விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-21 (Post No.13,453)

Indra 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,453

Date uploaded in London – 18 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வரலாறு தொடர்ச்சி

உபேந்திரா, மஹேந்திர – நாம எண்கள் 151, 268–

இந்திரனுக்குத் தம்பியாகியவர்  அல்லது இந்திரனுக்கும் மேலாகிய இந்திரன் ஆனவர் .

ஹரிவம்சம் சொல்கிறது-

மமோபரி  யதே ந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபி ரீஸ்வரஹ

உபேந்த்ர இதி க்ருஷ்ணத்வாம்  காஸ்யந்தி புவி தேவதாஹா

பசுக்கள் உன்னை, எனக்கும் மேலான எஜமானனாக நியமித்துவிட்டன. ஆகையால் ஆகையால் உன்னை தேவர்கள் உபேந்த்ரன் என்று துதி பாடுவார்கள்.

தென் கிழக்கு ஆசியா முழுதும் இந்துக்கள் இருப்பதால் இந்திரன் பெயர்கள் அங்கும் உள்ளன.

xxxx

தனஞ்ஜயஹ– நாம எண் 660–

அர்ஜுனனாக இருப்பவர்.

கீதையில் பகவானே நான்  பாண்டவர்களில் தனஞ்ஜயன் என்கிறார் 10-37

அர்ஜுனன் நான்கு திசைகளுக்கும் சென்று பல இடங்களை வென்றதால் நிறைய செல்வம் கிடைத்தது இதனால் அவன் பெயர் தனம் = செல்வம் , ஜயன் =வென்றோன்.

பாண்டவானாம் தனஞ் ஜயஹ – என்பது கண்ணன் வாக்கு.

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जय: |
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ||10- 37||

என் கருத்து

மதுரையை உண்டாக்கிய செட்டியார் பெயரும் தனஞ்ஜயன் ; இது செட்டியார்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் பெயர்.. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் பொற்றாமரைக் குள தூண்களில் ஒன்றில் தனஞ்ஜயன் சிலை உள்ளது.அதை பாண்டவர் சிலை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் திருவிளையாடல் புராணத்தைப் படிப்போருக்கு அது செட்டியார் சிலை என்பது புரியும்.

முன்காலத்தில் மதுரைக்குப் பக்கத்தில் பாண்டியர் தலைநகர் இருந் தது ; இப்போதைய மதுரை கடம்பவனக்காடாக இருந்தது . தனஞ்ஜயன்  என்ற வணிகர் பக்கத்து ஊர்களில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்புகையில் கடம்ப வனம் வழியாக வந்தார். அதற்குள் இருட்டிவிட்டது . பயந்துகொண்டே வந்த அவர் காட்டில் ஒரு அரிய காட்சியைக் கொண்டார். ஒளிமயமான ஓரிடத்தை நாடிச் சென்று மறைந்திருந்து பார்த்தபோது தேவர்கள் வந்து ஒரு லிங்கத்துக்கு பூஜைசெய்வதை பார்த்தார். மறு  நாள் பாண்டிய மன்னனைச் சந்தித்து தான் கண்ட அரிய காட்சியைச் சொன்னவுடன் , மன்னனும் பரிவாரம் சூழ காட்டிற்குள் சென்று சிவ லிங்கம் இருப்பதைக் கண்டான்; அதன் மீது கோவிலை எழுப்பி நாற்புறமும் வீதிகளை உருவாக்கி புதிய மதுரையை எழுப்பி, அதைத் தலை நகரமாக்கினான் ; இப்போதும் மீனாட்சி கோவிலுக்குள் ஒரு கடம்ப மரத்தைச் சுற்றி மேடை அமைத்து மரத்திற்கு வெள்ளிக்கு கவசம் பூட்டிருப்பதைக் காணலாம்.அதுதான் மதுரையின் தல விருட்சம். உள்ளூர் பக்தர்கள் மரத்தை வலம் வந்து அடுத்த சந்நிதிகளுக்குப் போவார்கள் .

xxxx

குப்தஹ – நாம எண் 545-

வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாது மறைந்திருப்பவர்.;

ஏஷ  ஸர்வேஷு  பூதேஷு கூடோத்மா  ந ப்ரகாஸதே – கடோபநிஷத் 3-12;

பகவானை அறிந்த பூர்வாச்சார்யார்களால் ரக்ஷிக்கப்பட்டவர். அவர்களின் ஸம்பிரதாயமின்றி  மற்ற எவ்வகையிலும் அறியக் கூடாதவர் .

என் கருத்து

இதே குப்த என்ற பெயருடன்  400 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆண்ட வம்சம்தான் எல்லோரின் பாராட்டையும் பெற்றது. இந்தியாவின் பொற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது; அவர்கள் அடித்த தங்கக் காசுகளை பிரிட்டிஷ் மியூஸியம்  முதல் எல்லா காட்சியகங்களிலும் காணலாம். பாஹியான் போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்கள் வீட்டுக்குப் பூட்டுப் போடாமல் நல்லாட்சி நடந்ததாக புகழ் கின்றனர்.

இன்னும் ஒரு அர்த்தம் சித்ர குப்தன் போன்றது ஒருவர் இறந்துவிட்டால் எம தர்ம ராஜன் தன்னுடைய தூதர்களை அனுப்பி உயிரைப் பறிப்பான்  என்றும் யமனின் அக்கவுண்டண்ட் / கணக்குப்பிள்ளை அந்த உயிரின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்புவார் என்றும் சொல்லுவார்கள். இதில் பெரிய ரகசியம் உள்ளது.

சித்ர என்றால் ஓவியம்/ வரைபடம் ;குப்த  என்றால் ரகசிய அல்லது மறைவான ;

நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் நினைக்கும், செய்யும், எல்லா பாவ புண்ணியச் செயல்களும் ரிக்கார்ட்/ பதிவு ஆகிறது இதுதான் குப்த சித்திரம். இது சூப்பர் பாஸ்ட் கம்பியூட்டர் போல கணக்கிட்டு  யமன் முன்னால் காட்டும். அதற்கேற்ப நமக்குப் பலன் கிட்டும். சித்ர குப்தன் என்பது ஆள் அல்ல. நம் பாவ புண்ணியக் கணக்கு.

சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதற்கும் அதை இயக்கி மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவும் பல கோடி கணக்குகள் செய்யவேண்டும். இப்போது அதை எல்லாம் கம்யூட்டரே செய்துவிடுகிறது . அது போல நம்முடைய  சொல், செயல், சிந்தனை மூன்றையும் மறைவாக- அதாவது நாம் அறியாமல்– கணக்கிடுவதே சித்ர குப்த .

இதையெல்லாம் அறிந்துதான் சந்திர குப்தனும் , சமுத்திர குப்தனும் பெயர் வைத்துக் கொண்டார்கள் போலும் !

xxxx

தாமோதரஹ , தாமன் — நாம  எண்கள் – 367

தாம -நாம  எண் 211

தாம-211

ஒளியாயிருப்பவர் ;  அல்லது விரும்பினவற்றிற்கு எல்லாம் இருப்பிடமாகியவர்..

பரப்ரஹ்ம பரந்தாம   பவித்ரம் பரம் பவான் என்று கீதையில் வருகிறது 10-12

अर्जुन उवाच

परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।

पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥१०- १२॥

அர்ஜுந உவாச

பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |

புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்

ப⁴வாந் = நீங்கள்

பரம் ப்³ரஹ்ம பரம்தா⁴ம = பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு)

பரமம் பவித்ரம் = தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை

ஸா²ஸ்²வதம் தி³வ்யம் புருஷம் = என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும்

ஆதி³தே³வம் அஜம் விபு⁴ம் = ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும்

அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை; உன்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், கடவுளென்றும்,முனிவரெல்லாரும் மொழிகிறார்கள்

xxxxx

தாமோதர – 367

தமம் என்னும் தன்னடக்கம் முதலிய குணங்களால் அறியப்படுபவர்.

தமாதி  ஸாதனேன உதரஹ  உத்க்ருஷ்டஞ் மாதிரியா தயா கம்யதே  இதி  தாமோதரஹ

மஹாபாரத உத்யோக பர்வம் சொல்கிறது ,

தமாத்  தாமோதரம்  விதுஹு – கயிற்றால் யசோதையால் கட்டப்பட்டவர் .

மற்றும் ஒரு பொருள் – உதார குணம் உடையவர்..

தாமம் என்னும் உலகங்களை தன் வயிற்றில் வைத்திருப்பதால் தாமோதரன் – தாமானி லோக நாமானி  ஹ்யுதரே யஸ்ய சந்தி ஸஹ

தாமோதர இதி க்யாதோ யசோதா தாம பந்தனாத்.

தாமம் = கயிறு

என் கருத்து

2000 ஆண்டு தமிழ்ச் சங்க பாடல்களை இயற்றியவர்களில் தாமோதரன், கேசவன் பெயர்கள் உள்ளன.

ருத்ர தாமன் என்ற மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்து புகழ்பெற்ற கல்வெட்டை செதுக்கியுள்ளான். அவன் ஆப்கானிஸ்தான் முதல் குஜராத் வரை ஆட்சி செய்தான்.

தாமம் என்பதற்கு கயிறு என்ற பொருளும் உள்ளதால் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் என்ற பொருளும் உண்டு.. இப்படியாக 2000 ஆண்டாக புழங்கும் சொல் இது. இன்றும் தாமோதரன் என்ற பெயரை இந்தியா முழுதும் காண்கிறோம்

—சுபம்—

tags–விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் 21 

Leave a comment

Leave a comment