WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,444
Date uploaded in London – 15 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,444
Date uploaded in London – 15 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
வரலாற்று ரகசியங்கள் continued……………………..
ஹிட்லரின் ஸ்வஸ்திகா
ஸ்வஸ்தித , ஸ்வஸ்திக்ருத் ,ஸ்வஸ்தி, ஸ்வஸ்திபுக்,ஸ்வஸ்திதட்சிண – நாம எண்கள் 901,902, 903,904,905
ஸ்வஸ்தி என்றால் மங்களகரமான ; மொத்தத்தில் எல்லோருக்கும் மங்களத்தை அளிப்பவர் விஷ்ணு. உலகம் முழுதும் ஒரு சின்னம் காணப்படுகிறது அதை ஸ்வஸ்திகா சின்னம் என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லால் மட்டுமே குறிப்பர். இந்துக்களின் கோவிலிலும் , கடைகளின் சுவரிலும், வடக்கத்திய கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இன்றும் காணப்படும் இந்தச் சின்னம் கிரேக்க நாட்டுப் பானைகளிலும் சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீக முத்திரைகளிலும் 3000 ஆண்டுகளாக காணப்படுகிறது இதைப் பொறிப்பதன் காரணம் மங்களத்தை உண்டாக்கும் என்பதே.
ஆனால் இப்போது இந்த சின்னத்தைக் கண்டால் ஐரோப்பாவே நடுங்குகிறது. போலீசார் உங்களைக் கைது செய்துவிடுவார்கள். ஏனேனில் ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்திய சின்னம் இது
ஹிட்லர் ஏன் இந்தக் கொடியில் , ராணுவ உடையில் ஸ்வஸ்திகா சின்னம் போட்டார் என்றால் மாக்ஸ்முல்லர் கும்பல் செய்த பிரசாரம். ஹிட்லர் தனது சுய சரிதையில் ஆரியரைப் புகழ்ந்து எழுதியுள்ளார். அதற்கு காரணம் அதே ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ் முல்லர் நாம் ஜெர்மானியர்கள்; ரிக் வேதத்தை எழுதிய புலவர்களும் ஆரியர்கள் என்று சாகும் வரை மாக்ஸ் முல்லர் பிரசாரம் செய்ததே! . இன்றும் தப்பித் தவறி ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஐரோப்பாவுக்கு வந்தால் உங்களுக்கு அடி உதை கிடைப்பது நிச்சயம் . இந்த ஜு லை (2024) மாதம் நடந்த பிரெஞ்சுத் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் சுவஸ்திகா சின்ன தொப்பி அணிந்து இருந்தார். உடனே அவரை அந்தக் கட்சியே போட்டியிலிருந்து அகற்றியது. அதுவும் அவர் எப்போதோ தொப்பி அணிந்து போஸ் கொடுத்ததை எதிர்க் கட்சிகள் கண்டு பிடித்து வெளியிடவே அவர் ‘கதை’ முடிந்தது.
லண்டனில் 18 ஆண்டுகளுக்கு நான் நடத்திய நான்கு சங்கங்களில் ஒன்று உலக இந்து மஹா சங்கம். அதன் சார்பில் ஒரு இன்னிசைக் கச்சேரி ஏற்பாடு செய்தேன் . பெரும்பாலான நிகழ்ச்சி அழைப்பிதழ் பத்திரிகைகளை நானே வீட்டில் கம்பியூட்டரில் டிசைன் செய்து எல்லோருக்கும் ஈ மெயில் அல்லது தபாலில் அனுப்பிவிடுவேன். இந்த முறை இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் இருவர் டாக்டர்கள். அவர்களுக்கும் சில அழைப்பிதழ்களைக் கொடுத்து உங்கள் வெள்ளைக்கார நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என்றேன். மறுநாள் மிகப்பதட்டத்தோடு எனக்குப் போன் செய்து, சுவாமிநாதன் முதலில் அழைப்பிதழ்களை எரித்து விடுங்கள். நானே புதிதாக வேண்டுமானாலும் உடனே அச்சடித்துத் தருகிறேன் என்றார் ; எனக்கும் அதிர்ச்சி ! என்னை அறியாமலே ஏதேனும் பெரிய பிழை வந்துவிட்டதோ என்று எண்ணி, காரணத்தை வினவினேன். நீங்கள் கொடுத்த பத்ரிக்கையில் பார்ட்ரில் ஸ்வஸ்திகா சின்னத்தைப் போட்டுவிட்டீர்கள். என் நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சி. என்னை உங்கள் அமைப்பு ஹிட்லர் ஆதரவாளர்களா, இது அரசியல் கூட்டமா? அல்லது கச்சேரியா ? என்று கேட்டுவிட்டார்கள் என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார். எனக்கு ஒரே சிரிப்பு. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள்- இது இந்துக்களின் மங்களச் சின்னம் ; இந்தியா முழுதும் இன்றும் இது புனித சின்னமாகக் கருதப்படுகிறது.ஆ னால் பார்ட்டரை மாற்றி பூக்கள் பார்ட்டரைப் போட்டு ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு அனுப்புகிறேன். ஆனால் சங்க உறுப்பினர் அனைவருக்கும் இதைத்தான் அனுப்புவேன்; கவலைப்படாதீர்கள் என்றேன்.
எங்கள் வீட்டுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா அனுப்பிய விலை மதிப்புமிக்க கல்யாணப் பத்திரிகையில் கூட ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது; தமிழர்கள் பிள்ளையார் சுழியைப் பயன்படுத்துவது போல வடக்கத்திய இந்துக்கள் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்துவர்.
ஜெர்மன் படைகள் இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர் ஆஸ்திரியாவையும் ஆக்கரமித்திருந்தது . இப்போது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டிடம் உயரத்திலிருந்து பாரத்தால் ஸ்வஸ்திகா போல வடிவம் தெரிகிறது என்று அழித்து புதிய கட்டிடம் கட்டினார்கள். ஸ்வஸ்திகாவைக் கண்டால் ஹிட்லரையே நேரில் பார்த்தது போல பயப்படுகிறார்கள். தீவிர வலதுசாரிக் கட்சிகள்வேறு பல இடங்களில் இதைப்பொறித்து யூதர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இத்தனைக்கும் மூல காரணம் மாக்ஸ்முல்லர், கால்டுவெல் கும்பலின் ஆரிய குடியேற்றப் பிரசாரம் தான்.
இப்போதும் தமிழ் கல்வட்டுப் புஸ்தகங்களைப் படித்தீர்களானால் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றுதான் கல்வெட்டுக்கள் துவங்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றையே தமிழ் மன்னர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
xxxx
நந்தஹ — நாம எண் 528–
சங்கரர் தரும் பொருள் -வேண்டியவை எல்லாம் நிரம்பியவர்; அல்லது விஷய சுகங்களைக் கடந்தவர். பொதுவான பொருள் –மகிழ்ச்சி, வளர்ச்சி.
என் கருத்து
விஷ்ணு ஸஹஸ்ரநாம சொற்களில் நந்த, குப்த , ஸ்ரீ விஜய ஆகியவற்றை பெரிய வம்சங்கள் எடுத்துக் கொண்டன. நந்த வம்சத்திலிருந்துதான் இந்தியாவின் வரலாறே துவங்குகிறது அதற்கு முந்தைய 1500 வருஷம் வெறும் பூஜ்யம் ; இந்தியாவில் ஒன்றுமே இல்லை என்று வெள்ளை க்காரன் புஸ்தகம் எழுதி வைத்துள்ளான் . கி. மு 1800 வாக்கில் சிந்து -சரஸ்வதி தீர நாகரிகம் அழிந்தபின்னர் 1200 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நந்த வம்சம் என்பது ஆட்சி செய்தது என்பது அவர்களின் ‘கப்ஸா’. ஆ னால் அந்த நந்த வம்சத்தினர் சூத்திரர்கள். க்ஷத்ரியர்கள் அல்ல. சாசாணக்கியன் என்ற கறுத்த பிராமணனை சாப்பா ட்டுப் பந்தியில் கிண்டல் செய்தபோது அவன் குடுமியை அவிழ்த்துப் போட்டு உன் வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியைக் கட்டமாட்டேன் என்று சபதம் செய்தான்.இதை திருவள்ளுவரும் பாடி இருக்கிறார். பெரியாரைப் பகைத்தால் பெரிய அரசுகள்இடை மு றிந்து விழும் என்கிறது குறள் .
மயில் வளர்க்கும் ஜாதி (மயூர= மோரிய)இளைஞர்களைக் கூப்பிட்டு அலெக்ஸ்சாண்டரையே நடுங்க வைத்த நந்தர்களை ஒழித்துக்கட்டினார் சாணக்கியர். சாணக்கியர் இந்த வரலாறு பல சம்ஸ்க்ருத நாடகங்களை உருவாக்கியது தமிழிலும் சாணக்கிய சபதம் வந்தது.
xxxx
அசோக – நாம எண் 336-
சங்கரர் தரும் பொருள்- சோகம் அற்றவர் ; பசி , தாகம் , விசனம்/துக்கம், மயக்கம், மூப்பு, மரணம் ஆகிய ஆறு குறைகள் இல்லாதவர் .
வரலாற்றில் புகழ் பெற்ற அசோக மாமன்னரை அறியாதோர் யாருமிலர்; தனது மகன், மகளையே புத்த மதத்திற்குக் கொடுத்து, ஆசியா முழுதும் புத்த மத்ததைப் பரப்பினார் . இந்துக்கள் வெறும் ஓலைகளிலும் துணியிலும் மட்டும் எழுதி வந்ததை மாற்றி முதல் முதலில் பாறைகளில் கல்வெட்டுகளைப் பொறித்தார் ; அதனால் அசைக்க முடியாத வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்தன
.xxxx
சித்தார்த்தஹ- நாம எண் 252-
வேண்டியவெல்லாம் தமக்குத் தாமே பெற்றிருப்பவர். கீதையிலும் -22ல் இதை கிருஷ்ணன் சொல்கிறார்.செய்யவேண்டிய கருமம் எனக்கு மூவுலகிலும் இல்லை; அடைய வேண்டிய பொருளும் எதுவுமில்லை .
வரலாற்று நோக்கில் பார்த்தால் சித்தார்த்தன் என்பது கெளதம புத்தரின் இயற் பெயர் ஆகும் . அவர் வாழ்ந்த காலம் 600 BCE
xxxx
மஹேந்த்ரஹ- நாம எண் 268-
ஈஸ்வரருக்கும் ஈஸ்வரர் என்பது பொருள் .
வரலாற்று நோக்கில் பார்த்தால் பல்லவர்களின் மிகச் சிறந்த மன்னன் மஹேந்திர பல்லவன் ஆவார். அவர் வாழ்ந்தது 600 CE.. சிற்பக் கலையிலும் எழுத்துத் துறையிலும் வல்லவர். மத்த விலாஸப் ப்ரஹசனம் என்னும் சம்ஸ்க்ருத நகைச்சுவை நாடகத்தை எழுதியவர்; பல குகைக் கோவில்களைக் கட்டியவர். முன்னர் அபராஜித என்ற பல்லவனின் பெயரைக் கண்டோம். நரசிம்ம என்ற சொல்லும் வி..ச.வில் வருகிறது. இந்தத் துதி மூன்று பெரிய பல்லவர்களுக்குப் பெயர்களை அளித்தது குறிப்பிடத் தக்கது
மேற்கூறிய பட்டியல் வரலாற்றில் வி..ச..வின் தாக்கத்தைக் காட்டுகிறது.
தொடர்ந்து மேலும் காண்போம்.
—subham—
TAGS-வரலாற்று ரகசியங்கள் , விஷ்ணு சஹஸ்ரநாமம் (வி.ச.), ஸ்வஸ்திகா, ஹிட்லர்