
Date uploaded in London – 18 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 10
ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் உருகொண்டா Urukunda is a small village in Andhra Pradesh ஆகும். புகழ்பெற்ற மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி சமாதி அருகில் இருக்கிறது. மந்திராலயத்திலிருந்து 44 கிலோமீட்டர் தூரம்தான் .

இந்தக்கோவிலை ஈரண்ண அல்லது வீரண்ணா சுவாமி கோவில் என்றும் அழைப்பார்கள்.அங்கு வீரண்ணா என்ற முனிவர் தவம் செய்ததால் இந்தப் பெயர். கோவிலின் சிறப்பு என்ன வென்றால் நரசிம்ம சுவாமி சந்நிதிக்குப் பின்னால் வளரும் அரச மரம் ஆகும். இதனால் கோவிலுக்கு கூரை கிடையாது. மரத்தினையும் அஸ்வத்த நாராயணன் என்ற பெயரில் கிராம மக்கள் வலம் வருகிறார்கள்.
நரசிம்மர் சிலை அருகில் வெள்ளியிலான வீரண்ணா சுவாமியின் விக்கிரகமும் உளது . மஹாசிவராத்ரியின் போதும் ஆவணி மாத மூன்றாவது திங்கள்கிழமையிலும் சிறப்பு ஆராதனைகளை நடக்கும். அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ராகவேந்திர சுவாமிகளும் இங்கு வந்து தர்சித்ததாக கர்ண பரம்பரைக் கதைகள் இருப்பதால் கோவிலின் மகத்துவம் அதிகரிக்கிறது . சந்நிதிக்கு முன்னர் பெரிய மண்டபம் உளது கோவில் பூட்டப்பட்டபோதும் கோவிலுக்கு கூரை இல்லாததால் மக்கள் கோவிலைச் சுற்றி வரமுடியும்..கோவிலுக்குள் கணபதி சிலையும் இருக்கிறது. வேறு ஒரு மரத்தின் கீழ் நாகர் சிலைகளும் இருக்கின்றன.
அருகிலேயே துங்கபத்ரா நதியிலிருந்து வரும் பெரிய கால்வாய் ஓடுவதால் பக்தர்கள் அதில் குளித்துவிட்டு தாங்களாகவே சமைத்தும் சாப்பிடுகின்றனர் . கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ் தயிர்சாதமும், புளியஞ்சாதமும் வழங்கப்படுகிறது . கோவில் தரிசனத்துக்கு கட்டணம் உண்டு.
கார்கள் முதலிய வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து உருகொண்ட செல்ல 576 கி.மீ. அங்கிருந்து 44 கி.மீ.யில் மந்த்ராலயம்..

Contact Number: 094910 00738 and 99663 90671
Temple Timing: 6 AM to 10 PM
Distance Between Chennai to Urukunda is 576 Kms
Distance between Mantralayam to Urukunda is 44 Kms
நரசிம்ம சுவாமி கோவில் பற்றி கோவில் வெப்சைட்டில் வீடியோ காட்சியும் உளது. நேரில் செல்ல முடியாதோர் வீடியோவில் தரிசிக்கலாம்.
xxxxx
யாகந்தி உமா மகேஸ்ஸ்வரர் கோவில்
மந்திராலயம் அல்லது கர்நாடகத்திலுள்ள ஹம்பி செல்லுவோர் சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள யாகந்தி சிவன் கோவிலுக்கும் செல்லலாம். இது இருப்பது ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டம் ஆகும்.
சங்கம வம்ச மன்னர் ஹரிஹரபுக்க ராயர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார்


கோவிலைப் பற்றி சில கதைகள் இருக்கின்றன. அகத்திய முனிவர் விஷ்ணு சிலையை நிறுவ முயற்சி எடுத்துக் கொண்டார். ஆனால் விக்கிரகம் கொஞ்சம் சிதிலம் அடைந்ததால் மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது சிவபிரான் தோன்றி இந்த இடம் கயிலாயம் போல இருப்பதால் சிவன் சிலையை நிறுவும்படி கூறினாராம். அகத்தியரும் உமையுடன் இருக்கும் சிவனை வேண்ட, அவரும் அப்படியே அருளினாராம்.
இன்னொரு கதை சிட்டப்பா என்ற பக்தர் கதை. சிவ பக்தரான அவருடைய முன்னே, ஒரு புலி தோன்றவே அவர் சிவனைக் கண்டுவிட்டேன் என்று மீண்டும், மீண்டும் சொல்லி ஆனந்தக் கூத்தாடினாராம். பின்னர் அங்கே சிவன் கோவில் உருவானது.
புஷ்கரிணி

இந்தக் கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. மலை அடிவாரக் கோவில் இது. மலையிலிருந்து ஓடிவரும் தண்ணீர் ஒரு நந்தியின் வாய் வழியாக வரும்படி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் குளித்து சுவாமியை வழிபடுகின்றனர். அந்த நீர் ஒரு புஷ்கரிணியாக தேங்கி நிற்கிறது.
மூன்று குகைகள்
அடுத்த சிறப்புகள் மூன்று குகைகளாகும் . வீர பிரம்மேந்திர சுவாமி குகை, வெங்கடேஸ்வரா குகை, அகஸ்தியர் குகை குறிப்பிடத்தக்கவை.
வீர பிரம்மேந்திர சுவாமி ஆந்திரத்தில் புகழ்பெற்றவர். அவர் எழுதிய கலா ஞானம் என்ற நூலில் இங்குள்ள வெங்கடேஸ்வரா குகையை திருப்பதி போன்றது என்று புகழ்ந்துள்ளார். அந்தக் குகையில் சேதமடைந்த பெருமாள் உருவமும், அகஸ்தியர் குகையில் தேவி உருவமும் உள்ளன. வீர பிரம்மேந்திர குகையில் அமர்ந்துதான் அவர் கலா ஞானம் நூலை எழுதினார்.

வளரும் நந்தி
இங்குள்ள நந்தி சிலை பெரிதாகிக்கொண்டே வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர் . சிலவகைப் பாறைகள் நாளடைவில் பெரிதாகும் என்றும் சொல்லப்படுகிறது .
அகத்திய முனிவரை காகங்கள் தொந்தரவு செய்ததால் அவை குகைக்குள் வரக்கூடாது என்று அகஸ்தியர் சபித்ததால் குகையில் காகங்கள் இல்லை என்றும் சொல்லுவார்கள் .

கோவில் இருப்பிடம்
இது நந்தியால் மாவட்டத்தில் உள்ளது
கர்னூல் நகரத்திலிருந்து யாகாந்தி 100 கி.மீ.
பங்கனப்பள்ளியிலிருந்து 14 கி.மீ.
கட்டுரையிலுள்ள படங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன. நன்றி.
—Subham—
Tags –யாகந்தி , உருகொண்ட , உமா மகேஸ்வர, கோவில், நரசிம்ம, வீரண்ண , குகைகள், , வீரபிரம்மேந்திர