Post No. 13,463
Date uploaded in London – 21 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மேலும் பல வரலாற்று அதிசயங்கள்
பிரதர்தன – நாம எண் – 59
துருக்கியிலுள்ள பொகாஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடித்த க்யூனிபார்ம் லிபி கல்வெட்டு மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் திராவிட கும்பலுக்கும் பேரிடியாக வந்தது. ஆனால் மாக்ஸ்முல்லர் (1823-1900) கல்வெட்டு கண்டுபிடிப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார். அந்தக் களிமண் கல்வெட்டில் வேத கால தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி ஒரு கல்வெட்டு கிடைத்தது.
இந்தக் கல்வெட்டு கிடைப்பதற்கு முன்னால் கால்டு வெல்லும் மாக்ஸ்முல்லரும் செத்து ஒழிந்தார்கள் . அவர்கள் செத்துப் போனது போகட்டும். இதை வெள்ளைத் தோல் அறிஞர்கள் குழிதோன்டிப் புதைத்துவிட்டார்கள் அந்தக் கல்வெட்டு குறிப்பிடும் பல மன்னர்களில் ஒருவர் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் பிரதர்தன ஆகும். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இதை 1950-ம் ஆண்டு சொற்பொழிவுகளிலேயே குறிப்பிட்டு அப்போதே புஸ்தகமாகவும் வந்தது. இப்போதைய தெய்வத்தின் குரலுக்கு முன்னால் ,காஞ்சி மடமே எல்லா சொற்பொழிவுகளையும் கி.வா.ஜ போன்ற பேரறிஞர்களால் அப்போது வெளியிட்டது.
க்யூனிபார்ம் லிபி கல்வெட்டு விவரம் இப்போது விக்கிப்பீடியாவில் உள்ளது . இதில் என்ன விந்தை என்றால் அவை எல்லாம் கி.மு 1400- 1600க்கும் இடைப்பட்ட மன்னர்கள் . இதை எல்லாம் எவரும் மறுக்க முடியாது. ஏனெனில் கியூனிபார்ம் லிபியில் கல்வெட்டில் உள்ளது. ஒரு மன்னரின் பெயர் தசரதன். அவர் எழுதிய கடிதங்கள் எகிப்தில் AMARNA LETTERS அமர்நா லெட்டர்ஸ் என்ற பெயரில் உள்ளன. அனால் இதை மறைப்பதற்காக தசரதன் பிரதர்தனன் போன்ற பெயர்களில் ஸ்பெல்லிங்கைப் பாருங்கள். இது தூய சம்ஸ்க்ருதம் அல்ல. அதற்கு முந்திய மொழி ; ஒருவேளை பாரசீகத்திலிருந்து ஒரு கிளை ஆரியர்கள் துருக்கி ஈராக்கை ஆண்டிருப்பார்கள் என்று சொல்லி மூடிவிட்டனர்; உண்மையில் ஒரு மொழி பேசும் மக்கள் தாயகத்திலிருந்து விலகிச் செல்ல செல்ல அந்த மொழி கொச்சையாகி வரும்.. இப்போது இலங்கைத் தமிழர்களும், மலேசியத் தமிழர்களும். மொரீஷியஸ் தமிழர்களும், புதுச்சேரி பிரெஞ்சுத் தமிழர்களும் எழுதும் இந்தக் கடவுளரின் பெயர்களை பாருங்கள் ; உடனேயே கியூனிபார்ம் கல்வெட்டுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடும். இதில் குறிப்பிடும் தசரதன் ராமாயணத்துக்குப் பிந்திய தசரதன் ஆவார் . இப்போதும் விருது நகரில் தசரத நாடார் என்ற பெயரைக் காணலாம் அவர் எனக்குத் தெரிந்த நாலாவது தசரதன் . அசோக மாமன்னனின் பேரன் பெயரும் தசரதன்.
துருக்கி- சிரியா- ஈரான் ஆகிய மூன்று நாடுகளிடையே பரவிய இந்த நாகரீகத்துக்கு மிட்டன்னி நாகரீகம் என்று பெயர்; இதுவரை எவராலும் விளக்கம் சொல்ல முடியாத பெயர். ஒருவேளை மித்ர என்ற வேத கால தெய்வத்தின் பெயராகவோ அல்லது நட்பு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவோ இருக்கலாம். மித்ர என்றால் நண்பன். விச்வா மித்ர ரிஷி= உலக நண்பன்.
சிந்து-சரஸ்வதி நாகரீகம் பற்றி பற்றி மிகச் சிறந்த புஸ்தகம் எழுதியவர் அஸ்கோ பர்போலா. அவர் எழுதிய புஸ்தகத்தில், மிட்டன்னி நாகரிக அரசர்கள் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பொழுது குறிப்பிடும் நான்கு வேத கால தெய்வங்களும் ரிக் வேத மந்திரத்தில் குறிப்பிட்ட அதே வரிசையில் இருப்பத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் . இதன் பொருள் என்னவென்றால், அப்போதே ரிக்வேதம் துருக்கியில்– அதாவது இற் றைக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்னரே துருக்கி– சிரியாவில் மன்னர்கள் சபையில் ரிக்வேதம் முழங்கி இருக்கிறது.
காஞ்சி பரமாசார்யார் பேச்சுக்குப் பின்னர் இப்போதுதான் விக்கிப்பீடியாவில் காண முடிகிறது. இதன் விவரத்தை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கிறேன். அப்போதுதான் நீங்களும் உலக என்சைக்ளோபீடியாக்களில் மேல் விவரத்தைப் பெற முடியும்.
Mitannian (Turkey-Syria) civilization,
1.Bogazkoy inscription in Turkey
2.Kikkuli’s horse manual in Turkey
3.Tushrata Letters ( Amarna Letters) in Egypt
Vedic Gods are mentioned in the inscription in the same order as we see it in Rig Veda. Asko Parpola, top most Indus Valley researcher, has pointed it out. His book Deciphering the Indus Script is the best book on the subject ( I have almost memorised the book by reading it many times).
The reason for mentioning it here is the following word in Vishnu Sahasranama (VS)xxxx
Pratardanah- Word No.59 in VS பிரதர்தன – நாம எண் – 59
Shankara says, destroyer of all at the time of cosmic dissolution.
My comments
This is one of the names in Mitannian civilization along with Dasaratha.
| Maitta | Eponymous founder, maybe mythical | |
| Kirta | c. 1540 BC | First known king, may be also legendary |
| Shuttarna I | Son of Kirta based on Alalakh seal[89] | |
| Parattarna I | c. 1500 BC | Son of Kirta, contemporary of Idrimi of Alalakh, Pilliya of Kizzuwatna, Zidanta II of Hatti |
| Parshatatar | c. 1485 BC | Son of Parattarna I |
| Shaushtatar | c. 1465 BC | Contemporary of Sinia and Qis-Addu in Terqa; Tudhaliya I of Hatti; Niqmepa of Alalakh, sacks Ashur |
| Parattarna II | c. 1435 BC | Contemporary of Qis-Addu in Terqa |
| Shaitarna | c. 1425 BC | Contemporay of Qis-Addu in Terqa |
| Artatama I | c. 1400 BC | Treaty with pharaoh Thutmose IV, contemporary of pharaoh Amenhotep II |
| Shuttarna II | c. 1380 BC | Daughter marries pharaoh Amenhotep III in his year 10 |
| Artashumara | c. 1360 BC | Son of Shutarna II, brief reign |
| Tushratta | c. 1358 BC | Contemporary of Suppiluliuma I of the Hittites, and pharaohs Amenhotep III and Amenhotep IV, Amarna letters |
| Artatama II | c. 1335 BC | Treaty with Suppiluliuma I of the Hittites, contemporary of Ashur-uballit I in Assyria |
| Shuttarna III | c. 1330 BC | Contemporary of Suppiluliuma I of the Hittites |
| Shattiwaza | c. 1330 BC | Vassal of the Hittite Empire, also known as Kurtiwaza or Mattiwaza |
| Shattuara | c. 1305 BC | Vassal of Assyria under Adad-nirari I |
| Wasashatta | c. 1285 BC | Son of Shattuara |
| Shattuara II | c. 1265 BC | Last king of Mitanni before Assyrian conquest |
xxxx
வர்த்தமானஹ — நாம எண் –262
பிரபஞ்ச ரூபமாகத்தாமே வளர்பவர் — நிற்பதெல்லாம் நெடுமால் .
என் கருத்து
சமண மதத்தில் கடைசி தீர்த்தங்கரரின் பெயர்- வர்த்தமான மஹாவீரர் . அவர் வாழ்ந்தது 2600 ஆண்டுகளுக்கு முன்னர். அப்போதே விஷ்ணு சஹஸ்ர நாமம் பிரபலம் அடைந்ததை , அதிலுள்ள தீர்த்தங்கர , வர்த்தமான , சித்தார்த்த முதலிய நாமங்களிலிருந்து அறிய முடிகிறது .
மஹாவீரர் சிலையைப் பார்த்தாலே நமக்கும் புலனடக்கம் வந்து நாம் யோகியாகிவிடுவோம் . புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்ற அவ்வைப்பாட்டியின் பொன்மொழிக்கு ஏற்ப இந்தியாவில் இரண்டே பெயரைத்தான் மஹாவீரர் என்று போற்றுகிறோம் – அனுமன் மற்றும் வர்த்தமான மஹாவீரர் !
xxx
வீரஹ — நாம எண் 643–
பகைவரை வென்று பராக்ரமத்துடன் இருப்பவர்.
என் கருத்து
தமிழர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவர்.
வீர பாண்டியன், வீர பாண்டிய கட்டபொம்மன் , மதுரை வீரன், வீர வல்லாளன் என்ற பெயர்கள் எடுத்துக்காட்டுகள்.
xxxx
ஆதித்யஹ– நாம எண் 563–
அதிதி தேவியிடம் வாமனனாக அவதரித்தவர்.
அகாரத்தால் அடையக் கூடியவர் .
அல்லது முன்பிறவியில் , அதிதியாகவிருந்த தேவகியின் புத்திரர் .
என் கருத்து
ஆதித்தன் என்றால் சூரியன்; சூரிய வம்சத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் இந்தச் சொல்லை பயன்படுத்தினர்.
எ .கா. ஆதித்த கரிகாலன்
xxxx
சுமுகஹ – நாம எண் 456–
அழகிய முக முள்ளவர், ப்ரசன்னவதனம் சாரு பத்மபதராயதேக்ஷணம்– மலர்ந்த முகமும் தாமரை மலர் இதழ் போல நீண்ட கண்களும் உடையவர்- விஷ்ணு புராணம் 6-7-80
ராமாவதாரத்தில் பட்டாபிஷேகத்தை நிறுத்தி, கைகேயி காட்டுக்கு அனுப்பியபோதும் முக மலர்ச்சி மாறாதவர் – கம்பன் பாடலில் சித்திரத்தினலர்ந்த செந்தாமரைஓத்திருக்கும் முகத்தினை உன்னுவான் .
வால்மீகியின் வாக்கில்
ந வனம் கந்து-காமஸ்ய த்யஜதஸ்ச வசுந்தராம்
ஸர்வ லோகாதி கஸ்யைவ மனோ ராமஸ்ய விவ்யதே 2-19-33
அல்லது வித்தைகளையெல்லாம் உபதேசித்ததால் ஸுமுகர்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம் ஸ் ச ப்ரஹி நோணோதி தஸ்மை — ச்வே . உபநிஷத் 6-18
என் கருத்து
விநாயகரின் 16 நாமாக்களைச் சொல்லித்தான் எல்லா பூஜைகளையும் தொடங்குவது சம்பிரதாயம்; அதி ல் பிள்ளையாருக்கு வரும் முதல் பெயர் சுமுகன்; ஏனெனில் அவருக்குப் பிரசன்ன வதனம்; ஆனால் மனு ஸ்ம்ருதி ஒரு புதிர் போடுகிறது; கேட்ட மன்னர்களின் பட்டியலில் சுமுகன் என்ற பெயரையும் சேர்க்கிறது . இந்திய வரலாற்றிலோ, புராணம் சொல்லும் 140+++ மன்னர்களின் பெயரிலோ சுமுக இல்லை! யார் இந்த சுமுக ராஜா ?
ஆராய்ச்சிக்குரிய விஷயம்
Manu says ,
“Vena was destroyed through lack of humility, and so was Nahusha , Sudas , the son of Pijavana , Sumukha , and Nimi “– 7-41
மனு ஸ்ம்ருதி 7-41
பணிவு இல்லாததால் வேனன் அழிந்தான்; அதே போலத்தான் நஹுஷன், பிஜாவனன் மகன் சுதாஸ், சுமுகன், நிமி .
சுமுகன் என்ற பெயர் மஹாபாரதத்தில் வந்தாலும் அது ஒரு நாகன் பெயராகவே வருகிறது.; உமேரிய நாகரீகத்தில் வருகிறது. அங்கும் கூட கேட்ட மன்னன் என்ற பொருள் இல்லை?
वेनो विनष्टोऽविनयात्नहुषश्चैव पार्थिवः ।
सुदाः पैजवनश्चैव सुमुखो निमिरेव च ॥ ४१ ॥
veno vinaṣṭo’vinayātnahuṣaścaiva pārthivaḥ |
sudāḥ paijavanaścaiva sumukho nimireva ca || 7-41 || Manu
It was through want of discipline that Vena perished, as also King Nahuṣa, Sudās, Paijavana, Sumukha and Nimi.—(7-41) Manu Smriti
—subham—
TAGS- மேலும் வரலாற்று அதிசயங்கள், பிரதர்தன, தசரத, மிட்டன்னி நாகரீகம், அமர்நா லெட்டர்ஸ், MITANNI