WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.451
Date uploaded in London – —18 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (45)
ராமாயணத்தில் சாபங்கள் (45) பதிவிரதைகள் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் இருபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது, “தண்டகாவனத்தில் கரன் முதலியவர்களை வசிக்கச் செய்வது’ என்ற ஸர்க்கம்.
வருணாலயத்திலிருந்து கிளம்பிய ராவணன் ராஜ, ரிஷி, தேவ, கந்தர்வ கன்னிகளை துஷ்ட புத்தியுடன் அபஹரித்தான்.
கல்யாணமானவள், கல்யாணமாகாதவள் ஆகிய பெண்களில் அழகியாக யார் இருந்தாலும் சரி அவர்களை ராவணன் அபஹரித்து புஷ்பகவிமானத்தில் தூக்கி வைத்தான்.
அவர்களின் துக்கப் பெருமூச்சால் விமானமே உஷ்ணமானது.
அவர்கள் பலவிதமாகப் புலம்பிக் கொண்டே வந்தனர்.
யஸ்மாதேஷ பரக்யாஸு ரமதே ராக்ஷஸாதம: |
தஸ்மாத்தை ஸ்த்ரீக்ருதேன ப்ராப்ஸ்யதே துர்மதிர்வதம் |\
– உத்தரகாண்டம், 24-ம் ஸர்க்கம், 18-ம் ஸ்லோகம்
ஏஷ: – இந்த
துர்மதிஹ்: – துஷ்ட
ராக்ஷசாதம: – அரக்கப்பதர்
பரக்யாஸு – அயலார் மனைவிகளிடத்தில்
ரமதே – காம விகாரம் கொள்கிறான்
யஸ்மாத் தஸ்மாத் – ஆதலால்
ஸ்த்ரீக்ருதேன ஏவ – ஒரு பெண் மூலமாகவே
வதம் வை – மரணத்தையும்
ப்ராப்ஸ்யதே – அடையப் போகிறான்
பதிவிரதைகளால் ஒரே காலத்தில் பயனுள்ள பலிக்கத்தகும்படி இப்படி ராவணன் சபிக்கப்படுகிறான். இந்தப் புலம்பலைக் கேட்டுக் கொண்டே ராவணன் இலங்கைக்குத் திரும்பினான்.
யுத்த காண்டத்தில் 114-வது ஸர்க்கத்தில் ராவணன் வதமான பின்னர் இந்த சாபத்தை மண்டோதரி குறிப்பிட்டு இறந்து கிடக்கும் ராவணனை நோக்கிப் புலம்புகிறாள் இப்படி:
யாஸ்த்வயா விதவா ராஜன்க்ருதா நைகா: குலஸ்த்ரிய: |
பதிவ்ரதா தர்மபரா குருசுஷ்ரூஷணே ரதா: ||
தாபி” ஷோகாபிதப்தாபி: சபத: பரவஷம் கத |\
– யுத்த காண்டம், 114வது ஸர்க்கம், (மண்டோதரி விலாபமும், ராவணனது சரமக்ரியையும்) – ஸ்லோகங்கள் 64 & 65
ராஜன் – அரசரே!
பதிவ்ரதா: – பதிவிரதைகளும்
தர்மபரா: – தரமத்தையே சர்வமுமாகக் கொண்டவர்களும்
குருசுஸ்ரூஷணே – பெரியோர்களை உபசரிப்பதில்
ரதா: – அசஞ்சலப் பற்று உடையவர்களுமான
யா: = எந்த
நைகா: – அநேக
குலஸ்த்ரீய: – குல ஸ்த்ரீகள்
த்வயா – உம்மால்
விதவா: – பதியை இழந்தவர்களாய்
க்ருதா: – ஆக்கப்பட்டார்களோ
ஷோகாபிதப்தாபி: – சோகத்தால் பரிதவிக்கும்
தாபி: – அவர்களால்
சபத: – சபிக்கப்பட்டு
பரவஷம் கத: – பகைவருக்கு ஆட்பட்டு விட்டீர்
த்வயா விப்ரக்ருதாபிர்யத்ததா சபதம் ததாகதம் |
த்வயா – தேவரீரால்
விப்ரக்ருதாபி: – தீங்கிழைக்கப்பெற்றவர்களால்
யத் – எது
ததா – அப்பொழுது
சப்தம் – சபிக்கப்பட்டதோ
தது – அது
ஆகதம் – ;பலித்து விட்டது.
இந்தப் பதிவிரதைகளின் கண்ணீர் நிஷ்காரணமாய் இந்தப் பூமியில் விழுவதில்லை என்பது முற்றிலும் உண்மையே
இவ்வாறு ராவணனின் உடலை நோக்கிப் புலம்புகிறாள் மண்டோதரி.
இவ்வளவு பேருடைய சாபத்தை வாங்கி இருக்கிறான் ராவணன் என்பது தெளிவாகிறது!
**