ராமாயணத்தில் சாபங்கள் (44) அனரண்யன் ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post.13,448)

Ravana lifting Kailsh

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.448

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (44) 

ராமாயணத்தில் சாபங்கள் (44) அனரண்யன் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “அனரண்யன் சபித்தல்’ என்ற ஸர்க்கம்.

ராவணன் தனது பலத்தில் செருக்கு கொண்டு மருத்தரை அடக்கி விட்டு ஒவ்வொரு நகரமாகச் சுற்றலானான். எல்லா மன்னர்களிடமும் சென்று, “ஒன்று என்னுடன் போர் புரி அல்லது தோற்றதாக ஒப்புக் கொள்” என்றான். அனைவரும் தோற்றதாகவே ஒப்புக் கொண்டனர்.

அயோத்தி நகரை ஆண்டு வந்த அனரண்யன் என்ற அரசர் மட்டும் ராவணனைத் தன்னுடன் போரிட அழைத்தார். உக்கிரமான போர் நடைபெற்றது. ராவணன் அவரது தலையில் அடிக்க அவர் தேரிலிருந்து கீழே விழுந்தார்.

ராவணன் அவரை பரிகசித்தான். அனரண்யன் ராவணனை நோக்கி, “உன்னால் நான் ஜெயிக்கப்படவில்லை. விதி வசத்தால் நான் மரணமடைகிறேன். நீ ஒரு காரண கருவி தான். இக்ஷ்வாகு வம்சத்தை அவமானம் செய்து விட்டாய்” என்று கூறிவிட்டு, ராவணன் மீது சாபத்தை விடுத்தார்.

யதி தத்தம் யதி ஹுதம் யதி மே சுக்ருதம் தப: |

யதி குப்தா: ப்ரஜா: சம்யத் ததா சத்யம் வசோஸ்து மே ||

மே – எனது

ப்ரஜா: – பிரஜைகள்

சம்யக் – தருமத்திற்கு குறைவின்றி

குப்தா: – பரிபாலிக்கப்பட்டார்கள்

யதி -என்னும் பட்சத்தில்

தப: – தவ பாக்கியமும்

சுக்ருதம் – புண்ணியங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

துத்தம் – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

தத்தம் – கொடுக்கப்பட்ட தானங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

ததா – அப்போது

மே வச: – எனது வாக்கு

சத்யம் – அப்படியே நடைபெற்றதாக

அஸ்து – விளங்கட்டும்.

உத்பத்ஸ்யதே குலே ஹ்ராஸ்மின்னிக்ஷ்வாகூணாம் மஹாத்மனாம் |

ராமோ தாசரதிர்நாம யஸ்தே ப்ராணான்ஹரின்யதி ||

மஹாத்மனாம் – மிக்க மேன்மை பெற்றவர்களாகிய

இக்ஷ்வாகூணாம் – இக்ஷ்வாகுக்களின்

அஸ்மி – இந்த

குலே ஹி – குலத்திலேயே

தாசரதி: – தசரதன் என்பவனுக்குப் புதல்வனாய்

ராம: – ராமன்

நாம – எனப் பெயருள்ளவன்

உத்பத்ஸ்யதே – அவதரிக்கப் போகிறான்

ய: – அவன்

தே – உனது

ப்ராணான் – உயிரை

ஹரின்யதி – ஒழிப்பான்

உத்தரகாண்டம் 19-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 29 & 30

இப்படி அனரண்யன் சாபம் இடவே வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது. தேவ துந்துபி மேக முழக்கத்திற்கு ஈடாக அடிக்கப்பட்டது.

இவ்வாறாக அகத்திய முனிவர் அனரண்யன் வரலாறை ஶ்ரீ ராமருக்கு உரைத்தார்.

**

Leave a comment

Leave a comment