Post No. 13,700
Date uploaded in London – 23 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியன்! (Post No.13,700)
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பிரசாரகர் ஹென்றிச் ராத் 400 ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்க்ருத மொழியைக் கற்று சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியன் என்ற பெருமைதனைப் பெற்றார்.
GERMAN SCHOLAR HEINRICH ROTH 1620-1668
JESUIT MISSIONARY, FIRST EUROPEN TO LEARN SANSKRIT
அவர் ஜெர்மனியில் பவேரியா பிராந்தியத்தில் டில்லிஞ்சன் என்ற ஊரில் 18-12-1860-ல் பிறந்தார். அப்போது முப்பது ஆண்டு யுத்தம் வெடித்தது
DILLINGEN ON 18-12-1860
THIRTY YEARS WAR
அவர் ஆக்ஸ்பர்க் என்னும் ஊரில் ஒரு வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். டில்லிஞ்சன் பல்கலைக்கழகத்தில் படித்தார் சுவீடன் நாட்டு ராணுவத்துக்குப் பயந்து இன்ஸ்பிரக் நகருக்கு ஓடினார். ஒரு சிப்பாய் அவரைத்தாக்கி அரை உயிரும் குறை உயிருமாக விட்டான்.
‘கடவுளே என்னை காப்பாற்றினால் நான் மதப் பிரசாரகராக மாறுவேன்’ என்று உறுதிமொழி எடுத்தார். 25-10-1639-ல் சொசைட்டி ஆப் ஜேசைட்டில் சேர்ந்தார். SOCIETY OF JUSUITS
1650-ல் எத்தியோப்பியா நாட்டுக்குப் பயணமானார்; கத்தோலிக்க பிரச்சாரகர்கள் உள்ளே வரக்கூடாது என்று அந்த நாடு தடை விதித்தது. அங்கிருந்து இந்தியாவிலுள்ள கோவாவுக்கு அவருடைய சகாவுடன் வந்தார். அது போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்தது.அங்கிருந்தவாறே கன்னட, பாரசீக, உருது மொழிகளையும் கற்றார். பின்னர் ஆக்ராவுக்குச் சென்று அங்கிருந்த கிறிஸ்தவ கல்லூரிக்குத் தலைவர் ஆனார்.
ஆக்ராவில் சம்ஸ்க்ருதம் கற்று பிராமணர்களுடன் உரையாடினார்.
சம்ஸ்க்ருதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அவர் இரண்டே ஆண்டுகளில் ஒரு இலக்கணப் புஸ்தகத்தையும் எழுதினார். பிற்காலத்தில் இதை மாக்ஸ்முல்லர் புகழ்ந்தார். அதில் லத்தீன் மொழியில் விளக்கம் கொடுத்திருந்தார். பாணினியின் உலகப் புகழ்பெற்ற இலக்கண நூலை அடிப்படையாக வைத்து எழுதி இருந்தார் அதை அவர் ரோமாபுரிக்கு எடுத்துச் சென்றார்; ஆஸ்திரிய மன்னரும் அதை வெ ளியிட்டாக வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆனால் அந்த நூல் வெளியாகவில்லை. ‘ராத்து’க்கு நேரமே கிடைக்கவில்லை என்று காரணம் கற்பிக்கப்பட்டது.
ராத் சம்ஸ்க்ருத மொழிமட்டுமின்றி அதிலுள்ள இலக்கியம், இந்துமத தத்துவங்கள் ஆகியவற்றையும் கற்றார். இதனால், அவருடைய சம காலத்திய கிறிஸ்தவ பிரச்சாரகர் அதனேசியஸ் கிர்ச்சர் ATHANASIUS KIRCHER அவ்வப்போது அவரைக் கலந்து ஆலோசித்தார்
வாத்திகன் நூலகத்தில் , VATICAN LIBRARY ராத் காப்பி எடுத்த பஞ்ச தத்வ பிரகாச PUNCA TATVA PRAKASHA BY VENI DATTA உள்ளது; இதை யாத் தவர் சம்ஸ்க்ருத அறிஞர் வேணி தத்தா ஆவார். இது செய்யுள் வடிவிலுள்ள சம்ஸ்க்ருத அகராதி; அமரகோஷம் போன்ற நிகண்டு நூல். பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வேதாந்த சாரத்தையும் VEDANTA SARA , ராத் படி எடுத்தார்.
கிர்ச்சர் எழுதிய ஒரு புஸ்தகத்தில் KIRCHERS’S BOOK CHINA ILLUSTRATA விஷ்ணுவின் தசாவதாரம் DASAVATAR பற்றியும் ராத் எழுதினார். அந்தப் புஸ்தகத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
1662 -ல் இரண்டு கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் பீகிங் PEKING/BEIJING நகரிலிருந்து லாஸ , காத்மாண்டு வழியாக பனிபடர்ந்த இமய மலையைக் கடந்து ஆக்ரா நகருக்கு வந்தனர். ஒருவர் களைப்பால் செத்தே போனார். மற்றோருவர் ஜோஹன்னஸ்/ யோஹன்னஸ் க்ரூபர் JOHANNES GRUEBER
ஆவார். அவருக்குத் துணையாக ரோமாபுரி வரை ராத் சென்றார். சீனாவில் 1307- ஆண்டிலேயே கிறிஸ்தவ அமைப்பு தோன்றிவிட்டது அங்கு க்ரூபர் வானவியல் அறிஞராகப் பணியாற்றினார் அவர்தான் இப்போது சீனா கைப்பற்றிவிட்ட திபெத் பற்றி முதல் முதலாக ஐரோப்பாவுக்குத் தகவல் தந்தார். 40,000 கிலோ மீட்டர் களுக்கு கால் நடையாகவே சுற்றி வந்தார் .
ராத்தும் க்ரூபரும் நில வழியாக ரோமுக்குப் பயணம் செய்து ஓராண்டுக்குப் பின்னர் வந்து சேர்ந்தனர்
இதற்கு காரணம் என்னவென்றால் போர்ச்சுகீசியர் பிடிவாதமாக கடல் வழியாக அனுப்பிய 600 பாதிரிமார்களில் 500 பேரைக் கடற்கொள்ளையர்கள் கொன்றதாகும்
ராத் , க்ரூபர் ஆகிய இருவரையும் ரோம், மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பியது. அவர்கள் ரஷ்யா, பாரசீகம் வழியாக புறப்பட்டனர் ரஷ்யாவில் ஒரு புரட்சி வெடித்ததால் துருக்கிக்கு ஓடினர். அங்கே இஸ்தான்புல் நகரில் நோய்வாய்ப்படட்ட க்ரூபபர் ரோமுக்குத் திரும்பினார் ராத் மட்டும் இந்தியாவுக்கு மீண்டும் வந்தார்.
அவர் மறதியாக வாத்திகன் நகரிலேயே சம்ஸ்க்ருத காகிதங்கள் சுவடிகளை விட்டு வந்ததால் அவை அழியாமல் தப்பிப்பிழைத்தன. லேடன் நகரில் அவை 1988-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது அதில் சம்ஸ்க்ருத இலக்கண நூலும் அடக்கம். தன்னந்தனியாக துருக்கி, பாரசீகம்/ ஈரான் , ஆர்மீனியா வழியாக இந்தியாவுக்கு வந்த ராத், ஆக்ராவில் இரண்டு ஆண்டுகளுக்கு இருந்து DIED IN 1688 IN AGRA 1688-ல் உயிர்நீத்தார் .
48 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் ; ஆயினும் வரலாற்றில் அழியாத இடம்பெற்றார்.
–சுபம்—
TAGS- சம்ஸ்க்ருதம் கற்ற, முதல் ஐரோப்பியன் , சம்ஸ்க்ருத இலக்கணம், GERMAN SCHOLAR, HEINRICH ROTH 1620-1668, ஜெர்மனி, ,கிறிஸ்தவ பிரச்சாரகர், ஹென்றி ராத்









