
Date uploaded in London – 31 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கீழத்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் கோவில் ஆந்திர மாநில கோவில்கள் –PART 15

கோவிந்தராஜ சுவாமி கோவில், (Sri Govindarajaswamy Temple), ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகரத்தில் அமைந்துள்ளது. திருப்பதி ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கிறது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இயங்குகிறது.
கீழத்திருப்பதியிலுள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று கோவிந்தராஜப் பெருமாள் கோவில். இதனால் இதை கோவிந்தராஜ பட்டணம் என்றும் அழைப்பார்கள். சாதவாஹனர்கள், நாகர்கள் பல்லவர்கள் , விஜயநகரப் பேரரசர்கள், வட்டார யாதவராயர்கள் அனைவரும் ஆண்ட பூமி; பெருமாளை வணங்கிய பூமி..
திருப்பதி என்று சொன்னவுடன் ஏழுமலை வாசன் வெங்கடாசலபதிதான் நம் நினைவுக்கு வரும் . ஆனால் மலைக்கு ஏறுவதற்கு முன்னுள்ள கீழத் திருப்பதியில்தான் வெங்கடேஸ்வரா யுனிவர்சிட்டியும் நிறைய கோவில்களும் உள்ளன
(.வெங்கடேஸ்வரா பல்கலைக்கழத்தில் எம். ஏ. பரீட்சை எழுத்துவதற்காக அங்கே வாரக் கணக்கில் தங்கியதால் மறக்க முடியாத அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. )
இந்த கோவிந்த ராஜப் பெருமாள் கோவில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் விசிஷ்டாத்வைதப் பிரசாரகர் ராமானுஜரால் கட்டப்பட்டது. அதற்கு முன்னால், அங்கே பார்த்தசாரதி என்ற பெயரில் கிருஷ்ணன் கோவில் இருந்தது. சிதம்பரத்திலிருந்து கோவிந்த ராஜப் பெருமாளின் உற்சவ விக்கிரகத்தைக் கொண்டு வந்து, இங்கே நிறுவிய பின்னர் ஒரு குடியிருப்பை உருவாக்கினார். அந்த இடத்தைப் பிரபலப்படுத்துவதற்காக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்.. திருப்பதி பாலாஜியை மலை மேல் பூஜிப்பவர்கள் இங்கே தங்கித்தான் அங்கே செல்ல வேண்டும் என்றார். இன்றுவரை இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.இதனால் கோவிலைச் சுற்றியுள்ள அக்கிரஹாரத்துக்கு ராமாநுஜபுரம் என்ற பெயரும் ஏற்பட்டது.. கி.பி.1130ம் ஆண்டில் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது.

சோழநாட்டில் முதலாவது குலோத்துங்கன் பதவி ஏற்றவுடன் வைணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. தீவிர சைவனான அவன் சிதம்பரத்தில் நடராஜருக்கு முன்னாலுள்ள கோவிந்தப் பெருமாள் சந்நிதிக்குத் தீ ங்கிழைப்பானோ என்று கருதி நட ராஜர் சந்நிதிக்கு எதிரேயுள்ள பெருமாள் சந்நிதியை மூடிவிட்டு உற்சவரை திருப்பதிக்கு அருகிலுள்ள கோ ட்டுருக்கு எடுத்துச் சென்றன ர். இதை அறிந்த ராமானுஜர் வட்டார மன்னன் யாதவராயனிடம் கீழத் திருப்பதியில் கோவில் கட்ட ஆணையிட்டார். ஏற்கனவே இருந்த பார்த்தசாரதி கிருஸ்ணன் கோவிலுக்கு வடக்கில் மன்னனும் புதிய கோவிலைக் கட்டினான்.கோவிலில் கி.பி.1235 முதல் கல்வெட்டுகள் உள்ளன.
கோவிலில் பிரம்மோற்சவம், தெப்போற்சவம், வேட்டைத் திருவிழா, ஊஞ்சல் திருவிழா என நிறைய விழாக்கள் தோன்றின.
முதலில் வழிபாட்டிலிருந்த கிருஷ்ண விக்கிரகம் சேதம் அடைந்தவுடன் கவனம் முழுதும் புதிய கோவிந்த ராஜப் பெருமாள் மீது திரும்பியது. இப்போதும் கோவில் கோபுரம் முதலியன கிருஷ்ணர் சந்நிதியை நோக்கி இருப்பதால் இதை அறிய முடிகிறது.
காலப்போக்கில் கோவில் விரிவாக்கப்பட்டது. 4 ஆழ்வார்கள் சந்நிதிகள், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார், சாலை நாச்சியார், ராமானுஜர் , திருமலை நம்பி சந்நிதிகளும் தோன்றின.இராமாயண, மஹாபாரத ஓவியங்களும் சுவர்களில் தீட்டப்பட்டன.
கர்பக் கிரகத்தில் உற்சவமூர்த்தி ஸ்ரீ தேவி பூதேவியுடன் தரிசனம் தருகிறார். கோவிந்த ராஜரோ ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கிறார்.
வைஷ்ணவர்கள் இந்தக் கோவிலை வணங்காமல் வருவதில்லை. காலப்போக்கில் புதிய சந்நிதிகள் உருவானதால் கோவிலில் நித்திய உச்சவமே நடைபெறுகிறது.
அருகிலேயே இராம பிரானின் கோதண்டசுவாமி கோவிலும் உள்ளது. சீதாதேவி, லெட்சுமணன், அனுமனையும் தரிசிக்கலாம்.
பெங்களூர் சாலையிலுள்ள மங்காபுரத்தில் வீற்றிருக்கும் கயானா வெங்கடேஸ்வரர் கோவிலும் குறிப்பிட்டது தக்கது.. கல்யாண பக்தர்கள் இந்தக் கோவில்கள் அனைத்தையும் தரிசிப்பதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளனர் .

மூலவர் – கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – புண்டரீகவல்லி.
விசேஷங்கள் – இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலின் மூலவர் கோவிந்தராஜர் திருமலையில் குடிகொண்டுள்ள வெங்கடேஸ்வரருக்கு மூத்தவர் எனக் கருதப்படுகிறது.[ ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் கோவிந்தராஜரின் காலடியில் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி உடனுறைந்துள்ளனர்.
கீழ்த்திருப்பதியில் ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆதிவராஹ பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்த பிறகே ஸ்ரீநிவாஸனுக்கு தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோயில்.
இங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளை `பெரிய அண்ணா’, என்றும் `பெத்த பெருமாள்’ என்றும் அழைப்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரவு-செலவுகள் யாவும் இவரின் மேற்பார்வையில் நடப்பதாக ஐதிகம்.
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ‘திருவடிப்புடி உற்ஸவம்’ ஆண்டுதோறும் நடைபெறுகின்றது.
தமிழ்நாட்டின் ஶ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார், ரங்கநாதப் பெருமாளை இதயபூர்வமாக நேசித்து, ஆண்டவனை அடைந்தவர். கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் பல நூற்றாண்டுகளாக இந்த விழா, நடைபெற்றுவருகிறது. விழா நபிடக்கும் பத்து நாள்களிலும், தினமும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை ‘ஆண்டாள் திருமஞ்சனம் நிகழ்ச்சி’ நடைபெறும். திருவடிப்புடி உற்ஸவம் என்று அழைக்கப்படும், இந்த விழாவையொட்டி மாலை 5.30 மணிக்கு சுவாமிப் புறப்பாடு அங்குள்ள மாட வீதிகளில் நடைபெறும்.
வைணவர்கள் பெரிதும் வழிபடும் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாளின் அவதாரத் திருநாளான ஆடிப்பூரம் நட்சத்திர நாளும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக, அந்தக் காலத்தில் திருமலைக்கு வருகிறவர்கள் கீழ்த்திருப்பதியில் தங்கி, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோவில், சீனிவாசமங்காபுரம் ஆகிய கோயில்களையெல்லாம் தரிசித்த பிறகே மலைக்குச்செல்வார்கள்.
சிறப்புடன் நடந்து முடிந்தது.
xxxx

Govindaraja Swamy Temple (from temple website)
Address: North Mada Street, Tirumala, Tirupati, Andhra Pradesh 517504, India.
Generally, the temple is opened daily by 5 AM with Suprabhata Seva and closed by 9 PM with Ekantha Seva. The following are the sub-temples situated in the premises of this temple.
01. Sri Partha Sarathi Swamy Temple.
02 Sri Kalyana Venkateswara Swamy Temple.
03 Sri Choodikudutha Nachiyar Ammavari Temple(SriAndal)
04. Sri Salai Nachiyar Ammavari Temple(Sri Pundarikavalli Temple)
05. Sri Bhasyakarla vari Temple
06. Sri Anajaneya swamy Temple near(opposite) Dwajasthambham
07. Sri Thirumangai Alwar Temple
08. Sri Kurath Alwar Temple
09. Sri Madhurakavi and Ananda Alwar Temple
10. Sri Chakrathalwar Temple
11. Sri Mudal Alwar Temple
12. Sri Manavala Mahamuni Temple
13. Sri Vedantha Desikar Temple
14. Sri Anjaneya Swamy Vari Temple
15. Sri Nammalwar Temple
16. Sri Sanjeevaraya swamy Temple( Mattam Anjaneya Swamy Temple)
17. Sri Tirumala Nambi Sannidhi
18. Sri Lakshmi Narayana Swamy Temple, G.S. Mada Street, Tirupati(taken over temple)
–SUBHAM—
TAGS- கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில் ஆந்திர மாநில கோவில்கள் -PART 15, Govindaraja Swamy Temple, Tirupati