நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! (Post No.13,662)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,662

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

(எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல)

பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மஹாவிஷ்ணு என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசிய சொற்பொழிவினால் அவர் கைது செய்யப்பட்டார். சில பள்ளிக்கூடங்கள் அவரைப் பேச அழைத்ததால்  தலைமை  ஆசிரியைகள் மாற்றப்பட்டுவிட்டனர்.

ஆனால் பாவ புண்ணியம் பற்றியும்  பூர்வ ஜன்ம தீவினைப்பயனால் நோய்கள் வருகின்றன என்பதும் சங்க இலக்கியம் முதல்  பல நூறு தமிழ் நூல்களில் உள்ளன. சம்ஸ்க்ருத நூல்களிலும் அவ்வாறே.

 யார் பன்றியாகப் பிறப்பார்கள் என்று திருமூலர் சொன்னதும், யார் யார் என்ன,என்ன விலங்குளாகப் பிறப்பார்கள் என்று மனு ஸ்ம்ருதி தரும் பட்டியலையும் ஏற்கனவே எனது கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன் .

****

அலிகளாக யார் பிறப்பார்கள் ?

கணியன் பூங்குன்றனார் என்ற ஜோதிடர் புறநானூற்றிலேயே கர்மா தியரியைச் KARMA THEORY சொல்லி, தீதும் நன்றும்  பிறர் தர வாரா; உன்னுடைய கர்மாவுக்குத் தக்கபடியே அமையும் என்று சொல்லிவிட்டார். அவர் பக்கா இந்துஒருவேளை ஹிந்துத்துவாவை தமிழ் நாட்டில் துவக்கிவைத்தவராக இருக்கலாம் . ஏனெனில் இது எல்லாம் மனு நீதி நூலில் உள்ளது

****

புறநானூறு 192

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; KARMA THEORY

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

****

அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட போறவன் அலியாகப் பிறப்பான்!

5. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்

     கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை

     வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை

     அலியாகி ஆடிஉண் பார்.

     (இ-ள்.) செம்மை ஒன்று இன்றி – ஒரு நன்னடக்கையுமில்லாமல், சிறியார் இனத்தர் ஆய் – அயோக்கியரோடு சேர்ந்தவராய், கொம்மை வரி முலையாள் – திரட்சியான ரேகைகள் எழுதப் பெற்ற முலையை யுடையாளுடைய, தோள் மரீஇ – தோளைச் சேரவிரும்பி, உம்மை – முற்பிறப்பில், வலியால் – வலிமையால், பிறர் மனைமேல் சென்றாரே – பிறர் மனையாளிடஞ் சென்றவர்களே, இம்மை அலி ஆகி – இப்பிறப்பில் நபும்சகராய், ஆடி உண்பார் – கூத்தாடி (பிச்சை வாங்கி) உண்கிறார்கள், எ-று.

     முற்பிறப்பில் பிறர் மனையாளிடம் சென்றவர் தாம் இப்பிறப்பில் நபும்சகராகிக் கூத்தாடிப் பிழைக்கிறவர் என்பதாம். ஆதலால், பிறர்மனை நயக்க வேண்டாம் என்பது கருத்து.

     செம்மை ஒன்று இன்றி என்றால், கிஞ்சித்தும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடவாமல் என்றபடி, அவளைச் சுவாதீனஞ் செய்யப் பலவித சாகசங்களைச் செய்து என்பதை வலியால் என்றார். உம்மை – உகரச்சுட்டின் மேல் காலங்குறிக்க மை விகுதி வந்தது. இம்மையுமப்படியே.

****

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும் !

இந்த விஷயத்தை சமண முனிவர்கள் நாலடியார் என்னும் நூலில் சொல்கிறார்கள்

நாலடியார் பாடல்கள்

123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

     துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்

     அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற

     பழவினை வந்தடைந்தக் கால்.

     (இ-ள்.) அக்கால் – அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை – நண்டை, காதலித்து – விரும்பி, கால் முரித்து – காலையொடித்து, தின்ற – (அதனைத்) தின்ற, பழவினை – (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் – (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை – உள்ளங்கையானது, அக்கு போல் – சங்குமணியைப் போல, ஒழிய – நீங்க, விரல் அழுகி – விரல்கள் அழுகிப் போய், துக்கம் – துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் – பலவகைக் குட்ட நோய்கள், எழுப – உண்டாகப் பெறுவார் (பாவிகள்), எ-று.

     தண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோ யுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.

     “அகமுனர்ச்செவிகை வரினிடை யனகெடும்” என்பதனால் அகங்கை அங்கை யென்றாயிற்று [மெய். சூ. 19]; பாவிகள் நோயெழுப என்பது “உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும்” என்கிற [பொது. சூ. 26] விதியால் பொருந்தியது. சங்கு சுட்ட சுண்ணாம்பு என்பது போல தின்ற என்பது பழவினை யென்னுங் காரியப் பெயரோடு முடிந்தது.

****

பிச்சைக்காரர்கள் யார் ?

முன் ஜென்மத்தில் பிச்சை இடாதவர்கள் அடுத்த பிறப்பில் பிச்சைக்காரர்களாக பிறக்கிறார்கள்

94. இம்மி யரிசித் துணையானும் வைகலும்

     நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்

     கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

     அடாஅ அடுப்பி னவர்.

     (இ-ள்.) இம்மி அரிசி துணை ஆனும் – இம்மியளவான அரிசியை யாயினும், நும்மில் இளையவ – உங்களுக்கு இசைந்தவற்றை, வைகலும் – தினந்தோறும், கொடுத்து உண்மின் – யாசகருக்குக் கொடுத்து உண்ணுங்கள்; குண்டு நீர் வையத்து – ஆழமான கடல் சூழ்ந்த பூமியில், அடா அடுப்பினவர் – சமைக்காத அடுப்பையுடையவர் (சோற்றுப் பிச்சைக்கு வருகின்றவர்), உம்மை – முற்பிறப்பில், கொடாதவர் என்பர் – (யாசகருக்குக்) கொடுக்காத லோபிகள் என்று சொல்வார்கள், எ-று.

     கிஞ்சித்தாலும், இயைந்ததைக் கொடுக்க வேண்டும், முற்பிறப்பில் கொடாதவரே இப்பிறப்பில் சோற்றுப் பிச்சைக்கு வருகிறவர்கள் என்பதாம்.

     அடா அடுப்பினவர் – துறவிகள், உம்மை கொடாதவர் – (இவர்) முற்பிறப்பில் கொடுத்து வையாதவர், என்பர் -, என உரைத்தல் நன்று. சன்னியாசிகள் அடுப்பு வைத்துச் சமைக்க லாகாதென்பது சாஸ்திரவிதி.

     இம்மி – ஒரு சிறிய அளவு, அது (960ல்) ஒரு பங்கு. ஏனும் என்பது போல ஆனும் என்பதும் இழிவு சிறப்போடு விகற்பத்தைக் காட்டுகிற ஓரிடைச் சொல். வைகலும் – முற்றும்மை. இயைவ – பலவின்பால் வினையாலணையும் பெயர். கொடா அதவர், அடாஅ – இசையளபெடை. அடாஅ அடுப்பினவர் என்பது வறுமைக்குக் குறிப்பு.

–Subham—

Tags- பிச்சைக்காரர் , அலிகள், குஷ்ட ரோகம், பிறன்மனை, மறுபிறப்பு,  கர்மா,  வினை, நாலடியார், மஹாவிஷ்ணு பேச்சு, நண்டு ,

Leave a comment

1 Comment

  1. Ammunni Balasubramanian's avatar

    Ammunni Balasubramanian

     /  September 13, 2024

    We all know now that leprosy is caused by Leota bacillus by prolonged contact. This appears to be to be a scare tactics of not eating crab. How valid this poem will be in modern time.
    Sent from my iPhone

Leave a comment