மலையை அசைத்தான்.

பரமேஸ்வரன் தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக மலையை அழுத்தினார். ராவணன் கைகள் நசுக்குண்டன. அவன் ஓவென அலறினான். அனைவரும் அவனை சிவபிரானைத் துதிக்குமாறு கூற அவன் அவரைப் பல தோத்திரங்களால் துதித்தான்.

சிவன் அவனுக்கு அருளி, சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தார். “இப்படி அலறியதால் மூவுலகமும் சப்திக்கப் பெற்றதாய் விளங்கிற்று. ஆகவே நீ ராவணன் என்ற பெயரால் விளங்குவாய்” என்று சிவபிரான் கூறியருளினார்.

இதன் தொடர்பாக சுந்தரகாண்டத்தில் 50வது ஸர்க்கத்தில் வரும் 2 மற்றும் 3வது ஸ்லோகங்களையும் பார்க்கலாம்.

ராவணன் தனக்கு முன்னே வந்து நிற்கும் வானர மூர்த்தியான ஹனுமானைப் பார்த்தவுடன் அவன் முன்பு கைலாயத்தில் நந்தீஸ்வரிடம் வாங்கிய சாபம் நினைவுக்கு வர இப்படிக் கூறுகிறான்:-

கிமேஷ பகவான்நந்தீ பவேத்சாக்ஷாதிஹாகத: |

கிம் – என்ன இது?!

ஏஷ: – இவன்

நந்தோ பகவாந் நந்தி பகவானே

சாக்ஷாத் – கண்கூடாக

இஹ ஆகத: – இங்கு வந்தவனாக

பவேத் – ஆக வேண்டும்

யேன சப்தோஸ்மி கைலாஸே மயா சஞ்சாலிதே புரா |

ஸோயம் வானரமூர்த்தி: ஸ்யாத் கிம்ஸ்வித்தானோபி வாஸுர: ||

புரா – முன்னர்

மயா – என்னால்

கைலாஸே – கைலாய மலை

சஞ்சாலிதே – குலுக்கப்பட்ட போது

யேன – எவனால்

சபத: அஸ்மி – நான் சபிக்கப்பட்டேனோ

ஸ: -அவன்

அயம் – இந்த

வானரமூர்தி: – வானரமூர்த்தியாய்

கிம் ஸ்வித் – ஒருக்கால்

ஸ்யாத் அபி – வந்து விட்டானோ!

வா – அல்லது

பாண: அசுர: – பாணாஸுர்னாய் இருக்குமோ?

இவ்வாறு ராவணன் தனக்குள் ஆலோசிக்கிறான். அவன் தான் பெற்ற சாபத்தை இங்கு நினவு கூர்கிறான்.

யுத்த காண்டத்தில் 60வது ஸர்க்கம் ‘கும்பகர்ணனை விழிக்கச் செய்வது’ என்னும் ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரது பாணங்களை நினைத்து உள்ளம் வெதும்பிய ராவணன் தனது பழைய சாபங்கள் அனைத்தையும் இங்கு நினைவு கூர்கிறான்.

உமா நந்தீஸ்வர்ஸ்சாபி ரம்பா வருணகன்யகா!

யதோக்தாஸ்தபஸா ப்ராப்தம் ந மித்யா ருஷிபாஷிதம் ||

உமா – பார்வதியும்

நந்தீஸ்வர – நந்தீஸ்வரரும்

ரம்பா – ரம்பையும்

வருணகன்யகா ச – வருணனின் மகளும்

தபஸா – மன வேதனையால்

யதோக்தா: – எதை வேண்டினார்களோ அது

ப்ராப்தம் – கிடைத்து விட்டது

ருஷிபாஷிதம் – வேதங்களின் நுட்பம் அறிந்த ரிஷிகளின் சொற்கள்

அபி மித்யா ந – பொய்யாகவே இல்லை. 

அனைத்து சாபங்களும் ஒருங்கே கூடி உரிய வேளையில் பலிக்கிறது.

**

Leave a comment

Leave a comment