திருமூலரும் ஆதிசங்கரரும்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 36 (Post No.13,449)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,449

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 36

திருமூலர் பசுபதி,பாசம் எனும் சைவ சித்தாந்த கருத்துக்களை முன்வைத்தவர். ஆதிசங்கரரோ  அஹம்  பிரம்மாஸ்மி , தத்வ மசி  என்ற அத்வைத கருத்துக்களை முன் வைத்தவர். ஆயினும் திரு மூலர் ஏனைய 17 சித்தர்களிலிருந்து வேறுபட்ட ஒரு சித்தர் என்பதால் சங்கரருக்கும் மூலருக்கும் இடையே சில ஒற்றுமைகளைக் காணமுடிகிறது’.

கீழ்கண்ட பாடல்கள் அவர் சங்கரர்  சொல்லும் அத்வைதத்துக்கு நெருங்கியவர் என்பதைக் காட்டுகின்றன

ஆதி சங்கரர் சொன்ன எல்லாவற்றையும் அறிந்தவர்,   தான் என்பதைக் காட்டுவதற்காக கடைசி பாடலை நெருங்கும் பொழுது ஆதிசங்கரர்  பெயரையே பகிரங்கமாக அறிவித்து விடுகிறார் திருமூலர், 

புஸ்தகம் எழுதுவோர் முன்னுரையில் இன்னார் இன்னாருக்கு தான் நன்றிக் கடன்பட்டவர் என்று பெயர்களை எல்லாம் எழுதுவார்கள். கம்பன் கடைசியில் முக்கியமான ராமன் மகுடாபிஷேகப் பாடலில் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி சொல்லுவார். அது போல ஆதி சங்கரர்  பெயரை  திருமந்திரத்தின் இறுதிப்   பாடலுக்கு சற்று முன்னர் காண்கிறோம்.

எல்லாப்  பாடல்களையும் கொடுக்காமல் எடுத்துக் காட்டாக சில பாடல்களைத் தருகிறேன்

ஆதி சங்கரன்

2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்

செலவறி வாரில்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

3043: He is One and Many

The Lord is with creation all

None know His coming and going,

He is distant, He is near;

He is constant, He is Sankara,

He is the Primal Being;

Multiple He is, One He is,

He Our Primal Lord.

இறைவன் சர்வ வியாபி என்ற தலைப்பில் அவர் இதைச் சொல்கிறார் . இறைவனை நம்பும் அடியார்க்கு அவர் நெருக்கமானவர். அல்லாதோருக்கு தொலைவில் நிற்பவர்.இதுவும் உபநிஷத் வாக்கியம் ஆகும்.

xxxx

தேவதத்தன்

தேவதத்தன் என்பவனை உதாரணமாகக் காட்டுவதை சங்கரர் துதிகளிலும் புத்தர் உரைகளிலும் காணலாம்.

ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத்

தாகிய விட்டு விடாத விலக்கணைத்

தாகுப சாந்தமே தொந்தத் தசியென்ப

ஆகிய சீவன் பரன்சிவன் ஆமே.

2493 Jiva in Different Places and Times

Deva Datta is one and same person;

But through time and place he different appears;

Unto it,

If Jiva transcends time and place,

He and Siva one becomes (So-ham)

In Thom-Tat-Asi,

Jiva in body one with Primal Cause is;

Attaining True Jnana

Jiva becomes Para Siva.

சோயம்‌ தேவதத்தன்‌ = அவனே தேவதத்தன்‌ .

தேவதத்தன்‌ என்பவன்‌ ஓரிடத்தில்‌ இல்லறத்தானாக

இருந்தபோதும்‌, பிறிதோரிடத்தில்‌ அரசனாயிருந்தபோதும்‌,

மற்றோரிடத்தில்‌ துறவியாயிருந்தபோதும்‌, இவையனைத்தும்‌

ஒழிந்து நின்றபோதும்‌, தேவதத்தனே ஆவான்‌. அதுபோல

விட்டும்‌ விடாத இலக்கண வாய்பாட்டால்‌ சீவன்‌ சிவன்‌

இணைந்த நிலை (ஜீவப்பிரஉற்ம ஐக்கியம்‌ ) சுபாவ சித்தமாக

இருக்கின்றது என்று அறிவது.

தேவ தத்தன் என்ற பெயரை பரிகாசப் பெயராகப் பயன்படுத்துவர்; புத்தரின் வம்சத்தில் தோன்றிய இளவரசன் தேவ தத்ததன் ; ஒரு முறை  புத்தரை அணுகி தன்னை வாரிசாக நியமிக்கக் கோரினான் . புத்தர் மறுக்கவே போட்டி சங்கத்தை ஆரம்பித்தான். புத்தரைக் கொல்ல  முயற்சி செய்தான் . பின்னர்  கடும் நோய்வாய்ப் பட்டபோது புத்தரைக் காண எண்ணி புறப்பட்டான். அப்போது  பள்ளத்தில் விழுந்து புதையுண்டு இறந்த பின்னர்  நரகத்துக்குச் சென்றான் என்று பெளத்த நூல்கள் செப்புகின்றன ; ஆகையால் இது கிண்டல் , கேலி செய்ய உதவும் பெயர்

Xxxxxx

தத்வமஸி- நீயே அதுவாக இருக்கிறாய் = தத்+ த்வம் + அசி = நீயே  கடவுள் = நான்கு மகா வாக்கியங்களில் ஒன்று

ஆறா றகன்ற வணுத்தொம் பதஞ்சுத்தம்

ஈறான தற்பர மெய்துப சாந்தத்துப்

பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து

வீறான தொந்தத் தசி தத்வ மசியே.

தத்வமஸி- 2526- 27,28, 33

xxx

2490. தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே

அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு

அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து

உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3

2490 Tvam-Tat-Asi Becomes Tat-Tvam-Asi

Attain the State of Tvam-Tat-Asi

Through coursing breath (in Yogic Way)

Consider it as the Tenth State of (Turiya) experience;

Endless is that Experience;

Alter that expression so

That Siva (Tat) stands first

(That is Tat-Tvam-Asi, or Tatvamasi)

Thus meditate on it and ascend.

xxxx

 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

2491 As Tatvamasi, Practise Yoga

Thus altering the expression

Into Tatvamasi with Siva (Tat) first

Fix your thought on bliss of Svarupa;

And gently hold to your heart

The Pranava mantra (that is “Aum”);

When Jiva thus practises Yoga

He realizes Truth

And stands, in Grace accepted.

xxxxx

பாரதி அறுபத்தாறு கவிதையில் பாரதியும் அதையே சொல்லுவார்

பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:

சாமி நீ;   சாமி நீ;   கடவுள் நீயே;

தத்வமஸி;  தத்வமஸி;   நீயே அஃதாம்;

பூமியிலே நீ கடவு ளில்லை யென்று

புகல்வது  நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமிநீ   அம் மாயை தன்னை நீக்கிச்

சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!— பாரதி

Xxxx

வேதாந்தம்

வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதி பொருளைக் காண்பதாகும். உலகம் முழுதும் இந்தச் சொல்லை அத்வைத தத்துவத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். திருமூலரும் இதைச் சொல்கிறார்.

துவந்தத் தசியே தொந்தத் தசியும்

அவைமன்னு மந்நுவயத் தேக மான

தவமன்னு தத்துவ மசிவே தாந்த

சிவமாகும் அதுஞ்சித் தாந்த வேதமே.

xxxx

இரண்டு பறவைகள் – உபநிஷத் கதை 2894, 1969

அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்

துன்னி யிரண்டுந் துனே ப் பிரியாதன

தன்னிலே யன்னம் தனியொன்ற தென்றக்கால்

பின்ன மடவன்னம் பேறனுகாதே. (2006)  1969

சிவனும் சீவனும் பிரியாது உடனுமாறு கூறுகின்றது..

2006 Cosmic Bindu and Micro-Cosmic Bindu Are Inseparate

Two the swans on the river bank (of life)

The two swans separation know not,

If one Jiva says he is by himself,

Then that foolish swan, Grace receives not.

இரண்டு பறவைகள் கதையை காஞ்சிப் பெரியவர் (1894-1994) நீண்ட காலத்துக்கு முன்னரே சொற்பொழிவில் விளக்கியுள்ளார் அவை ஜீவாத்மா, பரமாத்மா. அந்தக் கதையை பைபிள் எடுத்துக்கொண்டு ஆத்மா என்பதை ஆதாம் என்றும் ஜீவ என்பதை ஈவ்= ஏவாள் என்றும் மாற்றிவிட்டார்கள். காஞ்சி மஹா சுவாமிகள் சொன்ன இந்த விஷயத்தை நான் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பைபிளில் சம்ஸ்க்ருதம் என்ற கட்டுரையிலும் உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள் என்ற கட்டுரையிலும் எழுதியுள்ளேன்.

xxxx

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு

மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்

தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்

வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொழிப்புரை : இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

xxxx

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரையிலிருந்து

ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — இரண்டு இருக்குபோதுதான் பயம் இருக்கும் என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1

கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று. மனைவியை கணவனின் மற்றொரு பாதி (தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம். இதையே பைபிள் ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கியதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை. இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் த ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

xxxx

மஹாவாக்கியம்-2287

தத்துவ ஞானம் – 2291

xxxx

உபநிஷத் எதிரொலி

அப்பு/ உப்பு-2905

சேயன், அணியன் –2296/ பகவத் கீதை 1515

உன்னை நீ அறிவாய் எனும் கருத்து  -2315, 2290/ உபநிஷத், சாக்ரடீஸ் எதிரொலி

மறை ஈறு= உபநிஷத் = வேத அந்தம்- 2318,2329, 2343-2348, 2353-56, 2746

ஓம்- 410, 560, 839, 864, 897, 902, 923, 924, 031-934, 936, 941, 949, 988, 1049, 1182, 1188, 1198, 1217, 1257, 1380, 1381, 1516, 1531, 1585, 1680, 1721/22,  2119, 2194, 2435, 2447, 2452, 2455, 2530, 2626-31, 2781

–SUBHAM–

TAGS–திருமூலர், ஆதிசங்கரர்,- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 36, அத்வைதம், சைவ சித்தாந்தம், இரண்டு பறவைகள் , உபநிஷத் கதை

Leave a comment

Leave a comment