

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,612
Date uploaded in London – 31 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

பத்து ஆண்டுகளுக்கு முன் மனம் பற்றிய 31 பொன்மொழிகளை இங்கு வெளியிட்டேன்; இதோ மேலும் 30 பழமொழிகள்
பண்டிகை/ விடுமுறை நாட்கள் – செப்டம்பர் 5- ஆசிரியர் தினம்; 7- விநாயக சதுர்த்தி; 11- பாரதியார் நினைவு நாள்; 15- ஓணம் ; 16-மிலாடி நபி; 18- மாளயபட்சம் ஆரம்பம் .
அமாவாசை -2; பெளர்ணமி -17
ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள் – 14, 28.
சுப முகூர்த்த தினங்கள் – 5,6, 8, 15, 16
xxxx
செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை
நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.– ரமணர்
xxxx
செப்டம்பர் 2 திங்கட் கிழமை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! —பட்டினத்தார்
xxxx
செப்டம்பர் 3 செவ்வாய்க் கிழமை
Mind is a Monkey
மறுகிச் சுழலும் மனக் குரங்கு -காட்டும் கரையும் மனக் குரங்கு–தாயுமானவர்
xxxx
செப்டம்பர் 4 புதன் கிழமை
நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான். .– ரமணர்
xxxx
செப்டம்பர் 5 வியாழக் கிழமை
வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்
உருகிப் போனது தேற்றப்ப டாதினி
மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென .அழையாயோ —திருப்புகழ்
xxx
செப்டம்பர் 6 வெள்ளிக் கிழமை
மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை. .– ரமணர்
xxxx

செப்டம்பர் 7 சனிக் கிழமை
Do a trick so that I concentrate (on You)
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணு – —தாயுமானவர்
xxxx
செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை
தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. -பட்டினத்தார்
xxx
செப்டம்பர் 9 திங்கட் கிழமை
Let my Mind Spinning Top stop.
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை
அடங்கி மனம்வீழநேரே
அறியாமை யாகின்ற இருளகல இருளளியும்
அல்லா திருந்தவெளிபோல் –தாயுமானவர்
xxxx
செப்டம்பர் 10 செவ்வாய்க் கிழமை
Please help me to jump on the boat from the Sea of Worries
கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர்
தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே
கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி …… அலையாதே —திருப்புகழ்
xxx
செப்டம்பர் 11 புதன் கிழமை
மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும். .– ரமணர்
xxxx
செப்டம்பர் 12 வியாழக் கிழமை
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.--பட்டினத்தார்
xxxx

செப்டம்பர் 13 வெள்ளிக் கிழமை
நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும். .– ரமணர்
xxxx
செப்டம்பர் 14 சனிக் கிழமை
My mind is like the cotton blown away by the wind of desires.
ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்சென மனம்
அலையும் காலம் — தாயுமானவர்
xxxx
செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை
Oh Mind Come Near
மனமே உனக்கு உறுதி புகல்வேன்
எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே- திருப்புகழ்
xxxxx
செப்டம்பர் 16 திங்கட் கிழமை
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும்– பட்டினத்தார்
xxxx
செப்டம்பர் 17 செவ்வாய்க் கிழமை
மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும் போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. .– ரமணர்
xxx
செப்டம்பர் 18 புதன் கிழமை
My false mind is jumping like a monkey stung by a scorpion; save me
கொள்ளித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்
கள்ள மனம் துள்ளுவதென் கண்டோ பராபரமே– தாயுமானவர்
xxxx
செப்டம்பர் 19 வியாழக் கிழமை
You saved me when I was struggling with dirty mind
மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை
கொண்டு மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. —திருப்புகழ்
xxxx

செப்டம்பர் 20 வெள்ளிக் கிழமை
மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன. .– ரமணர்
xxxx
செப்டம்பர் 21 சனிக் கிழமை
My mind is like a kite that is torn and swept; save me
வால் அற்ற பட்டமென மாயா மனப் படலம்
கால் அற்று விழவும் முக்கண் ண்ணுடையாய் காண்பேனோ — –தாயுமானவர்
xxxx
செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை
My mind is like a pin wheel, save me
ஆடுங்கறங்காகி அலமத் துழன்று மனம்
வாடுமெனை ஐயா நீ வா எனவும் காண்பேனே — தாயுமானவர்
Xxxx
செப்டம்பர் 23 திங்கட் கிழமை
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே
வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி
மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடிவினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) உவகை யால் நினைந்துமிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே வெகுட்சிதனையே துரந்துகளிப்பினுடனே நடந்து
மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்—திருப்புகழ்
xxxx
செப்டம்பர் 24 செவ்வாய்க் கிழமை
மனம் போல மாங்கல்யம் — பழமொழி
கள்ள மனம் துள்ளும்.=தமிழ்ப் பழமொழி
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. –தமிழ்ப் பழமொழி
மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு–. தமிழ்ப் பழமொழி
xxxx

செப்டம்பர் 25 புதன் கிழமை
எண்ணுவ துயர்வு- பாரதி ஆத்திச் சூடி
நினைப்பது முடியும்- பாரதி ஆத்திச் சூடி
xxxx
செப்டம்பர் 26 வியாழக் கிழமை
My mind is changing constantly; save me
ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ
என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே. –தாயுமானவர் .
xxxx
செப்டம்பர் 27 வெள்ளிக் கிழமை
இறப்பும் பிறப்பும் பொருந்த – எனக்
கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்
மறப்பும் நினைப்புமாய் நின்ற – வஞ்ச
மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – சங்கர –தாயுமானவர்
xxxxx
செப்டம்பர் 28 சனிக் கிழமை
நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.– ரமணர்
xxxx
செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ–திருப்புகழ்
xxxx
செப்டம்பர் 30 திங்கட் கிழமை
மனத்தில்வருவோனெ என்(று)
உன் அடைக்கலம் அதாக வந்து
மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும்
மனமேயிரங்கி மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா–திருப்புகழ்
xxxx

Bonus Quotations
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய …… மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
னந்தா னித்தரை …… மலைபோலே
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
னந்தா னிப்படி …… யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
என்றே யிப்படி …… அருள்வாயே —-திருப்புகழ்
xxxx
இளக மனம் அழலின் மெழுகாய் –தாயுமானவர்
xxxx
மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்
விகசிப்ப தெந்தநாளோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. –தாயுமானவர்
xxxx
my mind is in a wrestling contest
வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம்
ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே. –தாயுமானவர்
xxxx
my mind is like a gambler’s mind; save me
சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம்
வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே. –தாயுமானவர்
xxx
when I realized the Truth false thoughts ran away
உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே. –தாயுமானவர்
xxx
let my mind ripe like a fruit.
பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்
நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ –தாயுமானவர்.
xxxx
mind is a snake; save me
வாதனையோ டாடும் மனப்பாம்பு மாயஒரு
போதனைதந் தையா புலப்படுத்த வேண்டாவோ –தாயுமானவர்
xxxx
My old post
மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்
Tamil and Vedas
https://tamilandvedas.com › மன…
29 Dec 2014 — “மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய். அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய் .நன்றையே கொள்
–subham—
Tags- செப்டம்பர் 2024, நற்சிந்தனை, காலண்டர், மனம் பற்றிய பொன்மொழிகள்