WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,663
Date uploaded in London – 13 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நாய், ஈ, பன்றி, பாம்பு முதலிய விலங்குகள், பூச்சிகளைக் கொண்டு இந்துக்கள் நிறைய பாடம் கற்கிறார்கள்; பாடம் சொல்லித் தருகிறார்கள்.
ராம கிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியில் பாம்பு பற்றித்தான் அதிக உதாரணங்கள் வருகின்றன.
மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்தில் தன்னை நாய் என்று அறுபது முறைக்கு மேலாகப் பாடியுள்ளார். அவர் மனிதனின் உச்ச நிலையைத் தொட்டுவிட்டபோதும் நம்மைப் போன்றவர்களை பிரதிநிதித்துவம் காட்டுவதற்கு அப்படிப் பாடியுள்ளார். அவரைப் பார்த்து ஏனைய புலவர்களும், அடியார்களும் கூட அப்படிப் பாடியுள்ளனர்.
நாயைத் தமிழர்கள் இழிவான எடுத்துக்கட்டுகளாகவே பயன்படுத்துகின்றனர் மஹாத்மா காந்தியும் தெருநாய்களை கொன்றுவிடுங்களென்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
One million dogs eaten in South Korea
There are about 1,150 farms, while 1,600 restaurants sell dog meat dishes, according to the agriculture ministry. Activists say as many as 1 million dogs a year are slaughtered in South Korea.19 Jan 2024
நமக்குத்தான் நாய் அசிங்கம்; தென் கொரியர்கள் நாய்களை அடித்துச் சாப்பிடுகிறார்கள். ஒரு ஆண்டில் பத்து லட்சம் நாய்கள் அவர்களின் வயிற்றுக்குள் போகின்றன; இப்போது புதிய சட்டம் இயற்றி 3 ஆண்டுகளுக்குள் நாய் மாமிசத்தை அறவே கைவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
Starving children in Syria drink dog@s milk.
அருமையான பல உவமைகளை நாலடியார், நீதி வெண்பா
முதலிய நூல்களில் படிக்கலாம்.
மதுரை பல்கலைக்கழகத்தில் மாலை நேரக் கல்லூரியில் நான் இதழியல் JOURNALISM சொல்லிக்கொடுத்தேன் பத்திரிகைப் படிப்பில் / இதழியலில் முதல் பாடம் எது நியூஸ்? என்பதாகும். மனிதனை நாய் கடித்தால் அது நியூஸ் அல்ல ! ஆனால் மனிதன், நாயைக் கடித்தால் அது பெரிய நியூஸ். சில நேரங்களில் நடிகர் நடிகையரை நாய் கடித்தாலும் நியூஸ்த்தான் ! இது விதி விலக்கு
The phrase “When a dog bites a man, that is not news, because it happens so often. But if a man bites a dog, that is news” is often used in journalism school to illustrate the idea that news is defined as unusual and infrequent events.
நாலடியார் எழுதிய சமண முனிவர்கள் நாய் நம்மைக் கடிக்கும் அதற்காக யாராவது நாயைக் கடிப்பார்களா என்று கேட்கிறார்கள்.
****
1.நாயைக் கடிப்பவன் உண்டா?
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.– நாலடியார்
(இ-ள்.) நாய் – , கூர்த்து – கோபித்து, கௌவிக் கொளக் கண்டும் – (தம்மைக்) கவ்விக் கொள்வதைப் பார்த்தும், பேர்த்து தம் வாயால் – எதிராகி தமது வாயினால், நாய் கௌவினார் – அந்த நாயைக் கவ்வினவர்கள், ஈங்கு இல்லை – இவ்வுலகத்திலில்லை; (ஆதலால்) கீழ்மக்கள் – அயோக்கியர், நீர்த்து அன்றி – குணமுடைய தல்லாமல், கீழாய சொல்லியக்கால் – ஈனமான பேச்சுகளைப் பேசினால், மேன்மக்கள் – யோக்கியர், மீட்டு – மறுபடியும், தம் வாயால் – , சொல்பவோ – (அப்பேச்சுக்களைச்) சொல்வார்களோ, எ-று.
நாய் நம்மைக் கடித்தால் எதிரே நாமும் கடித்தல் போலக் கீழோர் வைதால் நாமும் அவரை வைதல் தகாது என்பது கருத்து.
வைதலுக்குக் காரணம் சினம். கௌவிக் கொள – இதனை வினைப் பெயர் போல் கொள்க. நீர்த்து – நீரையுடையது, நீர் – சற்குணம், கீழாய – பலவின் பெயர். சொல்ப – பலர்பால் வினைமுற்று; ப – விகுதி. ஒ – எதிர்மறை.
XXXX
2.பாவிதனந் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்
மேவுசிவன் அன்பர்பால் மேவாதே – ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே
தூயவருக் காகுமோ சொல். 63– நீதி வெண்பா
பொருள்
நாயினுடைய பால் எல்லாம் நாய்க்குத்தான்; தூயவர்களுக்கு அல்ல .அது போல தீயவர்களின் செல்வம் எல்லாம் அடித்து வாங்கும் தீயவர்களுக்கே போய்ச சேரும்; தூயோருக்குக் கிடைக்காது.
****
3.கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்
தன்மநூல் புக்காலுந் தங்காதே – சன்மமெலும்(பு)
உண்டு சமிக்கும்நாய் ஊண்ஆவின் நெய்யதனை
உண்டு சமிக்குமோ ஓது. 80– நீதி வெண்பா
தோலையும் எலும்பையும் சுவைத்து உண்ணும் நாய்க்கு, பசு நெய்யால் செய்யப்பட இனிப்புகள் பிடிக்குமா? பிடிக்காது. அது போல, தீயோரின் காதில் தர்ம நூல்களிலுள்ள அறிவுரைகள் ஏறாது.
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு &&&& யைத் தின்னத்தான் போகும் என்னும் பழமொழியை இது நினைவு படுத்தும்.
*****
4.குழந்தைகள் = நாய்கள் !!
ஆசையெனும் பாசத்தால் ஆடவர்தஞ் சிந்தைதனை
வீசுமனை யாந்தறியில் வீழ்த்தியே – மாசுபுரி
மாயா மனைவியரா மக்கள் மகவென்னும்
நாயாற் கடிப்பித்தல் நாடு. 88- நீதி வெண்பா
ஆசை எனும் பாசக் கயிற்றால் ஆண்களை மாயா வேஷப் பெண்கள் இல்வாழ்க்கை எனும் தூணில் கட்டி , குழந்தைகளைப் பெற்று அந்த நாய்களால் கடிக்கச் செய்வதை ஆண்கள் சிந்திப்பார்களாகுக.
*****
5.உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்வால் – பற்றி
நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல் உண்டோ நவில். 11 —நீதி வெண்பா
பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு ஆற்று நீரைக் கடக்கலாம். நாயின் வாலைப் பிடித்துக்கொண்டு யாராவது நதியைக் கடப்பார்களா; கடக்கமாட்டார்கள். அது போல , வாழ்க்கை சிறக்க, சுற்றம் புடைசூழ நல்ல மனைவியுடன் வாழ்வதே சிறந்தது நாயின் வால் – மனைவி அல்லாத பெண்கள்.
****
6.வேசியரும் நாயும் வித்நூல் வயித்தயரும்
பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய்! – பேசிலொரு
காரணந்தான் இன்றியே கண்டவுட னேபகையாம்
காரணந்தான் அப்பிறப்பே காண். 65- நீதி வெண்பா
பொருள்
வேசியர், டாக்டர், , பார்ப்பனர், கோழிகள் நாய் , சட்ட நூல் ஆகியன காரணமே இல்லாமல் பகைவர் ஆவர். இதற்கு அவர்களது பிறப்பே காரணம்
(இந்தப் பாடலுக்கு பொருள் புரியவில்லை. சிலர் வியாக்கியானம் யூகமே )
—subham—#
tags- நாய், வால் , பால், பிள்ளைகள், நல்ல மனைவி, பசுவின் வால் , ஆற்றைக்கடக்க , நெய் இனிப்பு , நாலடியார், நீதி வெண்பா