
Post No. 13,719
Date uploaded in London – 28 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பணம் அல்லது செல்வம் பற்றிய கருத்துக்கள் உலகம் முழுதும் ஒன்றுதான்!
பணம் பத்தும் செய்யும்; பணம் இல்லாதவன் பிணம் ; பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகம் இல்லை; பணக்காரன் பின்னால் பத்துப் பேர் பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர் – என்ற கருத்துக்களை ஷேக்ஸ்பியரும் சொல்கிறார். ஆயினும் தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் இந்துக்கள் மீண்டும் ,மீண்டும் சொல்லும் சில கருத்துக்கள் ஷேக்ஸ்பியரில் இல்லை . அவையாவன
1.செல்வம் சகடக்கால் போல சுழன்று கொண்டே இருக்கும்; அது ஓரிடத்தில் நிற்காது .
2.செல்வம் உடையோர் தான தர்மம் செய்ய வேண்டும் ; அது புண்ணியம் .
3.பணத்தினால் முக்தியை அடைய முடியாது.
4.பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்.
5.பணம் என்றாலே தொல்லைதான்
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்துக்களின் உயர்ந்த சிந்தனைகள் ஷேக்ஸ்பியரில் இல்லை.
ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளை திருக்குறள் , நாலடியார் , நீதி வெண்பா முதலிய பாடல்களுடனும் தமிழ் சம்ஸ்க்ருத பழமொழிகளுடனும் ஒப்பிடலாம்.
****
இதோ ஷேக்ஸ்பியரின் பொன் மொழிகள்

மச் அடோ அபவுட் நத்திங் என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் இன்னும் ஒரு நல்ல பொன்மொழியை உதிர்க்கிறார் :
நல்ல உருவம், நல்ல வடிவு இருந்து பையில் பணமும் இருந்துவிட்டால் உலகத்தில் எந்தப் பெண்ணையும் வாங்கிவிடலாம் ; ஆனால் அவள் தயவும் வேண்டும் —
—Beatrice, Much Ado About Nothing, Act 2 Scene 1
****
பணம் வந்தால் ஒருவனின் குணங்களும் மாறிவிடும் ; அதை ஆங்கிலப்புலவனும் நாடக ஆசிரியருமான ஷேக்ஸ்பியரும் சொல்கிறார்
நான் பிச்சைக்காரனாக இருக்கையில் பணக்காரனை ஆவதில் பாவம் ஏதுமில்லை என்பேன் பணக்காரன் ஆகிவிட்டாலோ பிச்சை எடுப்பது பாவம் என்பேன்; தீயது என்பேன் —Bastard, The Life and Death of King John, Act 2 Scene 1
லக்ஷ்மீவந்தோ ந ஜாநந்தி ப்ராயென பரவேதனாம்
சேஷே தராபார க்லாந்தே சேதே நாராயணஸ் சுகம்
—சம்ஸ்க்ருத சுபாஷிதம்
பொருள்
செல்வந்தர்களுக்கு பிறருடைய வேதனைகள் புரியாது ; பூமியையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் என்னும் பாம்பின்மீது நாராயணன் சுகமாகத் தூங்குவது போல.
ஐயமிட்டு உண் என்று சொன்ன அவ்வையாரே ஏற்பது இகழ்ச்சி என்று சொன்னது நம் நினைவுக்கு வரும்
*****
இந்த மஞ்சள் வர்ண அடிமை எல்லா மதங்களையும் உடை ப்பான் ; குஷ்டரோகிகளையும் புகழ வைப்பான்; பெரிய ஆட்களுடன் சம நிலையில் உட்கார வைப்பான்; வி தவைகளையும் திருமணம் செய்ய வழிவகுப்பான் — டிமோன்ஸ் ஆப் ஏதென்ஸ் நாடகம்
– Power of gold in Timons of Athens
இதை விட தங்கத்தின் செல்வத்தின் சக்தியை யாரும் அழகாகச் சொல்ல முடியாது; இவைகளைத் தமிழ் பழமொழிகளில் காண்கிறோம்.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)
பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே!
காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்
*****
தங்கம் இருந்தால் எங்கும் நுழைய அனுமதி உண்டு — என்று சிம்பலின் Cymbeline என்ற நாடகத்தில் ஒரு வசனம்!
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி
பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்
****
பணம் முன்னே சென்றால் பின்னே வழிகள் திறக்கும்—
இது மெரி வைவ்ஸ் ஆப் விண்ட்சர் Merry Wives of Windsor
என்ற நாடக வசனம்
இதை நாம் வள்ளுவரின் குறளுடன் ஒப்பிடலாம்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)
பொருள்
பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.
****
கடன் வாங்காதே கடன் கொடுக்காதே– என்ற கருத்து ஹாம்லெட் நாடகத்தில் வருகிறது ; இது நல்ல புத்திமதி
Neither a borrower nor a lender be- Hamlet
இதை பஞ்ச தந்திரம் என்ற உலகப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூல் பின்வருமாறு சொல்கிறது:
பணமே நீ ஒரு தொல்லை
உன்னை சம்பாதிப்பதும் கடினம்;
பாதுகாப்பதும் கடினம் ;
பணம் என்றாலே தொல்லைதான் ;
ஆரம்பமாவதும் பொன்னுக்குள்ளே
அது ஆடி முடிவதும் பொன்னுக்குள்ளே
A trouble to acquire; a trouble to protect
A trouble if it is lost; a trouble if it is spent
Money is nothing but trouble
Alas ! from beginning to end.
–Panchatantra Fables
பணம் இருந்தாலோ இல்லாட்டாலோதானே இந்தக் கடன் கொடுக்கும், வாங்கும் பிரச்சினைகள் வரும்!
****

சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-
கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.
அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி
ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659
பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.
****
செல்வம் என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை (248) குறளில் கண்டோம்.
****
1157. ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.
****
1. “But the comfort is, you shall be called to no more payments, fear no more tavern-bills.”— First Gaoler (Jailer), Cymbeline, Scene 5 Act 4
செத்துப்போனால் ‘பில்’களைக் கட்டும் தொல்லை இராது என்பதும் சிம்பலின் நாடகத்தில் வருகிறது .
மரணம் அடைபவனுடன் செல்வம் வராது என்ற இந்துமதக் கருத்தினுக்கு இணையானது இது.
*****
ஷேக்ஸ்பியர் எச்சரிக்கை!
அவருடைய அப்பா நல்ல பணக்காரன்தான் ஆயினும் யாராவது நரகத்தைக் கல்யாணம் கட்டுவானா ?
(அந்தப் பெண் ஒரு Shrew சிடுமூஞ்சி, அடங்காப்பிடாரி).
“Think’st thou, Hortensio, though her father be very rich, any man is so very a fool to be married to hell?” — Gremio, Taming of the Shrew, Act 1 Scene 1
****
நாலடியார் பாடல்
அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை. பாடல்-281
காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.
****
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன் — தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.
விஷ்ணுவே வந்தாலும் கையில் காசு இல்லாவிடில் வேசிகள் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.
*****
ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காண மிலாதார் கடுவனையர் — காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.
வேசிகளுக்கு காசில்லாதவன் விஷம்; ஆனால் செக்கிழுத்து எண்ணெய் நாற்றத்துடன் வந்தாலும் காசு கொடுத்தால் கட்டி அணைப்பார்கள்.
*****
ஆதி சங்கரர்
பஜ கோவிந்தம் நூலில் ஆதி சங்கரர் விளம்பும் உயரிய கருத்துக்களை ஷேக்ஸ்பியரில் காண முடியாது
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு. சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை. நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான். அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.
****
अमृतत्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः ।
ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥ 7 ॥
விவேக சூடாமணியிலும் ஆதி சங்கரர் இதைச் சொல்கிறார்
பணத்தினால் முக்தியை அடைய முடியாது என்று வேதங்களும் விளம்புகின்றன. பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் இரன்டு மனைவிகளை உடைய யாக்ஞவல்க்ய மகரிஷி, மைத்ரேயி என்ற மனைவியிடம் இதை சொல்கிறார்.
—subham—-
TAGS- தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 7, பணம், செல்வம், பெண்கள், தங்கம், வேசிகள்







