Date uploaded in London – 22 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் கால சக்கரம் என்ற தலைப்பில் அபூர்வ ஜோதிட ரகசியங்கள் உள்ளன . சில பாடல்களுக்கு அர்த்தம் தெரியவி ல்லை (726, 727) என்று உரைகாரர்களே சொல்லிவிட்டார்கள்.
தமிழர்களின் ஜோதிட நம்பிக்கை அபாரமானது. ரோகிணி நட்சத்திர நாளில் தமிழர்கள் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இரண்டு அகநாநூற்றுப் பாடல்கள் விவரிக்கின்றன; 2500 சங்கப் பாடல்களில் அவை இரண்டுதான் முழுக்க முழுக்க கல்யாணப்பாடல்கள் .; காண்க அகம்.86, 136
தமிழர்கள் வேதத்தில் உள்ளது போலவே ஒரு ஆண்டினை ஆறு பருவங்களாக 12 மாதங்களாகப் பிரித்தனர். தமிழர்கள், சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உள்ளதை போலவே 12 ராசிகளாக, நட்சத்திர மண்டலத்தைப் பிரித்தனர். மேலும் சப்த ரிஷி மண்டலத்திலுள்ள 7 ரிஷிகளை/ ஏழு நட்சத்திரங்களை தொழுவதை நற்றிணைப் பாடல் கூறுகிறது
சந்திர பிறையை வணங்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.
12 ராசிகள் பற்றி 2000 ஆண்டுப் பழமையான புறநானூற்றுப் பாடல்களிலேயே உள்ளது 17, 229, பரிபாடல் 11
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தமிழில் உள்ள பெயர்களை பார்க்கும்போது, தமிழன்தான் ஜோதிடத்தையே கண்டுபிடித்தானோ என்றும் வியக்க வேண்டியுள்ளது.
xxxxx
திருமந்திரத்திலுள்ள சில ஜோதிடப் பாடல்களைக் காண்போம் 723, 531, 1666, 1704
சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 5
Auspicious Days for receiving Instruction
In the asterisms of Swati and Visakha
In the conjunction of Lagnas Vrischika and Kataka,
Of the Guru, the holy precepts you receive;
Except it be them who stand in the path of virtue
The Primal One knows none.
உபதேசம் பெறுவதற்கு உகந்த நட்சத்திரங்கள் சுவாதியும் விசாகமும். உபதேசம் பெற உகந்த ஓரைகள் விருச்சிகமும் , கடகமும். இதன் காரணம் யான் அறியேன். எனினும் குருமுகமாக உபதேசம் பெறுவதற்கு ஆதி முதல் இவையே உகந்தவையாக இருந்து வருகின்றன.
இந்தப் பாட்டில் நட்சத்திரங்களின் பெயர்களும், ராசிகளின் பெயர்களும் நல்ல நாட்கள் எவை என்பதும் வருகின்றன ; ஆயினும் திருமூலருக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தரும் (600 CE) கோளறு திருப்பதிகத்தில் நல்ல நாட்களை பற்றிப் பேசுகிறார்
கோளறு திருப்பதிகம் :
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்
என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்
xxxx
அர்த்தம் புரியாத பாடல்கள் 726, 727
726. ஆறும் இருபதுக் கையைந்து மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே.1
(ப. இ.) அகத்தவப்பயிற்சியுடையார்க்கு உலகியல் நாட்கள் போன்று அமையாமல் இருபதும் இருபத்தைந்தும் உறழ ஐஞ்ஞூறு ஆகும். இவற்றை ஆறால் உறழ மூவாயிரமாகும். நமக்கு மூவாயிரம் நாட்கள் சென்றால் அவர்கள் நிலைக்கு ஆறுநாட்களா யமையும் போலும். இத்தகைய நிலையினர் ஒருசாரார். வேறு ஒருசாரருக்கு நமக்கு நூற்றறுபத்தாறு நாள்கள் ஒருநாளாகும். மதிவட்டம் வரும் இருபத்தேழு நாட்களும் இவ்வாறு விதித்தனன் என்க.
746: The Days it Takes the Yogi to Traverse Adharas and Mandalas
The days that take to pierce the Centers nine are this:
Twentieth day adharas six;
Twenty-fifth day Seventh Center of Fire Mandala
Twenty-sixth day the Eighth Center of Solar Mandala
Twenty-seventh day the Ninth Center of Lunar Mandala
–These the days for yogi’s Prana to reach Centers nine.
727. விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தெறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.
(ப. இ.) இதில் குறித்து ஓதப்பட்டுள்ள எண்முறைகளும் மேலது போன்றோ வேறோ விளங்கவில்லை. இவ் விரண்டு திருப்பாட்டுக்களின் பொருள் நுட்பங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்வதே வாய்ப்பாகும்.
747: Vision of the Three Mandalas
On the twenty-eighth day
You gain the vision of Mandalas Three, each apart
On the thirty-third day
You gain their collective vision;
Do Center your thoughts further
And vision the tattvas twenty and four
That to Earth and the rest of elements in order belong.
xxxx
இந்தப் பின்னணியில் திருமூலர் பாடல்களை பார்க்கையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆயினும் பல பாடல்களுக்கு திய பொருளும் சொல்ல முடியும்.
ஒரு உதாரணத்தைக் காண்போம்
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே- திருமந்திரம் – 868
868: Beyond Nada Sphere is Lord
The Sun and Moon but measure Time;
Into him who has great become,
Rains the nectar of Grace;
When he travels beyond the spheres
And knocks,
There he meets Lord
In His very Abode.
இந்தப் பாட்டிற்கு யோக அடிப்படையில் விளக்கமும் சாதாரண அடிப்படையில் விளக்கமும் சொல்கிறார்கள். சாதாரண அடிப்படையில், சூரியன் நாளை அளப்பதை சிறுவர்களும் அறிவார்கள். முதல் நாள் சூரியோதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை ஒருநாள். (வெளி நாடுகளில் இது மாறுபடும்;
பின்லாந்து போன்ற நாடுகளில் ஆறு மாதங்களுக்கு சூரியன் எப்போதும் இருக்கும் ). இந்தியா , இலங்கை போன்ற வெப்ப நாடுகளில் இது சரிதான்; திருவள்ளுவரும் பாடுகிறார்
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.- 334
நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.
xxx
சஹஸ்ர சந்திர தரிசனம்
ஆனால் சந்திரன் காலத்தை அளப்பது எப்படி? இதை யாரும் திருமந்திரப்பாடலில் விளக்கவில்லை ; ஆனால் யோக விளக்கத்தில்- மூச்சுப் பயிற்சி விளக்கம் உள்ளது
சந்திரன் காலத்தை அளப்பதை நாம் பிறை வழிபாட்டில் காணலாம் ; ஆயிரம் பிறைகளைக் கண்டுவிட்டால் அதை ஒரு சிறப்புமிக்க சாதனையாகக் கொண்டனர். இது சஹஸ்ர சந்திர தரிசனம் . நமக்கு
29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். இதை சதாபிஷேகம் என்றும் சஹஸ்ர சந்திர தரிசனம் என்றும் கொண்டாடுவர். சத்ய சாய் பாபா இதைக் கொண்டாடி தங்க ரதத்தில் பவனி வந்ததால் இதன் பெருமை மீண்டும் உலகிற்குத் தெரிந்தது . ஆகையால் சந்திரன் காலத்தை அளக்கிறான் என்று திருமூலர் சொன்னதற்கு இதுவும் ஒரு விளக்கம் என்பது எனது துணிபு.
xxxxx
நல்ல நாட்கள்
743. திருந்து தினமத் தினத்தி நொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே
Days Appropriate for Commencing Yoga
The birth day, The first, second, third and the eight day following it
Any one of these is day appropriate for commencing yoga;
Find the day suitable most,
And easy shall be your entry
Into the Mystic House within.
xxxx
1734. சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவந் தானே.
1734 Sakti Devolutes still further
In that Truth arose the Avastas (States of Awareness) twice five;
In that Truth arose the Rasis (Zodiacal houses) twice six
In that Truth arose the Tattvas (Body Constituents) twice forty-eight;
In that Truth arose the Sadasiva Supreme.
–to be continued………………………..
Tags- திருமந்திரத்தில் ஜோதிடம், ஆராய்ச்சிக் கட்டுரை, எண் 39
கால சக்கரம், ராசி, நட்சத்திரம் , மூன்றாம் தந்திரம்