ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்! (Post No.13,714)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.714

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்!

ச. நாகராஜன்

பன்னிரண்டாவது ‘வைஷ்விக் ஹிந்து ராஷ்ட்ர மஹோத்ஸவம் மிகச் சிறப்பாக தனது 12வது வருடத்தை முடித்துள்ளது.

ஹிந்து ராஷ்ட்ரம் மிக விரைவாக நிறுவப்படும் என்ற நம்பிக்கையை இந்த பன்னிரண்டு வருடங்களில் இந்த சங்கம் ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீ ராமரது ஆலயத்தை அயோத்தியாவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது இதற்கான அறிகுறியாகும்.

ஹிந்து நாகரிகமும் இந்தியாவும் நெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்கப்படுவதே ஆகும்.

இந்தியாவை 2047க்குள் அதாவது சுதந்திரம் கிடைத்த நூறு அண்டுகளுக்குள் இஸ்லாமிய நாடாக ஆக்கத் திட்டமிட்டு செய்யப்படும் சதிகள் அனைவரும் அறிந்ததே.

‘காலிஸ்தான்’ தலைவராக இயங்கும் அம்ரித்பால் சிங் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடனும் காஷ்மீரத் தீவிரவாதிகளுடனும் இணைந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து ஹைதராபாத் பாக்யநகர் தொகுதியிலிருந்து அஸாவுதீன் ஓவைசி பதவி ஏற்கும் போது பாலஸ்தீன் வாழ்க என்ற கோஷத்தை தைரியமாக எழுப்பியுள்ளார்.

இவர், ‘ஆந்திராவில் 51 சதவிகிதம் முஸ்லீம் ஜனத்தொகை வந்து விடும். 50 சதவிகிதம் என்றால் அது நூறு சதவிகிதம் தான்’ என்று  மிரட்டியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. அதாவது 51 சதவிகிதம் எட்டியவுடம் மீதி 49 சதவிகிதத்தினர் ஒன்று பயமுறுத்தப்படுவார்கள் அல்லது இஸ்லாமுக்கு வலிய மாற்றப்படுவார்கள் என்றே இதன் பொருள் என்று கொள்ளலாம்.

ராகுல் காந்தி அவர்களோ ஹிந்துக்களை, “வன்முறை மக்களது கூட்டம்” என்று கூறியுள்ளது கவலைப்பட வைத்துள்ள ஒரு அம்சம்.

ஆக இந்த நிலையில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஹிந்து ராஷ்ட்ர மஹாநாடு கோவாவில் போண்டாவில் ஶ்ரீ ராம்நாத் தேவஸ்தானில் 2024, ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 30 முடிய நடைபெற்றது.1000 பிரதிநிதிகள் இந்தியாவின் 26 மாநிலங்களிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர், காணா நேபாள் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வந்து இதில் பங்கேற்றனர். பல விசேஷ நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.

ஹர ஹர மஹாதேவ என்ற கோஷத்துடன் முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவையும் நேபாளத்தையும் ஹிந்து ராஷ்ட்ர என்று அறிவிக்கப்பட வேண்டும். செகுலர் மற்றும் சோஷியலிஸ்ட் என்ற வாசகங்கள் அரசியல் சாஸனத்தின் முன்னுரையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

காசி மற்றும் மதுரா கோவில்கள் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை மிகக் கடுமையாக அமுல் படுத்த வேண்டும்.

பசு வதையை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்.

Places of Worship’ மற்றும் WAQF சட்டங்களை நீக்க வேண்டும்.

ஜனத்தொகை கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காஷ்மீர் ஹிந்துக்களுக்கான புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும்.

ஶ்ரீ ராம் சேனா அமைப்பைத் தடை செய்த கோவா அரசு அதை நீக்க வேண்டும்.

ரோஹின்யா மற்றும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை அகற்ற வேண்டும்.

OTT Platforms குறித்த சரியான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஹிந்து ராஷ்ட்ரம் குறித்த ஒரு தெளிவான வடிவமைப்பும் செயல் திட்டமும் உருவாக்கப்பட்டது.

ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களிலிருந்து 100 மீட்டருக்குள் மதுபான விற்பனை செய்யலாம் என்று கோவா அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.  கோவா அரசு உடனடியாக இதை ரத்து செய்து விட்டது.

இப்போது 710 ஆலயங்களில் எந்த வித உடை அணிந்து வர வேண்டும் என்பது அமுல்படுத்தப்பட்டு விட்டது.

இன்னும் 14000 ஆலயங்கள் ஒரே மஹா சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் செகுலர் அரசு தன் கைவசம் நான்கு லட்சத்து ஐம்பதினாயிரம் கோவில்களை வைத்துள்ளது.

இவற்றை அரசின் கையிலிருந்து விடுவித்து நல்ல பொறுப்பான ஹிந்து அமைப்புகள் வசம் நிர்வாகத்திற்காகத் தர வேண்டும்.

அர்ஜுனன் உள்ளிட்ட பாண்டவர் வசம் அதிக சேனை இல்லை – கௌரவர்கள் கொண்டிருந்தது போல! ஆனால் அவர்கள் வசம் தர்மம் இருந்தது.

அதே போல ஹிந்து ராஷ்ட்ர அமைப்பை மேற்கொள்வோரிடம் அதிக பலம் இல்லை தான்; ஆனால் தர்மம் இருக்கிறது.

தர்மம் வெல்லும்!*

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ இதழின் 92வது தொகுதி 18வது இதழில் வெளியாகியுள்ள ‘ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்’ என்ற கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்ட விஷயங்கள் மேலே தரப்பட்டுள்ளது.

நன்றி: TRUTH 16-8-2024 வார இதழ்

**************

Leave a comment

Leave a comment