ராமாயணத்தில் சாபங்கள் (47)  ஹனுமானுக்கு ரிஷிகள் கொடுத்த சாபம்! (Post.13,458)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.458

Date uploaded in London – 20 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (47) 

ராமாயணத்தில் சாபங்கள் (47) ஹனுமானுக்கு ரிஷிகள் கொடுத்த சாபம்! 

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில்  முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது, “ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்ற ஸர்க்கம்.

ராகுவின் விண்ணப்பத்தைக் கேட்டு இந்திரன் ஹனுமான் குழந்தையாக இருக்கும் சமயத்தில் தனது வஜ்ராயுதத்தால் குழந்தையின் கன்னத்தில் அடித்து விட்டான். வாயு பகவான் குழந்தையை  மடிமேல் வைத்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்தார்.

அப்போது பிரம்மா,  தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரிடம் வந்து சேர்ந்தனர்.

பிரம்மா அந்தக் குழந்தையைக் கையால் தடவிக் கொடுத்தார். உடனே குழந்தை ஜீவித்திருப்பதைப் பெற்று விளங்கிற்று.

இதனால் வாயு தேவன் திருப்தி அடைந்தார்.

குழந்தைக்கு பிரம்மா, சூரியன், வருணன், குபேரன், பரமசிவன், விசுவகர்மா உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கு ஒரு வரத்தைக் கொடுத்து அருளினர். குழந்தைக்கு திவ்யமான சஸ்திரங்களும் அளிக்கப்பட்டன.

தான் பெற்ற பலத்தினால் சந்தோஷமடைந்த வாயு குமாரனான ஹனுமான் மஹரிஷிகளின் ஆசிரமத்தில் புகுந்து உபத்திரவம் செய்தான். மரவுரிகள், மான் தோல்கள் ஆகியவற்றை அங்கும் இங்கும் வாரி எறிந்தான்.

ஞானவான்களாகிய ரிஷிகள் அவனை மன்னித்து வந்தார்கள்.

பலர் தடுத்தாலும் அவன் இந்த வழியில் நியாயத்தை மீறி நடந்து வந்தான்.

இதைக் கண்ட பிருகு, அங்கிரஸ் ஆகிய முனிவர்களின் வமிசங்களில் பிறந்த ரிஷிகள் அவனை இப்படிச் சபித்தார்கள் :

பாதஸே யஸ்மாத்ஸ்ரியத்ய பலமஸ்மான்ப்லவங்கம |

ததீர்க்ககாலம் வேத்த்தாஸி நாஸ்மாகம் சாபமோஹித: ||

யதா தே ஸ்மார்யதே கீர்திஸ்ததா தே வர்ததே பலம் |\

ப்லவங்கம – ஹே வானர

யத் – எந்த

பலம் – பலத்தை

சமாஸ்ரியத்ய – ஆஸ்ரயித்து

அஸ்மான் – எங்களை

பாதஸே – உபத்திரவிக்கிறாயோ

தத் – அதை

தீர்ககாலம் – நீண்ட காலம் வரையில்

அஸ்மாகம் – எங்களது

சாபமோஹித: – சாபத்தால் மோஹித்தவனாகி

ந வேத்தாஸி – நீ அறியாதிருக்கக் கடவாய்

யதா – எப்போது

தே – உனது

கீர்தி: – தேஜஸ்

ஸ்மார்யதே – நினைப்பு மூட்டப்படுகிறதோ

ததா – அப்போது

தே – உனது

பலம் – பலம்

வர்ததே – விளங்கும்

இப்படியாக ஹனுமான் ரிஷிகளிடமிருந்து இந்த சாபத்தைப் பெற்றார். அதிலிருந்து தன் வலிமை பற்றிய நினைவை இழந்தார். ஆனால் வலிமை அப்படியே இருந்தது. உரிய காலத்தில் சாபம் நீங்கப்பட்டு ராம காரியத்தில் அது விளங்கியது.

இதைப் பற்றி அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் கூறுவது உத்தர காண்டம் 35 வது ஸர்க்கத்தில் (ஹனுமான் உற்பத்தி முதலியது என்ற ஸர்க்கம்) 16வது ஸ்லோகத்தில் இடம் பெறுகிறது:

அமோதசாபை: சாபஸ்து தத்தோஸ்ய க்ருஷிபி: புரா |

ந வேத்தா ஹி பலம் யேன பலீ சன்னரிமர்தன: |\

அஸ்ய – இவனுக்கு

புரா – முன் காலத்தில்

அமோதசாபை: – இட்ட சாபங்களிட்டபடியே பலிக்கும் ப்ரபாவசாலிகளாகிய

க்ருஷிபி: – முனிவர்களால்

சாப: – ஒரு சாபம்

தத்த: – இடப்பட்டது.

யேன – இந்தக் காரணத்தால்

அரிமர்தன: – சத்ருக்களை சம்ஹரிக்கத்தக்க

பலீ சன் – பலிஷ்டனாக இருந்தும் கூட

து – அவன் மட்டில்

பலம் ந வேத்தா ஹி – (தனது) பலத்தை உணர முடியாமல் இருக்கிறான்

அடுத்த ஸர்க்கத்தில் சாபம் இன்னதென்று கூறப்படுவதை முன்னால் பார்த்தோம்.

இதையெல்லாம் அகத்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு உரைக்கிறார்.

**

Leave a comment

Leave a comment