Date uploaded in London – 29 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பண்டிகை நாட்கள் – ஆகஸ்ட் 3- ஆடிப் பெருக்கு ; 4- ஆடி அமாவாசை ; 7- ஆடிப்பூரம் ; 9- கருட பஞ்சமி; ; 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்; 16- வரலெட்சுமி விரதம்; 19- ரிக், யஜுர் உபாகர்மா / ஆவணி அவிட்டம்; 20- காயத்ரீ ஜபம்; 26- ஜென்மாஷ்டமி/ கிருஷ்ண ஐயந்தி
For all poems in Tamil language go to Project Madurai website; no cookies, no cost; FREE.
அமாவாசை – ஆகஸ்ட் 4; பெளர்ணமி- 19;
ஏகாதஸி – உண்ணாவிரத நாட்கள்- 15, 29
சுப முகூர்த்த நாட்கள்- 16, 17, 30
xxxxx
ஆகஸ்ட் 1 வியாழக் கிழமை
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது
xxx
ஆகஸ்ட் 2 வெள்ளிக் கிழமை
மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
xxx
ஆகஸ்ட் 3 சனிக் கிழமை
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
xxx
ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக் கிழமை
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.
xxx
ஆகஸ்ட் 5 திங்கட் கிழமை
பேரானந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆனந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம். 2.
xxx
ஆகஸ்ட் 6 செவ்வய்க் கிழமை
சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
திவ்யதே சோமயத்தைச்
சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
தேவதையை அஞ்சலிசெய்வாம்.
xxx
ஆகஸ்ட் 7 புதன் கிழமை
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதூரமே
xxxx
ஆகஸ்ட் 8 வியாழக் கிழமை
பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்
xxxx
ஆகஸ்ட் 9 வெள்ளிக் கிழமை
பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள்
பழுத்தொழுகு தேவதருவே
பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே
xxxx
ஆகஸ்ட் 10 சனிக் கிழமை
தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன
செயற்கொண் டிருப்பனமுதல்
தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பௌதிகஞ்
சென்மித்த ஆங்கிறக்கும்
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்
மேற்கொண்ட சேடம் அதுவே
xxx
ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக் கிழமை
பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து
பேசாமை யாகுமெனவே
பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே
xxxx
ஆகஸ்ட் 12 திங்கட் கிழமை
சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
சிரத்தைஎனும் வாளும்உதவிப்
பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப்
பாதுகாத் தருள்செய்குவாய்
xxxx
ஆகஸ்ட் 13 செவ்வய்க் கிழமை
பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்
பரமசுக நிட்டை பெறுமோ
பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.
xxxx
ஆகஸ்ட் 14 புதன் கிழமை
சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு
தூங்கவைத் தவரார்கொலொ
xxxx
ஆகஸ்ட் 15 வியாழக் கிழமை
தன்னையே நோவனொ பிறரையே நோவனோ
தற்கால மதைநோவனோ
பந்தமா னதுதந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
xxxx
ஆகஸ்ட் 16 வெள்ளிக் கிழமை
நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு
நினைவுசற் றுண்டாகிலோ
பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
பற்றாக நிற்கஅருள்வாய்
xxxx
ஆகஸ்ட் 17 சனிக் கிழமை
ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
xxxx
ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக் கிழமை
சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
றியக்கஞ் செய்யும்
xxxx
ஆகஸ்ட் 19 திங்கட் கிழமை
அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய்
அமர்ந்தென அகிலாண்டம் அனைத்துமாகிப்
பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்
xxxx
ஆகஸ்ட் 20 செவ்வய்க் கிழமை
சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந்
தண்ணருள் கொடுத்தாள்வையோ
xxxx
ஆகஸ்ட் 21 புதன் கிழமை
ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
அத்துவித வாஞ்சையாதல்
அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி
ஆகும்அறி வலிழஇன்பந்
xxx
ஆகஸ்ட் 22 வியாழக் கிழமை
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 4 .
xxxx
ஆகஸ்ட் 23 வெள்ளிக் கிழமை
கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின்
கண்காண மதயானைநீ
கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய
கட்டைமிக ஏந்திவருமே
xxxx
ஆகஸ்ட் 24 சனிக் கிழமை
புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப்
போற்றிசய போற்றிஎன்பார்
ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
நவநாத சித்தர்களும்உன்
நட்பினை விரும்புவார்
xxxx
ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக் கிழமை
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
நிர்விடய கைவல்யமா
நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
நிர்த்தொந்த நித்தமுக்த
தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
சதானந்த ஞானபகவ
xxxx
ஆகஸ்ட் 26 திங்கட் கிழமை
எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
எல்லாமுன் னுடையசெயலே
எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென்
றிருக்காதி வேதமெல்லாஞ்
xxxx
ஆகஸ்ட் 27 செவ்வய்க் கிழமை
நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே
நடுவே முளைத்தமனதைக்
கட்டஅறி யாமலே வாடினே னெப்போது
கருணைக் குரித்தாவனோ
xxxx
ஆகஸ்ட் 28 புதன் கிழமை
சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது
தான்வந்து முற்றுமெனலால்
சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது
சதாநிட்டர் நினைவதில்லை
xxxx
ஆகஸ்ட் 29 வியாழக் கிழமை
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்
கைகுவித் திடுதெய்வமே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 7.
xxx
ஆகஸ்ட் 30 வெள்ளிக் கிழமை
மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
வாழியென வாழ்த்தியேத்துங்
கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை
கன்னெஞ்ச னுக்கெளியையோ
xxxx
ஆகஸ்ட் 31 சனிக் கிழமை
பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
பணிசெய்யுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
கேட்டுப் பிழைப்போரையுங்
கிரீடபதி யாக்குவீர்
For all poems in Tamil language go to Project Madurai website; no cookies, no cost; FREE.
—-subham—
Tags-தாயுமானவர் பொன்மொழிகள், ஆகஸ்ட் 2024, நற்சிந்தனை, காலண்டர், Aurobindo Birth day.