ராமாயணத்தில் சாபங்கள் (46)  நளகூபரர் ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,455)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.455

Date uploaded in London – 19 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (46) 

ராமாயணத்தில் சாபங்கள் (46) நளகூபரர் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில்  இருபத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது, “நளகூபரன் சபித்தல்’ என்ற ஸர்க்கம்.

ஒரு சமயம் ராவணன் தனது பயணத்தின் போது கைலாய மலையில் இரவு நேரத்தைக் கழிக்க நிச்சயித்தான் சந்திரன் கூடிய இரவு நேரத்தில் அவன் காம வசப்பட்டான்.

அப்போது அப்ஸரஸ் ஸ்த்ரீகளில் ரம்பை அங்கு வந்தாள். அவளது அழகிய மேனியைக் கண்ட ராவணன் அவளைச் சட்டெனப் பற்றி இழுத்து, “மூவுலகத்திந்ன் எஜமானனான இந்த தசக்ரீவன் அதிக ஆசை கொண்டவனாய் கை கூப்பி உன்னை வேண்டுகின்றான். என்னை அங்கீகரி” என்றான்.

நடுநடுங்கிய ரம்பை,” நான் சாஸ்திர நியமப் படி தேவரீரது மருமகளாய் ஆகி விட்டேன். இப்போது நான் தங்கள் மகள்” என்றாள்.

ராவணனது தமையனாகிய குபேரனது புதல்வரான நளகூபரருக்குத் தான் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தை அவள் பணிவோடு சொன்னாள்.

“ஆனால் அப்ஸரஸ் ஸ்த்ரீகளுக்கு கணவன் என்பவன் ஒருவன் இல்லை” என்று கூறிய ராவணன் அவளைக் கற்பழித்து விட்டான்.

நடுக்கமுற்ற ரம்பை நளகூபரரிடம் வந்து நடந்ததை விவரித்தாள்.

இதைக் கேட்ட நளகூபரர் மிகுந்த கோபம் கொண்டு யோகதிருஷ்டியில் முற்றிலும் முனைந்தார்.

கையிலே ஜலத்தை எடுத்துக் கொண்டார். ஒரு சாபத்தைத் தந்தார் இப்படி:

க்ருஹித்வா சலிலம் சர்வமுபஸ்ப்ருஷ்ய யதாவிதி |

உத்ஸசர்ஜ ததா சாபம் ராக்ஷஸேந்த்ராய தாருணம் ||

ததா – அப்போது

சர்வ – எல்லாவற்றையும்

க்ருஹித்வா – மனதினுள் கவனித்துத் தீர்மானித்து

ராக்ஷஸேந்த்ராய – இராக்ஷஸ மன்னனுக்கு

யதாவிதி – சாஸ்திரோக்தமாய்

சலிலம் – ஜலத்தை

உபஸ்ப்ருஷ்ய – தெளித்து

தாருணம் – பயங்கரமான

சாபம் – ஒரு சாபத்தை

உத்ஸசர்ஜ – இட்டார்

அகாமா தேன யஸ்மாத்த்வம் பலாத்பத்ரே ப்ரதர்ஷிதா |

தஸ்மாத்ஸ யுவதீமன்யாம் நாகாமாமுபயாஸ்யதி |\

பத்ரே – எனது அன்புக்குரிய நல்லாய்

அகாமா – காதல் கொள்ளாத

த்வம் – நீ

தேன – அவனால்

பலாத் – பலாத்காரமாய்

ப்ரதர்ஷிதா – கற்பழிக்கப்பட்டு விட்டாய்

யஸ்மாத் தஸ்மாத் – இது காரணமாய்

ஸ: – அவன்

அகாமாம் – ஆசை கொள்ளாத

யுவதிம் – சிறுமி

அன்யாம் – எவள் ஒருவனையும்

ந உபயாஸ்யதி – அவன் கை தீண்டக் கூடாது

யதா ஹ்ரகாமாம் காமார்தோ தர்ஷயிஷ்யதி யோஷிதம் |

மூர்தா து சப்ததா தஸ்ய ஷகலீபவிதா ததா ||

காமார்த: – காமாதுரனாய்

அகாமாம் – காதல் கொள்ளாத

யோஷிதம் – ஒரு பெண்ணை

யதா – எப்போதாவது

தர்ஷயிஷ்யதி – உல்லங்கனம் செய்கின்றான்

து – என்னும் பட்சத்தில்

ததா ஹி – அந்தக் கணமே

தஸ்ய – அவனது

மூர்தா – சிரம்

சப்ததா – ஏழு பாகமாய்

ஷகலீபவிதா – துண்டம் துண்டமாய் வெடிக்கக் கடவது.

உத்தரகாண்டம், 26-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 43,44,45

இப்படி சாபத்தை நளகூபரர் ராவணனுக்குத் தர, அப்போதே  தேவர்கள் அனைவரும் பேரானந்தம் அடைந்தார்கள். வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது.

மயிர்க்கூச்செறியும்படியான இந்த சாபத்தைக் கேட்ட தசக்ரீவன் மனம் கொள்ளாத ஒரு பெண்ணிடம் சம்போகம் கொள்வது என்ற எண்ணத்தையே அப்போதிலிருந்து விட்டொழித்தான். 

**

Leave a comment

Leave a comment