
Date uploaded in London – 20 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமந்திரத்தில் 18 பாஷை மர்மம்; திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-38
சென்ற கட்டுரையில் 51 எழுத்து மர்மத்தைக் கண்டோம்.. மேலும் சில பாடல்களைப் பார்த்துவிட்டு திருமூலர் 18 பாஷை பற்றிப் பாடியதையும் காண்போம். பாரதி வரை இந்த 18 மொழிகளைக் பாடுவதால் திருமூலரின் காலத்தையும் நாம் அறியமுடிகிறது. அவர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்திருக்கவேண்டும். நிறைய அசட்டுப்பிசட்டுகள் , அரை வேக்காடுகள் அவர் 3000 ஆண்டு வாழ்ந்தார், அவர் கி.மு.வில் வாழ்ந்தார் என்று சொல்வதெல்லாம் பொருளற்றது என்பது விளங்கும்..
வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று சொல்லுவோருக்கும் இந்தப் பாடல் செமை அடி , மிதியடி கொடுக்கும். இமயம் முதல் குமரி வரை என்பது புற நானூற்றிலேயே உள்ளது. அந்த நிலப்பகுதியில் காஷ்மீர் வரை 18 பாஷைகளை பேசியதும் திருமூலருக்கு முன்னமே.யே பாடல்களில் உள்ளது. அந்தச் செய்திகளை அவர்கள் போகிற போக்கில் சமய நூல்களில் செப்பிவிட்டது இன்னும் அதிசயமே. அவர்கள் பூகோளம் அல்லது வரலாற்றுச் செய்திகளை எல்லோரும் அறிந்திருப்பதால் போகிற போக்கில் பாடல்களில் பகர்ந்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள் இதே போல போகிறபோக்கில் 56 தேச ராஜாக்களும் சிவன்- உமை கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள் என்று பாட்டிமார்கள் பேரக்குழந்தைகளுக்கு வாய் மொழியாக கதை சொல்லும்போதே அந்தக்காலத்தில் இந்தியா 56 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதையும் குழந்தைகள் அறிந்து கொள்ளுவார்கள். அந்தக் கால இந்தியா வில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பர்மா, நேபாளம் பூடான் வங்கதேசம் முதலிய நாடுகளும் இருந்தன. நிற்க.
xxxx
இதோ மேலும் சில 51 அக்ஷரப் பாடல்கள்:-
898. இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே. 15
898: Letters A and U are Feet of Lord
The peerless Feet of Lord are Letters A and U;
The peerless Feet of Lord are Letters Two and Five;
The peerless Feet of Lord are Letters Fifty and One
The peerless Feet are mantras seven times thousand.
தமிழில் 8 என்பதை அ என்றும் இரண்டு என்பதை உ என்றும் எழுதுவார்கள் . 100 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் புஸ்தகங்களில் பக்க எண்களை இப்படி வெளியிட்டிருப்பதைக் காணலாம்.
xxxxxx
அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. 11
924: How the 51-Letter Chakra is Formed
In Chambers five and twenty
Enclose letters fifty, two in each;
With letter “A” to begin
And final letter “Ksh” to end;
These with the one letter Om;
Fifty and one in all, the letters fill,
In Chakra’s chambers five and twenty.
இந்தப்பாட்டில் சம்ஸ்க்ருத மொழியின் முதல் எழுத்து அ என்பதையும் கடைசி எழுத்து க்ஷ என்பதையும் தெளிவாகவே சொல்லிவிடுகிறார். அ +க்ஷ= அக்ஷர /எழுத்து ; அக்ஷராப்பியாசம் = முதல் முதலில் குழந்தைகள் எழுத்துப் பயிற்சி பெறும் சடங்கு )
xxxx

தேவியின் உடலில் 51 எழுத்துக்கள்
இறைவியின் உடலில் 51 எழுத்துக்கள் உள்ளன. இதை லலிதா சஹஸ்ர நாம உரைகளிலிருந்து அறியலாம். இதோ அந்த உரைகளின் சுருக்கம்
963. ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே. 50
963: Garland of Fifty-One Letters
With Letter “Aum” are vowels fifteen formed;
To Bindu’s luminous letter “A”
Add Nada letter “U”
With rest of letters thirteen,
They fifteen vowels are;
Together with consonants,
The Primal letters are
As Fifty and one reckoned.
xxxx
964. விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே. 51
964: Sakti Expands as Fifty-One Letters
With Letter “A” that is Bindu,
And curled Letter “U” that is Nada,
When together they upward ascend,
Sakti within beams
With kalas six and ten,
And endless expands,
As neck, hands, legs and body entire;
As Letters One and Fifty , too,
Her Form expands.
xxxxx

லலிதா சஹஸ்ரநாமத்தில் மாத்ருகா வர்ண ரூபிணி என்று அம்பாளை வருணிக்கும் நாமம் 577 ஆவது நாமமாக வருகிறது .பாஷா ரூபா என்ற நாமம் 678 ஆவது நாமமாக வருகிறது
மாத்ருகா என்றால் 51 எழுத்துக்கள்; அதாவது அரிச்சுவடி
ஸ்வரங்கள் – 16/ உயிர் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள் – 25/ உயிர்மெய்
ய முதல் க்ஷ வரை – 10
மொத்தம் 51
இவைகளுக்கு கலர் அதாவது வர்ணம் உண்டு
அகராதி எழுத்துக்கள்– புகை வர்ணம்;
க- முதல் 12 ம் –சிந்தூர வர்ணம்
ட – முதல் 10 எழுத்துக்கள்– வெள்ளை நிறம்
ப- முதல் ஐந்து — அருண நிறம்
ல – முதல் ஸ முடிய – தங்க வர்ணம்
ஹ , க்ஷ இரண்டும் – வெள்ளி/ மின்னல் வர்ணம்
என்று சனத் குமார சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது என்று ஸ்ரீ கணேச ஐயர் எழுதியுள்ளார் .
இந்த 51 எழுத்துக்களே ஸ்ரீ சக்கரத்திலும் உள்ளது. அதையும் திரு மூலர் பாடியள்ளார் . லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் மனோன்மனி என்ற நாமத்தையும் திருமூலர் அப்படியே பாடலில் பயன்படுத்துகிறார் .
இதன் மூலம் சஹஸ்ர நாமத்தின் பழமையும் திருமூலருக்கு அதிலுள்ள புலமையும் தெளிவாகத் தெரிகிறது
இன்னொரு முக்கிய விஷயத்தையும் உரைகாரர்கள் குறிப்பிடுகிறார்கள் . அம்பாளின் கையிலுள்ள அக்ஷ மாலை அ முதல் க்ஷ வரையான 51 எழுத்துக்களைக் குறிக்க 51 ரத்ன மணிகளைக் கொண்டதால் அதற்கு அக்ஷ மாலை என்று பெயர்.
இதனால்தான் மகா கவி பாரதி
எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்று பாடலில் செப்பியிருக்கிறான். மகா கவி பாரதி , லலிதா சஹஸ்ரநாமத்தை நன்கு அறிந்தவர் என்பதை அவருடைய சக்திதேவி பாடல்கள் காட்டுகின்றன.
xxxxx
திருமூலரின் திருமந்திரம்
1219. ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே. 65
1219: She Created Kala Beings
In the Beginning
Fifty-one the Kala Beings created
She stood as their life and soul;
She stood in the Chakra
Of fifty-one letters inscribed;
And He the Lord stood there
By the Jewelled One’s side.
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. 70
1224: She is Paraparai
She that stands in Eye-brow center is Manonmani,
She one with Fifty Letters becomes;
She is Para Parai and Parai too;
She is of the Acts Five–
Creation, Preservation, Dissolution, Obfuscation and Redemption.
சக்கரத்தில் 51 எழுத்துக்கள், மனோன்மணீ என்ற பதங்கள் திருமூலர் தினமும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்ததையும் காட்டுகிறது ஆனால் இன்னொரு பாட்டில் இவை அனைத்தும் ஐந்தெ ழுத்தில் அடங்கிவிடும் என்று சொல்லி சிவனும் சக்தியும் ஒன்றே என்றும் சொல்லிவிடுகிறார்.
2698. ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1
2698: Fifty Letters Become Five
The letters Fifty are Vedas all;
The letters Fifty are Agamas all;
When the secret of letters Fifty is known,
The Fifty letters, Five Letters Became.
2699. அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2
2699: Fifty Letters Became Fifty-One
With the letter “A” intoned in commencement,
The letters Fifty, Fifty-One became;
With letter “U” intoned high with letter “A”,
And with letter “M”, it (A&U&M as AUM) ended;
And again with letter “N” rising,
It became Nandi’s name “Aum Nama Sivaya.”
xxxxx
திரு மந்திரத்தில் இன்னும் நிறைய 51-எழுத்துப் பாடல்கள் உள ; இடம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
பதினெட்டு பாஷை!
அடுத்ததாக கட்டுரையின் முகப்பில் குறிப்பிட்ட 18 பாஷைகளை எடுத்துக்கொள்ளுவோம் .
பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத் தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறம்சொன்ன வாறே.
என்பர் திருமூலர்.
Agamic Truths In 18 Languages
In eighteen various tongues they speak
The thoughts which Pandits alone know;
The Pandits’ tongues numbering ten and eight
Are but what the Primal Lord declared.
மணிமேகலை, கம்ப ராமாயணம் ஆகியவற்றிலும் 18 பாஷைகளைக் காண்கிறோம்.
பாரதியும் அழகாகப் பாடினான்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும்
சிந்தனை ஒன்றுடையாள்
முதலில் சுவையான மொழியியல் விஷயத்தை/ விடயத்தைக் காண்போம்
ஏன் பாஷை – பாடை ஆகியது?
ஏன் விஷயம் – விடயம் ஆகியது ?
எங்கெங்கெல்லாம் ஷ வந்ததோ அங்கெங்கெல்லாம் ட வரும். இதை ஆங்கிலத்திலும் காண்கிறோம்
TION என்ற ஸ்பெல்லிங் உள்ள சொற்களை எல்லாம் நாம் SION ஷன் என்றே உச்சரிக்கிறோம். ஆங்கிலேயர் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? உலகம் முழுதும் சம்ஸ்க்ருத மொழியும் தமிழ் மொழியும்தான் இருந்தன. அதிலிருந்து பிரிந்த மொழிகளே இன்று உலகெங்கும் உள்ளன என்பதை ஏராளமான கட்டுரைகளில் நான் ஆதாரத்துடன் காட்டியுள்ளேன்; இந்த விதி திருமூலர் காலத்திலும், கம்பன் காலத்திலும் பின்பற்றப்பட்டது . இதே போல உலகில் ஜ- என்ற ஒலி சம்ஸ்க்ருதத்தில் மட்டுமே இருந்தது. அது உலகம் முழுதும் பரவும்போது ய- ஆக மாறியது.
ஜாமம் என்றால் யாமம் என்பார்கள்; ஜாவா என்றால் யவ என்பார்கள் ; யாழ்ப்பாணம் என்றால் ஜாப்னா JAFFNA என்பார்கள் . ஏன் ? அது சம்ஸ்க்ருத மொழி விதி
இனி பாடைக்கு = பாஷை-க்கு வருவோம்
பாஷா ரூபா என்று ஒரு நாமத்தில் தேவியைப் போற்றுகின்றனர். இறைவி மொழி வடிவானவள், அதற்கு அப்பாற்பட்டவளும் ஆவாள் . சிவ சக்தி ஐக்கியத்தைக் காட்டுவதற்காக ரகு வம்சம் என்ற மஹா காவியத்தின் முதல் பாட்டிலேயே பார்வதி பரமேஸ்வரனை சொல்லும் பொருளும் ம் போல என்று காளிதாசன் துதிக்கிறான் . இதை அபிராமி பட்டர் உள்பட ஏராளமானோர் பிற்காலத்தில் பயன்படுத்தினர்
வாகர்த்தாவிவ சம்ப்ருக்தௌவாகர்த்த பிரதிபத்தயே
ஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ.
இதன் பொருள் பின்வருமாறு :—
” சொல்லையும் , அதன் பொருளையும் எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படி இணைந் திருக்கும் , உலகத்திற்கு தாய்,தந்தையாக விளங்கும் பார்வதியையும், பரமசிவனையும் (சொல், பொருள் இவற்றை அறியும் பொருட்டு) வணங்குகின்றேன் “.
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।
जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥ १-१
vāgarthāviva saṁpṛktau vāgarthapratipattaye |
jagataḥ pitarau vande pārvatīparameśvarau || 1-1
Raghuvamsha 1.1
I pray to parents of the world, Lord Shiva and Mother Parvathi, who are inseparable as speech and its meaning (to gain knowledge of speech and its meaning).
ஆக இந்த பாஷை விஷயமும் சஹஸ்ரநாமத்திலிருந்து வந்ததே.
ஒருபுறம் சிவன் உடுக்கையிலிருந்து எழுந்த 14 மஹேச்வர சூத்ரங்களைக் காண்கிறோம்; மறுபுறம் அம்பாளிடமிருந்து எழுந்த 51 ஒலிகளைக் காண்கிறோம். இந்துக்களுக்கு எழுத்தும் எழுதுகோலும் தெய்வம் என்பதில் ஐயமில்லை.
To be continued…………………………….
Tags- மாத்ருகா வர்ண ரூபிணி, செப்பு மொழி 18, பண்டிதராவார் பதினெட்டுப் பாடை, ஐம்பத்தொரு அக்ஷரம்