பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;   விஞ்ஞானிகள் அறியாத மனம்-2 (Post.13,597)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,597

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் –2

அற்புதங்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை

கட்டுரையின் இரண்டாவது பகுதி

சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து பேசினார் ………

“ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் , புராதன இந்தியாவில் , அற்புதங்கள், இப்போது இருப்பதைவிட அதிகமாகவே நடந்தன ஒரு நாடு நெருக்கமான ஜனத்தொகை அடையும்போது மனோசக்திகள் குறையும் என்று நான் நினைக்கிறேன். பெரிய நாடாக இருந்து குறைவான ஜனத்தொகை இருந்தால், மனத்தின் அபூர்வ சக்திகளை அதிகம் காணலாம். .எதையும் பகுத்தறிவுடன் நோக்கும் இந்துக்கள் இது பற்றியும் சிந்தித்தனர். இவை எல்லாம் அபூர்வமே அல்ல; இயற்கையான, சாதாரண விஷயம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்  உடல் சார்ந்த பல விதிகளை போலவே இவையும் சில விதிகளுக்குட்பட்டே நடக்கின்றன. இயற்கையில் ஏதோ ஒரு அதிசயம் என்பதல்ல.

அபூர்வமான சக்திகளுடன் சிலர் மட்டும் பிறக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்; இதை யாரும் பெறமுடியும்; ஆனால் முறையாகப் பயின்று, பயிற்சி செய்து இவைகளை பெறலாம்  இந்த விஞ்ஞானத்துக்கு ராஜ யோகம் என்று பெயர்.ஆயிரக்கணக்கானோர் இதை பயின்றுவருகிறார்கள் இந்தியாவில் இது ஒரு தினசரி வழிபாடு.

அவர்கள் முடிவாகக் கண்டது என்ன? எல்லா சக்திகளும் நம்முடைய மனதில் தான் உள்ளன.

நம்முடைய மனம் பிரபஞ்சம்  முழுதும் வியாபித்துள்ள மனதின் ஒரு பகுதிதான் . ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனமும் , எங்கிருந்தாலும் அதனுடன் தொடர்பு கொள்கிறது.

எண்ணங்கள் பரிமாற்றம் என்னும் விஷயத்தை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? ஒரு மனிதன் சிந்திக்கும் விஷயம் ஏதோ ஒரு வகையில் உருவம் எடுக்கிறது தொலைவிலுள்ள ஒருவனுக்கு ஒரு மனிதன் செய்தி அனுப்ப எண்ணுகிறான். அதை அறிந்து , அந்த எண்ண அலைகளை ஏற்க அந்த மனிதனும் தயாராகிறான்.; அப்படியே அதை ஏற்கவும் செய்கிறான்.தொலைவு ப ற் றி கவலையே இல்லை. நான் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் மூளைக்குள் போகிறது; அதை நீங்கள் உங்களுடைய எண்ணத்துடன் கலந்து நீங்களே ஒரு புதிய வடிவம் கொடுக்கிறீர்கள் ஆனால் டெலிபதி TELEPATHY என்னும் தொலையுணர்வு அப்படிப்பட்டதல்ல . அது நேரடித் தொடர்பு

XXXXX

(என் கருத்து :- புற நானூற்றிலும் இந்த அதிசயம் உள்ளது. இந்துக்கள் வடக்கிருந்து உண்ணாவிரதம் இருப்பது ஒரு சடங்கு. இது வால்மீகி ராமாயணத்திலும் உளது பிராயோபவேசம் என்பர் ; கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான். அவன் புனிதமான வடக்குதிசை நோக்கி அமர்ந்தவுடன் புனிதப் புலவர் பிசிராந்தையார் வரப்போகிறார் என்றான். நீங்களும் அவரும் எக்காலத்திலும் சந்தித்ததும் இல்லை ; ஒருவரை  ஒருவர் பார்த்ததும் இல்லையே என்றனர் சகாக்கள்; ஆனால் என்ன அதிசயம் ! பிசிராந்தையாரும் வந்து வடக்கிருந்து உயிர்நீத்தார். ராமபிரான் வாழ்நாள் முடிந்தவுடன் சரயு நதியில் ஜல சமாதி அடையப் போகிறார் என்ற வுடன் பல்லாயிரம்மக்கள் அவருடன் சென்று சரயூ நதியில் மூழ்கி சொர்க்கம் சென்றனர்.  பட்டினத்தார், ஆதிசங்கர ர்  ஆகியோரின் தாயார்  இறக்கும் போது , முன்னர் கொடுத்த உறுதி மொழிப்படி , அவர்கள் தாய் முன் தோன்றி சட லத்துக்கு  தீ மூட்டினர் ; பூசலார் நாயனார் மன க் கோயில் கட்டி கும்பாபிஷேக தேதி நிர்ணயித்ததை இறைவனே சோழ மன்னனுக்கு அறிவித்தான் என்கிறது பெரிய புராணம் ; இந்தக் கலை அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகளுக்கு இன்று வரை தெரியாது )

XXXX

மனது தனிப்பட்டதல்ல தொடர்ச்சியானது- இணைந்தது என்பதை யோகிகள் கண்டுபிடித்தனர் மனது என்பது பிரபஞ்சம் தழுவியது ; உங்கள் மனது, என் மனது, இன்னும் உள்ள சின்னச் சின்ன மனதுக்கள் எல்லாம் பிரபஞ்ச மனதின் துண்டுகள்தான் ; பெரிய கடலில் பார்க்கும் அலைகள் போல. (ஆனால் கடல் ஒன்றுதான்). நம்முடைய எண்ணத்தை நேரடியாகவே அனுப்பலாம்.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறீர்கள்; நாம் பெரும்பாலும் நம்முடைய சக்தியை சொந்த உடம்பினைப் பாதுகாத்துக்கொள்ள செலவிடுகிறோம் எஞ்சிய சக்தியை பிறர் மீது செலுத்துகிறோம். நம்முடைய எண்ணங்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போல அவர்கள் எண்ணங்களும் நம் மீது ஆதிக்கம் செய்கின்றன நம்முடைய செயல்கள், குணங்கள் முதலியவை மாறுவதைப்போல பிறர் இடத்திலும் நடக்கிறது ; ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். கற்றறிந்த, சொல்லில் வல்லவரான ஒருவர் ஒரு மணிநேரம் உங்களுடன் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்கள்  மனதில் மாற்றமே இல்லை ; இன்னும் ஒருவர் வருகிறார் ; நன்றாகப் பேசத்தெரியாது; இலக்கணப் பிழைகளுடன் கொச்சை மொழியில் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சு உங்களுடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன்  பொருள் என்ன ? சொற்கள் மட்டும் மாற்றத்தைக் கொணராது ; பேசுபவரின் காந்த சக்தியும் தேவைப்படுகிறது பேச்சு மூன்றில் ஒரு பகுதி தாக்கத்தை உண்டாக்கினால், பேசுவரின் பெர்சனல் மாக்னெட்டிசம் PERSONAL MAGNETISM  மூன்றில் இரண்டு பங்கு தாக்கத்தை உண்டாக்குகிறது

 குடும்பத்தில் சிலர் வெற்றி பெறுகிறார்கள்; சிலர் வெற்றி பெறுவதில்லை; குடும்பம் பாழானதுக்கு அந்த ஆள்தான் கா ரணம் என்று குற்றம் சாட்டிவிடுகிறோம்; நமது தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொவதில்லை. தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; பெரிய தலைவர்கள் வந்தனர்; புத்தகங்களை எழுதினர்; அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் எல்லாம் மகத்தானவர்கள்.  இன்றும் நாம் அவர்கள் எழுதிய புஸ்தகங்களைப் படிக்கிறோம் ஏன் ? நான் முன்னர் சொன்னது போல அவர்களின் PERSONALITY பெர்சனாலிட்டிதான். தனித்தனமைதான்.. அது,  மூன்றில் இரண்டு பங்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

XXXX

(என் கருத்து – மஹாத்மா காந்தி, நடிகர் எம்.ஜி. ஆர் பேசிய கூட்டங்களுக்கு பல லட்சக் கணக்கானோர் வந்து நீண்ட நேரம் காத்திருந்து பேச்சைக்கேட்டனர் ; இதையே செய்த ஏனையோருக்கு அப்படிக் கிடைக்கவில்லை; பெர்சனசாலிட்டி , பெர்சனல்  மாக்னட்டிசத்துக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்; புத்தர், ஆதிசங்கரர் , சுவாமி விவேகானந்தர் போன்றோருக்கும் இவை இருந்தன ). விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தான்  கண்ட அற்புதங்களை, சம்பவம் சம்பவமாக எடுத்துச் சொல்லி அவைகள் மூலம் இறைவனை அடைய முடியாது; இறைவனை அடைய முடியாதபடி தடுக்கும் படு குழிகள் அவை என்பதை விளக்கியுள்ளார்; சத்யா சாய்பாபாவும் அற்புதங்கள் பற்றிக் கேட்டபோதெல்லாம், இவை தனது விசிட்டிங் கார்ட் என்று சொல்லி மழுப்பியுள்ளார்; அதாவது இறைவனுக்கும் அற்புதங்களும் தொடர்பு இல்லை; நல்லோர், அவைகளைப்ப பயன்படுத்தி மக்களை நல்வழிப் படுத்துவர்; தீயோர் அவைகளைப் பயன்படுத்தி பெண் மீதும் பொன்  மீதும் கை வைத்து சிறைக்குச் செல்லுவார்கள் ராஜ யோகம், ஹட யோகம் மூலம் அபூர்வ சக்திகளைப் பெறலாம் . திரு மந்திரத்தில் திருமூலர் அட்டமா சித்தி பற்றி ஒரு அத்தியாயமே பாடியுள்ளார் )

XXX

கட்டுரையின் மூன்றாவது பகுதியில் ராஜ யோகம் பற்றிச் சொல்கிறார் .

தொடரும்

–SUBHAM—

TAGS– மனதின் சக்தி, பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், ராமன், சரயூ நதி, ஜல சமாதி,, எம் ஜி ஆர், காந்தி , கூட்டங்கள் ,  பிரபஞ்ச்ச மனது,  பாபா செய்த அற்புதங்கள் , விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம், பகுதி – 2. power of mind

Leave a comment

Leave a comment