
Date uploaded in London – 16 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 9
வா்கல் சரஸ்வதி கோவில் (Wargal Saraswati Temple) , அல்லது ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில், தெலுங்கானாவில் உள்ள சித்திப்பேட்டை என்னும் மாவட்டதில் இருக்கிறது . இந்த சரஸ்வதி கோவிலை காஞ்சி சங்கர மடம் பராமாிக்கிறது. யயவரம் சந்திரசேகர சா்மாவின் முயற்சியால் இது கட்டப்பட்டது.. இங்கு சனீஸ்வரன் (சனைச்சரன் = மந்தமாக நகர்பவன் ) கோவிலும் உள்ளது.
கோவிலானது கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. அதே மலையடிவாரத்தில் வேறு பல தெய்வங்களின் கோவில்களும் உள்ளன:
ஸ்ரீ லட்சுமி கணபதி கோவில்
ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில்
சனீஸ்வரன் (சனைச்சரன் ) கோவில்
சிவன் கோவில்
ஒரு சில வைஷ்ணவ கோவில்கள், இப்போது முற்றிலுமாக சேதமடைந்து, மூலஸ்தானத்தில் விக்ரகங்கள் ” இல்லாமல் காணப்படுகிறது.
வர்கல் சரஸ்வதி கோவிலில் பல வித சேவைகள் உண்டு . இந்துக்களின் கல்வித் தெய்வம் சரஸ்வதி ஆதலால்
பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் செய்வதற்குக் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்..இதற்கு சிறிய கட்டணம் உண்டு. கோவிலில் பக்தா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இந்த நித்ய அன்னதானம்த்துக்கு நன்கொடை கொடுக்கலாம் .
ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வசந்த பஞ்சமி மற்றும் சரத் கால நவராத்திாி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கோவிலின் ஒரு சிறப்பு வேத பாடசாலை ஆகும்.பல மாணவா்கள் வேதங்களைக் கற்பதற்காக இந்தப் பள்ளிக்கூடத்துக்கு (பாடசாலை) வருகின்றனர்.
கோவில் வரலாறு
ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||
सदाशिव-समारम्भां शङ्कराचार्य-मध्यमाम्।
अस्मदाचार्य-प्रयन्तां वन्दे गुरु परम्पराम् ॥
Beginning from Lord sadaashiva himself, jagadguru shankaraachaarya in the middle, up until my own guru – I prostrate to the entire guru-paramparaa.
சந்திரசேகர சர்மா என்ற அறிஞரின் முயற்சியில் இந்தக் கோவில் உருவானது . கோவிலைக் கட்டுவதற்கான இடத்தைத் தேடியபோது வார்கல் மலையில் முன்னரே மேலும் பல கோவில்களும், ஒரு குகையில் சிவன் கோவிலும் இருந்ததால் அந்தக் குன்றினையே தேர்ந்தெடுத்தனர்.
1989–ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992–ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .புஷ்பகிரி பீடம் ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி சுவாமிகள் முன்னிலையில் இது நடந்தது. கோவிலைத் துவக்கியவரே இதைக் காஞ்சி காமகோடி சங்கராச்சார்யார் மடத்தின் பராமரிப்பில் விடவேண்டும் என்று 1999–ம் ஆண்டில் கேட்டுக் கொண்டதைக் கோவில் நிர்வாகக் கமிட்டியும் ஏற்றது. மடத்தின் வழிகாட்டுதலின் பேரில் பூஜைகள் நடக்கின்றன.
தெலுங்கானாவில் பாசர் என்னுமிடத்தில் உள்ள புகழ்பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம் பற்றி முன்னரே கட்டுரை வெளியிட்டோம். அதற்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்று விளங்கும் சரஸ்வதி கோவில் இது.
சரஸ்வதி கோவில், சனீஸ்வரன் கோவில், வர்கல், தெலுங்கானா
கோவிலின் வெப் சைட்டில் முழுவிவரங்களும் உள்ளன
https://sriwargalvidyasaraswathi.org
xxxx
எப்படிப் போவது?
ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீ ட்டர் , வாரங்கல்லிலிருந்து 92 100 கிலோமீட்டர் தொலைவில் மாவட்டத் தலை நகர் சித்திப்பேட்டை உள்ளது . சித்திப்பேட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் வார்கல் கோவில் இருக்கிறது
xxx
கோவில் திறக்கும் நேரம்
Temple Timings
Monday to Thusday
Morning Session காலையில்
06.00 am to 01.00 pm
Friday to Sunday
Morning Session
06.00 am to 02.00 pm
All days எல்லா நாட்களிலும் மாலையில்
Evening Session
04.00pm to 08.00pm
xxxx
தொடர்பு முகவரி
Sri Vidya Saraswathi Sri Shaneshchara Temples,
(Under Kanchi KamaKoti Peetham) Vill & Mandal: Wargal – 502279, District: Siddipet, Telangana
Mobile: 9247851122, 9291277118, 9248151122
–subham-
Tags- வர்கல் ,சரஸ்வதி கோவில், ஆந்திர மாநிலத்தின் , 108 கோவில்கள், PART- 9