அமராவதி சிவன் கோவில்- Part 17 (Post No.13,501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,501

Date uploaded in London – 2 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

அமராவதி சிவன் கோவில்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்- Part 17

அமராவதி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் 17

எங்கே இருக்கிறது?

ஆந்திர மாநிலத்தில் குண்டூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது .

விஜயவாடா , குண்டூர்  நகரங்களிலிருந்து பஸ்ஸில் செல்லலாம்; விஜய வாடாவிலிருந்து கிருஷ்ணா நதி படகு சர்வீஸில் அமராவதிக்குச் செல்லலாம்

சிறப்பு என்ன?

அமராவதி லிங்கம் 15 அடி உயரம் இருப்பதால் அர்ச்சகர்கள் தஞ்சசைப் பெருவுடையார் கோவில் போல ஏணிப்படிகளில் ஏறி நின்றுதான் அபிக்ஷேக ஆராதனைகளை செய்கிறார்கள்.

ஆந்திரத்திலுள்ள ஐந்து பஞ்சாரம சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று  ஆண்டுக்கு சிவராத்திரி விழாவின் போது 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை உண்டியல் வசூல் வருகிறது.

சிவராத்திரியின் போது பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் கோவிலில் சிவன், அம்பிகாவைத் தவிர எல்லா பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் உண்டு.

2200 ஆண்டுக்கும் மேலான வரலாறு உள்ள இடம் அமராவதி. புத்தமதத்தின் முக்கிய தலம் .இந்து மதப் பேரரரசர்களாகிய சாதவாகன அரசர்களின் தலை நகரம்.

ஸ்ரீமுக சாதவாகன அரசன் தலைமையில் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி தென்னிந்தியாவில் அசைக்கமுடியாத ஆட்சியை அமைத்து 400 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்தனர்.

தமிழர்கள் அறியாத ரகசியம் !

இமயத்தில் சோழன் கொடி நட்டான்; சேரன் கொடி நட்டான்; பாண்டியன் கொடி நட்டான் என்றெல்லாம் எழுதுவோர் ஒரு முக்கிய ரகசியத்தை மறைக்கின்றனர்; அல்லது கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றனர். தமிழர்களின் மிகப்பெரிய நண்பர்கள் சாதவாஹனர்கள் . இந்துப் பேரரசர்கள் என்பதால், யாரெல்லாம் புனித கங்கையில் நீரெடுக்க (கன்வர் யாத்ரா), அல்லது ஸ்நானம் செய்யப் போகிறார்களோ,  யாரெல்லாம் புனித இமய மலைக்கு கல் சேகரிக்க செல்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுப்பார்கள். இதனால் வட இந்திய மன்னர்கள் இவர்கள் மீது கைவைக்க அஞ்சுவார்கள் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவன் இரண்டு முறை கங்கைக்குச் சென்றான் என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் செப்புகிறார். சாதகர்ணி — நூற்றுவர் கன்னர் — என்னும் சாதவாஹன பேரரசன் உதவி செய்ததை இளங்கோ அடிகள் நன்றியுடன் பகர்கிறார் .

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவர்கள் உதவி இல்லாமல் தமிழர்கள் வேங்கடத்தைத் தாண்டிச் செல்ல முடியாது.

xxxx

இந்துக் கடவுளர்களின் இளிச்சவாயன் சிவபெருமான்தான். யார் கொஞ்சம் புகழ்ந்தாலும், நம்பினாலும், ஓடி வந்து உதவி செய்வார். இதனால் அவருக்கு ஆசுதோஷ் என்று பெயர். இதன் பொருள் விரைவில் சந் தோஷம் அடைபவர். இதனால் எல்லா அசுரர்களும் முதலில் வணங்கி  வரம் பெறுவது சிவனிடம் தான் . பஸ்மாசுரன் கதை எல்லோருக்கும் தெரியும். அது போல தாரகாசுரன் என்பவனும் யாராலும் வெல்ல முடியாத வரம் வாங்கி ஆட்டப்பாட்டங்களைத் தொடங்கவே நல்லோர் அனைவரும் நடுங்கினர். அவர்கள் சிவனை வேண்டவே அவர் மகன் குமரனை அனுப்பினார்;.தாராகசுரன் அணிந்து  இருந்த மாலையை அவர் உடைத்தபோது அதில் இருந்த சிவலிங்கம் கீழே  விழுந்து வளர்ந்தது. அதை இந்திரன் வாணங்கவே  இந்த இடம் அமராவதி எனப் பெயர் பெற்றது . கடவுளரின் இருப்பிடம்  என்பது அர்த்தம்; அமரர்களான தேவர்கள்  வாழ்விடம், இருப்பிடம் என்பது பொருள். தாரகாசுரனை முருகன் வதம் செய்தார்.

மேலுலகத்திலும் இந்திரன் தலை நகர் அமராவதி . பூலோக அமராவதி நகர் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது. அமரேஸ்வரர் என்பது சுவாமியின் திருநாமம். நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. இங்கு கிருஷ்ணா நதியில் புனித நீராடி சிவனை வணங்கினால் காசிக்குச் சென்று கங்கையில் குளித்து விஸ்வநாதனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கர்ப்பக் கிரகத்தில் உள்ள லிங்கம் மிக உயரமானது ( 15 அடி உயரம் ) ;அருகில் பால சாமுண்டா அம்பிகாவின் சந்நிதியும்  இருக்கிறது .

இப்போதுள்ள கோபுரங்கள் சுமார் 800 ஆண்டுகள் பழமையானவைதான். கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி கேட ராஜா என்பவர் திருப்பணி செய்தார்.

1796-ம் ஆண்டில் வட்டார சிற்றரசர் வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு தனது தலைமையகத்தை அமராவதிக்கு மாற்றி , வாழ்நாள் முழுதும் நிறைய கட்டிடங்களை எழுப்பினார்.

xxxx

கோவிலில் நிறைய புத்த மத தாக்கமும் தெரிகிறது. தமிழ்நாட்டைப்போலவே புத்தர்களும் சமணர்களும் இந்துக் கோவில்களை ஆக்கிரமிக்க, அவர்களை சைவர்கள் விரட்டியடித்தனர் . இந்து விரோதிகள், இதை மாற்றி நாம் புத்த மத இடத்தை ஆக்ரமித்ததாக கதை எழுதுவார்கள் .ஆனால் இந்தப் பொய்க்கதைகளுக்கு இலக்கியச் சான்றுகளோ கல்வெட்டுச் சான்றுகளோ இல்லை. இப்படிப் பொய்க்கதை எழுதிய பயல்கள் ஒரு சான்றினையும் கொடுப்பதில்லை. இதே போல அயோத்தியா, மதுரா, காசி ஆகிய இடங்களில் மத வெறியர்கள் நம் கோவில்களை ஆக்ரமித்ததை வடக்கில் காண்கிறோம்.

xxxx

ஆந்திரத்தின் புதிய தலை நகரம்

ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆந்திரம், தெலுங்கானா என்று பிரித்த பின்னர் அமராவதி நகரை ஆந்திரத்தின் தலைநகராக அறிவித்தனர்.

அமராவதியில் நிறைய புத்த சமய  சின்னங்கள், சிலைகள், கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன. இவைகளில் முக்கியமானவைகளை பிரிட்டிஷார் திருடி, லண்டலிலுள்ள  பிரிட்டிஷ் மிஸியத்தில்  காட்சிக்கு வைத்துள்ளனர். ராபர்ட் கிளைவ் முதல் மவுண்ட்பேட்டன் காலம் வரை திருடிய பொருட்களை பிரிட்டன் முழுதும் எல்லா மியூசியங்களிலும் காணலாம் ( நான் லண்டலிலுள்ள எல்லா மியூசியங்களையும் ஆக்ஸ்போர்டிலுள்ள மியூசியங்களையும் பார்த்திருக்கிறேன்).

இவை தவிர, இன்று வரை இந்தியத் திருடர்கள் உலகப் புகழ்பெற்ற ஏல  நிறுவனங்களுக்கு  இவைகளைக் கடத்தி விற்பனை செய்வதையும் பத்திரிகைகளில் படிக்கிறோம்.

அமராவதியில் 2000  ஆண்டுப் பழமையான புத்த ஸ்தூபி உள்ளது. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட 125 அடி உயர தியான புத்தர் சிலையும் மியூசியமும், பெளத்த கல்வி நிறுவனமும் இருக்கிறது. இதனால் சாஞ்சி , சாரநாத், புத்த கயா போல இங்கும் நிறைய வெளி நாட்டுப் பயணிகள் வருகின்றனர்.

—subham–

Tags–அமராவதி, புத்த ஸ்தூபி, ஆந்திரம், அமரேஸ்வரர் , சிவன் கோவில், ஆந்திர மாநிலம் , 108 புகழ்பெற்ற கோவில்கள் , பகுதி-17

Leave a comment

Leave a comment